ஹேராம் படத்தில் வரும் பிரிட்டீஷ் தொல்பொருள் ஆராய்ச்சி இயக்குனரான Mortimer Wheeler ஒரு நிஜ வரலாற்று ஆளுமை, அவரின் மனைவி Kim Collingridge ,
இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சியாளர்,பிரிட்டிஷ் இந்தியாவில் 1944-1948 ஆண்டுகளில் ஹரப்பா, மொகஞ்சதாரோ, மற்றும் அரிக்கமேடு ( பாண்டிச்சேரி அருகில்) போன்ற ஊர்களில் தொல்பொருள் ஆராய்ச்சியை துவக்கி அகழ்ந்த முன்னோடி,
சக ஊழியர்களை கிண்டல் செய்வதும் வம்பிழுப்பதும், அழகிய பெண்களிடம் காதலில் விழுவதும் ,மண் வெட்டும் கூலிகளிடம் தமிழ் இந்துஸ்தானி உள்ளிட்ட அவர்களின் மொழியில் கட்டளையிடுவதும்,அவர்களுக்கு கூலியைவிட ஒரு ரூபாய் அதிகம் தந்து அவர்களை பணி ஊக்கத்துடன் வைப்பதும் இவரின் குணாதிசயங்களாம்.
இயக்குனர் கமல்ஹாசன் இந்த கதாபாத்திரங்களுக்கு character study மற்றும் casting study செய்தார், நிஜ ஆளுமைகளுக்கும் இந்த கதாபாத்திரங்களைச் செய்த நடிகர்களுக்கும் உள்ள உருவ ஒற்றுமைக்கு மெனக்கெட்டதைப் பாருங்கள்,
ஹேராம் படத்தில் இந்த wheeler கதாபாத்திரத்தைச் செய்தவர் Lewis Elbinger என்ற அமெரிக்கர், இவர் கவிஞர், எழுத்தாளர்,பன்மொழி வித்தகர் , அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர், படத்தில் இவர் மனைவிக்கு சிறிய தோற்றம் என்பதால் credit இல்லை, இவரை எப்படி? இயக்குனர் தேடிப்பிடித்து ஹேராம் படத்தில் cast செய்தார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
https://en.wikipedia.org/wiki/Mortimer_Wheeler
https://www.facebook.com/lewis.elbinger
#மார்டைமர்_வீலர்,#ஹேராம்,#கமல்ஹாசன், #kamalhaasan, #heyram,#perfectionist