நீங்கள் உங்கள் வீட்டின் மாடியில் இது போல தற்காலிக கூரை அமைத்திருந்தால் கோடை காலத்தில் அங்கு சூடு தகிக்கும், எத்தனை மின் விசிறிகள், ஏசி போட்டாலும் உள்ளே இருக்க முடியாது,
அதற்கு இந்த எளிய தீர்வு உள்ளது , இது போல thermal foil insulation sheathing wraps 4'x20' அளவுகளில் கிடைக்கிறது, அதன் அடியில் விலை குறைந்த கம்பி மெஷ் வலை கொண்டு கூரையின் rafter களில் பிணைத்து கட்டி விட்டால் போதுமானது,
இது குறைந்த செலவில் உங்கள் வீட்டு தற்காலிக கூரையின் உள்ளே வெப்பம் இறங்காமல் தடுக்கும் வழி, இது போல அமைக்க கூரையுடன் சேர்த்து 150₹ / சதுர அடி வரலாம்,
நீங்கள் உங்கள் வீட்டிற்கு அமைக்கும் சாதாரண shed கூட 100 ₹ முதல் 125₹ வந்து விடுகிறது,
thermal insulation கொண்ட sandwich panel roofing ற்கு இது நல்ல மாற்றாக இருக்கும், sandwich panel roofing அமைக்க குறைந்தது 350₹ / சதுர அடி வரலாம்,
சிலர் மாட்டுக் கொட்டகைக்கு கூட ஏசி ,மின்விசிறி அமைக்கின்றனர் என்கையில் மனிதர்கள் புழங்கும் மொட்டைமாடி shed களில் இது போல thermal insulation sheathing அமைப்பது தார்மீக பொறுப்பும் கூட.
இம்முறையில் aesthetics கிடைக்காது ஆனால் functional ஆக இருக்கும், உங்கள் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்யும், இது போல உள்ளது உள்ளபடியே அழகு என்ற பாணியை architecture terminology ல் brutalism என்று வகைப்படுத்துவர்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#கூரை,#shed,#roofing,#தகர_கொட்டகை,#canteen_roof,#labour_accommodation,#temporary_roof,#insulation,#thermal_insulation, #sheathing,#foil_insulation, #brutalism