ஒரு பழைய வீட்டை கரையான்கள் எப்படி கண் முன்னே அழிக்கிறது பாருங்கள்.
கட்டிடம் கட்டுகையில் மண்ணில் நேரிடையாக படும் எந்த காங்க்ரீட் அடித்தளம் footing, pedestal, plinth beam sill beam, மண்ணை நிரப்பி கூராடுகிற பேஸ்மெண்ட் உட்புற சுவர்கள் வெளிப்புற சுவர்கள் மீதும் முறையாக proffessional அமர்த்தி pest control செய்ய வேண்டும்., அப்படி செய்யாவிட்டால் தரைக்கு கீழே கரையான்கள் புற்று கட்டி டைல்களுக்கு கீழே வெற்றிடம் உருவாக்கி base concrete ற்கு கேடு விளைவித்துவிடும்,சுவர்களில் கூட மெல்ல பரவி அரிக்கத்துவங்கும்.
உங்கள் வீட்டை மாதத்திற்கு ஒரு முறை முழுதாக சுற்றி வந்து நோட்டமிடுங்கள், அங்கு கரையான் புற்று, எறும்பு புற்று, குளவிக்கூடு இருந்தால் அங்கு கரையான் தாக்குதல் உள்ளது என உணருங்கள்,
இதை கவனிக்காமல் விட்டால் சுவரின் சிமெண்ட் பூச்சை குடைந்து , பிணைப்புக் கலவையைக் குடைந்து, செங்கல்லைக் குடைந்து கரையான்கள் உள்ளே சென்று கொண்டே இருக்கும், ஒரு மரக்கதவு,ஒரு மர ஜன்னல் ,rafter என விட்டு வைக்காமல் குடைந்து துளையிட்டு அரித்து விடும்.
இந்த கரையான் துளைகள் ஒரு சுவாச குழாய் போல ஒரு சுரங்கம் போல அமைந்திருப்பதால் பெரு மழைக்காலத்தில் இத்துளை வழியே நீர் புகுந்து சுவர்களை ஓதம் பாய்ச்சி நாசம் செய்து விடும், இதற்கு நல்ல pest control நிபுணர்களை அழைத்து வந்து உலக சுகாதார நிறுவனம் WHO அங்கீகரித்த பூச்சி மருந்து அடித்து பாதுகாக்க வேண்டும்.
பர்மெத்ரின் டஸ்ட் (permethrin dust )என்ற பூச்சிக்கொல்லி மருந்து உடனடி பலனை தரக்கூடியது. இது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி என்பதால், இதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு காணப்படக்கூடும்.
இது கரையானை மட்டும் அழித்திடாமல் எறும்பு, குளவி, பை புழுக்கள், தரை வண்டுகள் என பலவற்றையும் அழிக்கிறது.
இந்த கெமிக்கல், வீட்டு முதலாளிகளுக்கும், தொழில் செய்பவருக்கும் பிடித்தமான ஒரு கெமிக்கலும் கூட.
அர்செனிக் டஸ்ட் (arsenic dust )இந்த கெமிக்கலை ஒரு கரையான் சாப்பிட, இதனால் மற்ற கரையான்களுக்கும் அது உணவாகி உயிரை விடக்கூடும்.
வெப்ப நிலை குறைவான இடத்தில் கரையான் வாழ்வது அரிது. வெப்பநிலையானது 20 டிகிரி ஃபேரன்ஹீட்டாக இருத்தல் அவசியம். இந்த வெப்ப நிலையை பெறுவதற்கு நீர்ம நிலையில் இருக்கும் நைட்ரஜன் (liquid nitrogen spray )கொண்டு ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டு தோட்டத்தில் மண் குழாய் தென்பட்டால் உடனே தண்ணீர் பீய்ச்சி அடித்து அந்த கரையான் புற்றைக் கலைப்பது நல்லது.
கல் உப்புக்கு கரையானை அழிக்கும் குணம் உண்டு.
ஒரு ஜாடியில், உப்பு மற்றும் சுடு நீரை சம அளவில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள், அந்த நீரைக் கொண்டு கரையான் புற்று காணப்படும் இடத்தில் நன்கு ஸ்ப்ரே செய்யுங்கள். இதனால், கரையான் வறண்டு வலுவிழந்து போகும்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
#கரையான்_புற்று,#குளவி_கூடு,#borer, #bug,#termite,#pest_control