இங்கே பம்மல் தெருக்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது JCB எந்திரங்கள் தோண்டிய பெருவாரியான மண்ணை திறந்தவெளிக் சாக்கடைகளில் தள்ளியதால் எல்லா சாக்கடைகளுமே தளும்பி வழிவது கண்கூடு,
இணைப்பு படத்தில் உள்ளது போல பழைய தாழ்வான வீடுகளின் உள்ளே waste outlet வழியே சாக்கடை நீர் உள்ளே புகுந்து விடுகிறது,
இது போல எங்கள் பழைய அடுக்ககத்திலும் சாக்கடை நீர் புகுந்துவிட்டது, தாம்பரம் மாநகராட்சிக்கு மின்னஞ்சல் புகார் எழுதியும் பலனில்லை, சுகாதார ஊழியர்களிடம் சொல்லியும் பயனில்லை,இது எங்கள் வேலையில்லை என நழுவிவிடுகின்றனர், பம்மலில் தெருவாசிகள் வீட்டுக்கு ஒரு காரை வீட்டின் வெளியே , சாக்கடைக்கு மேலே கருங்கல் மேடை அமைத்து நிறுத்தி உள்ளதால் , இந்த மண்ணை அள்ள முடியவில்லை , கரண்டி உள்ளே போய் மண்ணை கிளற முடியவில்லை என புலம்புகின்றனர் .
எனவே இது போல 6" dia heavy duty ball valve வாங்கி வந்து பொருத்தி பிணைத்து பூசினோம், இதன் மூலம் கழிவுநீர் உள்ளே வருவது சுத்தமாக நின்று போனது,air tight, சிறு கசிவும் கூட இருக்காது, மிகவும் செலவு குறைந்த வழி இது ,
சாக்கடை நீர் உட்புகும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் இது போல செய்து பயன் பெறவும், மாநகராட்சியில் எப்போது சாக்கடையை ஓடும்படி சரி செய்கிறார்களோ அப்போது இந்த lever ஐ நிரந்தரமாக திறந்து வைக்கலாம், இந்த ball valve இருப்பதால் சாக்கடை பெருச்சாளி உள்ளே நுழையாது.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
#sustainability ,#sustainable_living,#go_green,#refurbished,#table_side_unit