இன்று உறவினர் (சங்கி) வீட்டுக்கு போயிருக்கையில் துபாய் மன்னர்களால் , அவர்களது தொலைநோக்கால் இன்று நான் அடைந்த பொருளாதார தன்நிறைவை ஆத்மார்த்தமாக சொன்னேன்.
இறைவன் ஒருவனே , அவரவர் வழிபாடு முறை வேறு, அனைவரும் இறைவன் பிள்ளைகள், இன்று மதநல்லிணக்கமே பிரதானம், என் வாடிக்கையாளர்கள் , என் மனைவி வாடிக்கையாளர்கள் அநேகம் இஸ்லாமியர், கிருத்துவர் அவர்கள் பேதம் பார்த்து எங்களுக்கு தொழில் வாய்ப்பு தருவதில்லை, நாமும் அதுபோல பேதம் பார்க்கக்கூடாது என்றேன்.
மெதுவாக அவர் துவக்க காலத்தில் இஸ்லாமிய வியாபார நண்பர்களால் பேருதவிகள் பெற்று வாழ்வில் உயர்ந்ததை சொன்னார், அவரின் இதய அறுவை சிகிச்சைக்கு அவர்கள் செய்த தொடர் துவாவை மெல்ல நினைவு கூர்ந்தார், தொக்காக உதவவும் செய்வார்கள், அறுக்கவும் செய்வார்கள் என முடித்தார்.
நான், அது தவறு, அவர்கள் எப்படி உங்களுக்கு அன்பு காட்டினார்களோ நீங்கள் அதை பன்மடங்காக திருப்பி தரவேண்டும், இப்படி விட்டுத் தந்து பேசினால் நாம் அந்த அன்புக்கு தகுதியானவரில்லை என்றே பொருள் ,
நிபந்தனையற்ற மதநல்லிணக்கமே இக்கணத்தின் தேவை, என்று விளக்கினேன்.,கடைசியில் வழிக்கு வந்து விட்டார், இப்படி ஒவ்வோருவரும் மெய்யாக நினைத்துப் பார்த்தாலே போதும், இங்கு தமிழகத்தில் மதவியாபாரம் நடக்காது.