14 வருடங்களுக்கு முன்னர் தாஜ்மஹால் சென்றிருந்த போது கண்ட காட்சி இன்னும் மறக்கவில்லை, மாலை கருக்கலில் அங்கிருக்கும் பெர்ஷியன் நீரூற்றுக்கள் நிறுத்தி அணைக்கப்பட்டது, காவல் ஊழியர் நால்வர் இந்த பெர்ஷிய நீரூற்றுக்களில் இருக்கும் 96 பித்தளை nozzle களையும் கர்ம சிரத்தையுடன் கழற்றி ஒரு பையில் இட்டு security அறையில் ஒப்படைத்தனர், (4 நீர் பாதைகள் x ஒரு பாதையில் 24 எண்ணிக்கை =மொத்தம் 96)
விபரம் கேட்கையில் இந்த பிரத்யேக பித்தளை nozzles ஐ அதன் புராதான மதிப்பிற்காக திருடி ஏலம் விடுவதற்கென்றே புது டெல்லியில் ஒரு art theives கும்பல் செயல்படுகிறதாம், இந்த பிரத்யேக பித்தளை nozzles ஒன்று காணாமல் போனாலும் அதை கடையில் மீண்டும் வாங்கி பொருத்துவது சிரமம், அதே போல தரத்தில் செய்ய நிறைய செலவு பிடிக்கும் , பாதுகாவலர்கள் இதற்கு முழுப்பொறுப்பு என்பதால் ஒவ்வொரு மாலையும் அதைக் கவனமாக கழற்றி பூட்டிவிட்டு மறுநாள் காலை அதை மீண்டும் பொருத்தி நீரூற்று பரிசோதனை செய்கிறார்களாம்.
இந்த நீரூற்றுகள் 1903 ஆம் ஆண்டு முதல் மின்சார மோட்டாரில் தான் இயங்குகின்றன, தாஜ்மஹால் கட்டப்பட்ட 1631 ஆம் ஆண்டு முதல் முகலாயர் ஆட்சியில் மின் நீரூற்று மோட்டார்கள் புழக்கத்தில் இல்லாத நிலையில் பெரிய தாமரைக்குளத்தில் மாட்டு வண்டிகளில் பேரல் பேரலாக எடுத்து வந்து தளும்பத் தளும்ப நிரப்பப்பட்ட யமுனை நதி நீரை ஊழியர்கள் pump செய்து இந்த நீரூற்றுகளின் nozzle ன் கீழே இருக்கும் பித்தளை அலங்கார பானைகளுக்கு பித்தளைக் குழாய்கள் வழியாக அனுப்பியுள்ளனர்,
இந்த அலங்காரப் பானைகளில் முழு அழுத்தத்தில் நிரப்பப்பட்ட தாமரைக்குளத்து நீர் மேலெழும்பி அழகாக ஊற்றெடுத்துள்ளது ,இப்படி நூறாண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது,
பிந்தைய 1800 களில் இந்த பித்தளை அலங்காரப் பானைகள் திருடப்பட்டு, மண் அலங்காரப் பானைகளாக மாற்றப்பட்டன, பின்னர் 1903 முதல் எளிதான பராமரிப்பு காரணங்களுக்காக galvanized iron பானைகளாக மாற்றம் கண்டுள்ளன, fountain head nozzles மட்டும் இன்னமும் பித்தளையில் உள்ளது.
சண்டிகரில் புராதான சாக்கடை மூடியை திருடும் art theives பற்றி இங்கே
#பராமரிப்பு,#maintainence, #மராமத்து,#தாஜ்மஹால்,#பெர்ஷிய_தோட்டம்,#நீரூற்று