முந்தானை முடிச்சு (1983)படம் டப்பிங் உரிமை வரலாற்றில் முதல் முறையாக ஐந்து லட்சம் ரூபாய்க்கு உரிமை வாங்கி k.ராகவேந்தர் ராவ் இயக்கத்தில் காதர்கான் வசனத்தில் இந்தியில் மாஸ்டர்ஜி ( 1985 )என்று வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது,
ஹிம்மத்வாலா படத்தை அடுத்து ஸ்ரீதேவிக்கு பாலிவுட்டில் ஏறுமுகம் தான்,பாக்யராஜ் செய்த வாத்தியார் வேடத்தில் காகா ராஜேஷ் கண்ணா, ஆனால் முக்கியமான காஸ்ட்யூம் ஆன கண்ணாடி இவருக்கு கிடையாது, மீசையும் கிடையாது,
மற்றபடி அதே வாத்தியாருக்கான காஸ்ட்யூம்கள்,அவரின் அந்திமகாலத்தில் நடித்த நல்ல படம்,இதில் சிலம்ப சண்டை எல்லாம் போடுகிறார்,ஆனால் ரசிக்கவில்லை,
இயக்குனர் k.ராகவேந்திரராவ் ஸ்ரீதேவிக்கு இன்னொரு குரு, இவர் tasteful ஒளிப்பதிவாளரும், நடன இயக்குனரும் கூட, தன் பட நாயகிகளுக்கு கடுமையான நடன அசைவுகளைத் தந்து வருத்தி எடுத்து விடுவார்.
அவர்களை கனவுக்கன்னியாக்கிவிட்டு தான் ஓய்வார், இதில் இன்னொரு கூத்து என்ன என்றால் இப்படம் ஒளிப்பதிவு செய்தது அவர் தந்தை k.s.பிரகாஷ்ராவ், இப்படம் ஒளிப்பதிவு செய்கையில் அவரது வயது 71 , வயதுக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை,மனம் இளமையாக இருந்தால் 80 வயதிலும் கூட ஒருவர் தன் best ஐத் தர முடியும்.
இந்திவரின் இசையில் மட்டும் இப்பாடல் அசல் பாடலான " கண்ணத் தொறக்கணும் சாமி," பாடலின் ஜீவனைத் தொடவே இல்லை,
இந்த கண்ணத் தொறக்கணும் சாமி பாடலின் மேனகை விசுவாமித்ரர் தீம் அடுத்தடுத்து வந்த கைதி படத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி,மாதவி,இந்தியில் ஜித்தேந்திரா மாதவி என மீள்உருவாக்கம் செய்யப்பட்டது இது மாஸ்டர்ஜி வடிவம்
https://youtu.be/NpLHp0fsP_w
இது தெலுங்கு கைதி வடிவம்
https://youtu.be/kTSnMsyzQEI
இது இந்தி கய்தி வடிவம்
https://youtu.be/EEEDSV4JoN0
ஊர்வசி பிரமாதமான நடிகை அவரின் முதல் படத்திலேயே அந்த பரிமளா என்ற இளம்பெண் கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருப்பார்,ஸ்ரீதேவி அந்த ராதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆனாலும் அவரிடம் அந்த குறும்புத்தனம் இல்லை,மாறாக நல்ல பூரிப்பும் புஷ்டியும் அந்த ராதா வேடத்தை மனதில் ஒட்டாமல் செய்து விடுகிறது.
பாக்யராஜின் அந்த மனைவியை இழந்தவன் துக்கம்,பெண்விஷயத்தில் கெட்ட பெயர் வாங்கியவனின் குற்ற உணர்வு, கைக்குழந்தையை தனியே வளர்க்க பிரயத்தனப்படுபவனின் அல்லாட்டம் என எதுவுமே ராஜேஷ் கண்ணாவிடம் இல்லை, க்ளோசப் காட்சிகள் இல்லவே இல்லை, ராஜேஷ் கண்ணா ஏதோ ஒப்புக்கு நடித்தது போலவே இருந்தது,
முந்தானை முடிச்சு படத்தில் தீபா செய்த அந்த டீச்சர் கதாபாத்திரம் இந்தியில் தாய்வீடு புகழ் அனிதாராஜ் செய்தார்,சற்றும் பொருந்தாத மிடி ,லோநெக் டாப்ஸ்,மேற்கத்திய உடைகளை இவர் பள்ளிக்கு அணிந்து வருவது நம்பும் படி இல்லை.
காமெடிட்ராக் என்று ஒரு ஆபாச மூட்டையையே இந்தியில் அவிழ்த்துவிட்டனர், அஸ்ராணி இதில் கோவில் பூசாரி,அவர் ஊரில் பூக்கடை வைத்திருக்கும் பெண் அருணா இரானியின் வளைவுகளை டீக்கடையில் அமர்ந்தபடி அப்படி வெறிக்கிறார், அப்பெண்ணின் அசைவுகளில் அவரின் கட்டுக் குடுமியே விரைத்து உயர்வது போல ஒரு காட்சி sick tasteன் உச்சம் , இதிலும் முருங்கைக்காய் சமையல் காட்சி வருகிறது.
தவக்களை இதிலும் நாயகிக்கு நட்புப் பட்டாளத்தில் ஒருவராக வந்தார், இசைஞானியின் பின்னணி இசையை அப்படியே ஆங்காங்கே அரைகுறை புரிதலுடன் எடுத்தாண்டிருந்தார் இசையமைப்பாளர் இந்திவர்,குறிப்பாக அந்த பிள்ளையைத் தாண்டும் காட்சியில் வரும் தப்பிசையை ஜீவனின்றி எடுத்தாண்டிருந்தனர்,
மாஸ்டர்ஜி படம் யூட்யூபில் இருக்கிறது பாருங்கள், முந்தானை முடிச்சு படத்தை தெலுங்கிலும் கன்னடத்திலும் தழுவி உப்புக்கண்டம் போட்டு வைத்துள்ளனர், அவற்றைத் தவிருங்கள்
#முந்தானைமுடிச்சு,#மாஸ்டர்ஜி,#ksபிரகாஷ்ராவ்,#kராகவேந்திரராவ்,#kபாக்யராஜ்