மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட் தமிழ்நாட்டின் பெருமை, சேலத்தின் பெருமை,1935 ஆம் ஆண்டு ஸ்டுடியோ அதிபர் இயக்குனர் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம் அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்த ஸ்டுடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலம் என பதினோரு மொழிகளில் 1935 முதல் 1982 வரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்தனர்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் வளைவு இடிக்கப்பட்டு இங்கே சுந்தர் கார்டன் என்ற அடுக்ககத்திற்கான வளைவு வர இருந்ததை அறிந்த கலைஞர் அவர்கள் அந்த கட்டுமான நிறுவனத்திடம் பேசி இடிப்பதை தடுத்து நிறுத்தி மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.