செங்கல்பட்டு பாலாறு பாலம் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் மார்க்கத்தில் கடந்த பத்து வருடங்களாக பராமரிப்பு இன்றி அதன் expansion joints மிகவும் பழுதடைந்து விரிசல் விட்டுள்ளது,
இப்போது அந்த 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்தில் மராமத்து பணிகள் நடந்து வருவதைப் பார்த்தேன்.இந்த அத்தியாவசிய மராமத்து பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நடக்கும்,
நேற்று பகல் மேல்மருவத்தூர் செல்கையில் எளிதாக மற்றொரு பாலத்தில் ஒருவழிப்பாதை போல வாகனங்களை திருப்பி விட அதில் நான் எளிதாக நேராக சென்றுவிட்டேன், ஆனால் இன்று சென்னைக்கு திரும்ப வருகையில் மெய்யூர் வழியாக ஒரு தேரிக்காட்டின் உள்ளே அமைக்கப்பட்ட அவசர ஒற்றை தார் சாலையில் திருப்பி விட்டனர்.
மெய்யூர் வழியே கார்களுக்கு ஒரு சாலை ,பேருந்துகள் கனரக வாகனங்களுக்கு புக்காதுறை கூட்ரோடு வழியே மற்றொரு சாலை என இரண்டு அவசர தார் சாலைகள் அரசு அமைத்துள்ளது, சுமார் 12 முதல் 20 கிலோமீட்டர் வரை நம்மை சுற்றிக் கொண்டு பழைய சீவரம் to செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போய் நம்மை கொண்டு விடுகிறது.
இதை இங்கு எளிதாக எழுதிவிட்டேன், ஆனால் இதில் பயணிப்பது அத்தனை எளிதல்ல,
குடும்பமாக காரில் சென்னை நோக்கி பயணிப்பவர்கள் தீர்ந்தார்கள்,வால்வோ பேருந்து மக்கள், டெம்போ ட்ராவலர் சின்ன வேன், என அனைவரும் குறிப்பாக இரவில் இந்த விளக்கில்லாத சாலையில் வருகையில் உயிரை கையில் பிடித்தபடியே வரவேண்டும். மிகவும் மட்டமாக ஆற்று மணலைக் கொட்டி நிரப்பி அதில் இந்த தார் சாலை அமைத்துள்ளதால் ஓவர்டேக் செய்ய shoulder ல் இறங்கினால் டயர் மணலில் புதைகிறது,
எதோ ஒரு NHAI நெடுஞ்சாலைத் துறை அதிகாரி , போக்குவரத்து துறை அமைச்சரின் மெத்தனம் ஊழல் லட்சக்கணக்கான மக்களை இப்படி சுற்றலில் விட்டு உலுக்கி எடுத்து அழகு பார்க்கிறது,விலைமிகுந்த எரிபொருளை விழலுக்கு இறைக்க கேட்கிறது.
அதிக பட்சம் ஐந்து நிமிடத்தில் நேர்சாலையில் கடக்க வேண்டிய தூரத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க பகலில் 45நிமிட நேரம் ஆகிறது, காரில் பேருந்தில் கடக்க பகலில் ஒரு மணிநேரம் கூடுதலாக ஆகிறது,இரவில் 2 முதல் 3 மணிநேரம் வாகன நெரிசலைப் பொறுத்து கூட்டிக் கொள்ளுங்கள், எத்தனை திருப்பங்கள், எண்ணிலடங்கா அதிர்ச்சிகள், பாதி வழியில் பம்பர் to பம்பர் இடித்துக்கொண்டு இரு கார் காரர்கள் முன்னெடுக்கும் மோதல்கள் என பயணிகளை சாலைப் பயணத்தையே வெறுக்க வைக்கும் மார்க்கம் இது .
கார் செல்லும் ஒற்றைச் சாலையில் பேருந்துகள் லாரிகள் அடாவடியாகப் புகுந்து ஒற்றை முழு சாலையை ஆக்கிரமித்து மறிக்கும் பேரவலங்கள் என பயணிகளுக்கு அயற்சிக்கு மட்டும் பஞ்சமில்லை.
எனவே திருச்சி திண்டிவனம் மதுராந்தகம் வழியாக சென்னை வரும் பயணிகள் இரவில் வராதீர்கள், உங்கள் பொறுமையை சோதித்துவிடும் இந்த காட்டுவழிப்பயணம்.
மதுராந்தகத்தில் நன்றாக சாப்பிட்டு விட்டு நிறைய தண்ணீர் பாட்டில் வாங்கி வைத்துக் கொண்டு பயணத்தை தொடரவும், எனவே எத்தனை மணிநேரம் வாகன நெரிசலில் மாட்டினாலும் போராடி பிடித்து நிற்க தெம்பிருக்கும்.
அரசியல்வாதிகளின் வாகனங்களுக்கு இந்த இடியாப்ப சிக்கல் இல்லை, அவர்கள் வாகனம் ஒருவழிப்பாதை மீதே நேராக செல்வதைப் பார்த்தேன்.
இந்த பாலத்தை காலத்தே மராமத்து செய்யாத ஊழல் அதிகாரி போவான் போவான் ஐயோன்னு போவான்.
இது போல மக்கள் உபயோகம் மிகுந்த பாலங்கள் ரயில்வே தண்டவாளங்கள் போல தினமும் சரிபார்த்து உடனுக்குடன் மராமத்து செய்ய வேண்டும், 25 mm to 40 mm மட்டுமே அதிக பட்சம் expansion joints அனுமதிக்கலாம், அந்த joints தார் ஊற்றி நிரப்பி பராமரிக்கப்பட வேண்டும், வாகனங்களின் டயர் உராய்வால் அகன்று விடும் expansion joints steel பட்டைகளை மீண்டும் அதே expansion joint விளிம்பில் சரியாக பொருத்த வேண்டும், இதை செய்வதே NHAI உடைய தலையாய பணி, ஆனால் செய்வதில்லை, காரணம் அலட்சியம், மக்கள் உயிர் மீதான மெத்தனம்.
பறவைகள் எச்சம் பாலத்தின் பாகங்கள் மீது கண்டிப்பாக துடைத்து அகற்றப்பட வேண்டும், இல்லை என்றால் பறவையின் எச்சத்தில் இருக்கும் ஆலம்பழ,அரசம்பழ விதைகள் ஈரத்தில் ஊறி வேர்விட்டு பாலத்தில் ஊன்றி வளர்ந்து பாலத்தை விரிசல் விடச் செய்யும்.
ஒரு பாலம் எப்படி பராமரிக்கப்பட வேண்டும்?
படியுங்கள்
https://m.facebook.com/story.php?story_fbid=10160005877421340&id=750161339
#பாலாறு_பாலம்,#செங்கல்பட்டு