சமீபத்தில் ப்ராட்வே சிக்னலில் வலது புறம் திரும்ப நிற்கையில் இந்தப் படம் எடுத்தேன்.
அடுத்த முறை சென்னை உயர்நீதி மன்றத்தின் குவிமாடங்களை கடப்பவர்கள் அந்த இரு வெங்காய வடிவ குவி மாடத்தின் உச்சியையும் கவனியுங்கள், ஐம்பது வருடங்களுக்கு முந்தைய கருப்பு வெள்ளை படம் இணைப்பில் பாருங்கள்,
15 வருடங்களுக்கு முன் கனத்த மழையில் இடி விழுந்ததில் ஒரு மாடத்தின் steeple point needle அதாவது தேனிரும்பு ஊசிமுனை கலசம் மட்டும் அப்படியே தகர்ந்து விழுந்து விட்டது,
(அது இன்னும் நீதிமன்ற வளாகத்தில் உள்ளதா ? குப்பையில் வீசி விட்டனரா ? தெரியவில்லை.ஒரு குவிமாட கோபுரத்துக்கு இடி தாங்கி எத்தனை அவசியம்?)
இதை ஏன் இன்னும் நம்மால் மாற்றி conservation செய்து மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க முடியவில்லை, தாஜ் மஹாலை முழுக்க feasible study செய்து ஆராய்ந்து அதன் உயரிய அம்சங்களை இந்த பொது கட்டிடத்தின் 24 குவிமாடங்களிலும், ஒவ்வொரு மூலையிலும் அங்குலம் அங்குலமாக இழைத்து வடிவமைத்துள்ளனர் பிரிட்டிஷ் கட்டிடக்கலைஞர்கள் மூவர் J. W. Brassington , Henry Irwin மற்றும் J. H. Stephens., அத்தனை பெருமைக்குரிய பணி இது, இது சென்ற நூற்றாண்டின் சரித்திரச் சுவடு.
ஆனால் நம் பொதுப்பணித்துறைக்கு இந்த Indo saracenic கட்டிடக்கலையின் அருமைகள் தெரியாத காரணத்தால் இந்த main focal point ஆன steeple needle apex ஐ கூட இத்தனை வருடங்களாகியும் சரிசெய்யாமல் இருக்கிறோம், இடி தாங்கி கூட அங்கு வைக்காமல் இருக்கிறோம், இது தான் எத்தனை துயர், வெட்கக்கேடு?
பொதுப்பணித் துறை ஆணையர் தான் இதற்கு பொறுப்பு, அரசின் புராதான சின்னங்கள் சிதிலமடையாமல் மராமத்து செய்து அந்த வரலாற்றுப் பழமையை பாதுகாக்க வேண்டும். அதற்கான நிதியை அரசிடம் போராடிப் பெற வேண்டும், சரியான, பெயரெடுத்த conservation consultant இடம் இந்தப் பணியை ஒப்படைத்தால் அவர் feasible study செய்து இதன் உறுதியை ஆராய்ந்து எப்படி பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமோ அப்படி நயமாக மீண்டும் புதுப்பிப்பார்.
இந்த நீதி மன்ற வளாகத்தில் இரண்டு கலங்கரை விளக்கம் உள்ளது, இந்த சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணியை என் முந்தைய பதிவில் இங்கே படிக்கலாம்.
https://www.facebook.com/750161339/posts/10159968639591340/
#சென்னை_உயர்நீதிமன்றம்,
#இடிதாங்கி,#குவிமாடம்,
#குவிமாட_கலசம்,#சென்னை_கட்டிடக்கலை