தினத்தந்தியில் 7-7-1981 அன்று பாடல் பதிவுடன் இனிதே ஆரம்பம் என்று வந்த மூன்றாம் பிறை படத்துக்கான வித்தியாசமான மினிமலிச முழுப்பக்க விளம்பரம்.
நடிகை ஷோபா இறந்தது 1 May 1980,மூடுபனி நவம்பர் 1980 ஷோபா இறந்த பின் வெளியாகி உள்ளது, வழக்கு, பழிகள் அவப்பெயர் என பலவாறு அலைக்கழிக்கப்பட்டார் இயக்குனர் பாலுமகேந்திரா, ஒரு வருடத்துக்குப் பின் திரும்ப வந்து இப்படி ஒரு அற்புதமான படத்தை இயக்கி தன்னுள் இருந்த கலைஞனை மீட்டெடுத்தார்.
Ps:மூன்றாம் பிறை பெயருக்கு கீழ் கலர் என்ற tag பாருங்கள்.
கவிக்குயில் தப்புத்தாளங்கள், பைரவி,என 70ன் கடைசியில் கருப்பு வெள்ளைப் படங்கள் வந்தன ,
முதன்மை 1980 ல் கலர் தொழிற்நுட்பம் அதிசயத்தக்க ஒன்றே, east man கலரில் படம் பிடிக்க மிகுந்த செலவாகும், 1977 ல் 16 வயதினிலே படத்தில் நிவாஸ் , பட்டினப்பிரவேசம் படத்தில் பிஎஸ் லோகநாத் துணிந்து செலவு குறைந்த orwo நெகடிவ்வில் ஒளிப்பதிவு செய்து துவக்கி வைக்க வண்ணப்படங்கள் சரசரவென வரத்தொடங்கின
#மூன்றாம்பிறை,#பாலுமகேந்திரா,#கமல்ஹாசன்,#ஸ்ரீதேவி,#இசைஞானி,#கவிஞர்_கண்ணதாசன்,#ஊட்டி,#சில்க்_ஸ்மிதா