இன்று பெசன்ட் நகர் மின் மயானம் சென்று வந்தேன்,
நெடுங்கால Facebook நண்பர்
திரு. Ashok Iyer இன்று மாரடைப்பால் காலமானார், கவின்கலை ஓவியர், சினிமாகாரர், விளம்பர நிறுவனக்காரர், கட்டுமானர் என பன்முகம் கொண்ட ஆளுமை, உயிருடன் இருக்கையில் பார்த்திராத நபர்.
கடந்த இரு மாதங்களாக தான் போனில் பேசுவார், ஒரு மணி நேரம் தொடர்ந்து பேச அவரிடம் சினிமா பற்றி பல விஷயங்கள் உண்டு,
போனவாரம் தொடர்ந்து போனில் அழைத்திருக்கிறார்,நான் தொடர்ந்து அழைப்பை ஏற்கமுடியாதபடி அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கியிருந்தேன்,என்னிடம் பேச வேண்டும் என செய்தி அனுப்பியிருந்தார், விரைவில் பேசுகிறேன் என செய்தி அனுப்பினேன் ஆனால் இன்று வரை பேசவே முடியவில்லை.
இன்று அவரின் இரண்டாம் மகன் பிற்பகல் அவரின் மரண செய்தியை fb ல் பகிர, அடுத்தடுத்து வேலைகளை முடித்து நேராக பெசன்ட் நகர் மின் மயானம் 5 மணிக்கு போய்விட்டேன், இறக்கி வைக்க ஒரு கை குறைய அப்போதாவது உதவ முடிந்தது, மின் மயான கதவுகள் அவரை உள் வாங்கி நெருப்பு கீற்றுகள் தீண்டும் வரை அங்கேயே நின்றிருந்தேன்.
என்னை தேர்ந்தெடுத்து என்ன பேச நினைத்தாரோ? இன்று ஒரு பாடம் எத்தனை வேலை மிகுதி என்றாலும் யார் அழைப்பையும் தவிர்க்கக்கூடாது என்பது.
சமீபத்தில் மணிரத்னம் திரைப்படங்களின் காட்சி அமைப்புகளுக்கு உந்துதலாக இருந்த பழைய இந்தி படங்கள்,தமிழ் படங்களை படங்களுடன் தொகுத்து எழுதி வந்தார்.
நடிகை ஹீரா பற்றி அவர் எழுதிய முக்கியமான குறிப்பை இங்கே படிக்கலாம்.
https://m.facebook.com/story.php?story_fbid=10219343319773466&id=1825069878&mibextid=Nif5oz
அன்னாருக்கு இதய அஞ்சலி, வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.