ஒளிப்பதிவாளர் திரு தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்,பணிபுரியும் எல்லா படங்களிலும் தன் சிறப்பான பங்களிப்பைத் தருவார் ,முன்பு சரிகா விகடன் பேட்டி ஒன்றில் திரு ஹேராம் திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்,
அதில் ஹேராம் படத்தில் வெளிப்புற படப்பிடிப்பில் வெண்மேக வானம், செக்கச் சிவந்த வானம் தான் காட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்தும் ஓரிரு காட்சியில் நீல வானம் குறுக்கிட்டதைப் பற்றி குறிப்பிட்டார்.
அதை ஹேராம் மீள்பார்வை பார்க்கையில் கண்டுபிடித்தேன் , இரண்டு low angle காட்சிகள் அவை மொகஞ்சதாரோ அகழ்வுக் குழியில் இருந்து மேலே பார்க்கும் ஒரு கோணம், மற்றொன்று சாகேத்ராம் சந்நியாசம் ஏற்றபின் தில்லி marina ஹோட்டலுக்கு வரும் காட்சியில் வரும், இது ஒரு long shot, இவை சட்டென கடக்கும் காட்சிகள், அதைப்பற்றி அவர் குறிப்பிட்டிருக்கக் கூட வேண்டாம், அத்தனை professionalism மிகுந்த ஒளிப்பதிவை ஹேராம் திரைப்படம் கொண்டுள்ளது.
நீலநிறம் எந்த படத்துக்கும் ஒரு contemporary livelyness தருவதால் தான் அகில உலக அளவில் நீல நிறத்தை வரலாற்றுப் படங்களில் பயன்படுத்துவதில்லை என நினைக்கிறேன்,
ஹேராம் படத்தின் பிரதியை என் அமெரிக்க moviebuff நண்பர் ஒருவருக்கு தந்து பார்க்க வைத்து கருத்து கேட்க அவர் படத்தை மிகவும் சிலாகித்தார், இது எங்கள் அமெரிக்க இயக்குனர் Francis ford Coppola படங்களின் தரத்தை , அக்காட்சிகள் கொண்டிருக்கும் sepia நிறத்தை , நுணுக்கத்தை, நீண்ட காட்சிகளை நினைவூட்டுகிறது , இது நிச்சயமாக offbeat , independent என வியந்து பாராட்டியவர்,
இந்த அளவுக்கு இந்தியாவில் படம் எடுக்க அதுவும் ஒரு நடிகர் படம் இயக்குவதை எல்லாம் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை என்றார், நான் அவருக்கு The Godfather படத்தின் தாக்கத்தில் இந்திய சினிமாவில் தரமான பரீட்சார்த்தங்களுக்காக இன்றும் கொண்டாடப்படும் நாயகன் படத்தையும் பார்க்கப் பரிந்துரைத்தேன்,அதையும் மிகவும் சிலாகித்திருந்தார் நண்பர்.
2005 ஆம் ஆண்டு TIME பத்திரிக்கை
"All-Time 100 Best Films
என்று பட்டியலிட்டதைக் கேட்டு வியந்தார் நண்பர்.
#ஹேராம்,#கமல்ஹாசன்,#திரு,#kamalhaasan, #sepia,#bluesky