மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலைக்கு எதிரே உள்ள எழிலகம் என்ற அரசு அலுவலக கட்டிடம் 1968 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இக்கட்டிடத்தில் தான் கீழ்க்கண்ட அரசு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
நில நிர்வாகம்,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்,
மாநிலத் திட்ட ஆணையம்,
பொது விநியோகம் , நுகர்வோர்ப் பாதுகாப்பு,
வணிக வரி,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல வாரியம்,
வருவாய் நிர்வாக ஆணையரகம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளின் அலுவலகங்கள்.
நெஞ்சிருக்கும் வரை (1967) திரைப்படத்தில் நடிகர்கள் சிவாஜியும் , முத்துராமனும் marina promenade புல்வெளியில் நின்று தர்க்கம் செய்கையில் இந்த முக்கியமான கட்டிடத்தின் கட்டுமான பின்னணியை ஒளிப்பதிவாளர் N.பாலகிருஷணன் ஆவணப்படுத்தியதை காணலாம்.