"Death penalty is a judicially sanctioned murder" - Justice V.R.Krishnaiyer
விருமாண்டி சிறைக்காட்சியில் முனுசாமி என்ற தூக்கு தூக்கியை காக்கி டிரவுசர் சீருடையில் காட்டுகிறார்கள், அவர் இது வரை 47 பேர்களை தூக்கில் ஏற்றியதாகச் சொல்கிறார், இந்தப் பாவம் என்னைச் சேராது என்கிறார், இவர் தூக்கு தூக்கி ஆதலால் முகத்தை detail ஆக காணமுடியாதபடிக்கு இருட்டாக பதிந்திருப்பார்கள், எனக்கு இப்படி அரசாங்கத்தில் சம்பளம் பெற்று நிரந்தரமாக கொலைப்பணியில் இருக்கும் தூக்கு தூக்கிகள் இன்னும் வழக்கில் உள்ளனரா என்ற ஐயம் இருந்தது,
விருமாண்டி திரைப்படத்தில் முதல் காட்சியில் காலஞ்சென்ற நீதியரசர் V.R.கிருஷ்ணய்யர் பேசுவார், சிறைத்துறை டாக்டர் ஒருவர் பேசுவார், இப்படி முறையாக சிறை பற்றி thesis செய்து எடுத்தவர்கள் இந்த தூக்கு தூக்கி பணியாளர் சித்தரிப்பை சரியாகவே கையாண்டிருக்க வேண்டும்,
நம் ஜெயில்களில் தலைமுறை தலைமுறையாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தூக்கு தூக்கியாக பணியாற்றுவர்,அப்படி நாம் காணும் அந்த தூக்கு தூக்கி முனுசாமி கூட ஏதோ ஒரு கைதிக்கு மரண தண்டனை அளிக்க ஒத்திகைக்கு கூட வந்திருக்க கூடும்,அந்த ஒத்திகையில் ஒரு பொம்மையை தூக்கில் ஏற்றிய பின் விசையை இழுப்பதைப் பார்ப்போம், அந்த ஒத்திகை வேளையில் அப்பேட்டியை எடுத்ததாகக் கொள்ளலாம்.
திருவாங்கூர் ஜெயிலில் மன்னர் காலத்தில் இருந்து ஒரு குடும்பம் தூக்கு தூக்கியாக இருந்துள்ளனர், நிழல் குத்து மலையாள திரைப்படத்தில் இது விரிவாய் வரும்,
திகார் ஜெயிலில் இப்படி ஒரு குடும்பம் தலைமுறை தலைமுறையாக தூக்கிலிடுவதைச் செய்து வருகிறது, அவர்கள் பெறுவது மிகவும் குறைவான சம்பளம் , மிகக் குறைந்த படிகளே இதற்கு தரப்படுகிறது,
தூக்கில் இடும் 25 மிமீ தடிமன் கொண்ட மணிலா கயிற்றை இவர்கள் பல வாரங்கள் முன்பே குற்றவாளியின் எடைக்கு ஏற்ப ஒன்றரை மடங்கு அதிக எடை தாங்குமாறு தயாரித்து பக்குவப்படுத்தும் வேலையைச் செய்கிறார்கள்,
தூக்கிலிடும் சில நாட்களுக்கு முன்பாகவே குற்றவாளியின் எடையையும் கழுத்தளவையும் மீண்டும் மீண்டும் சோதிப்பார்களாம்.
அந்த உண்மையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
https://www.thehindu.com/news/cities/chennai/the-story-of-the-hangmans-noose/article4120491.ece
#17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்,#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#oak_சுந்தர்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்,#நீதிபதி_VR_கிருஷ்ணையர்