ரஹ்மான் அவரது மூத்த மகள் கதீஜாவை நிகாப் (பர்தா) அணிய வைத்து மேடையில் தோன்ற வைத்தார் என்ற புரிதல் இல்லாத உளறல்களை இன்று பார்த்தேன்,
ரஹ்மானின் இரு மகள்களில் மூத்தவர் கதீஜா மட்டுமே நிகாப் (niqab)வகை பர்தாவை விரும்பி அணிகிறார்.
அவர் பர்தாவில் முகத்தைக் காட்டக்கூடிய வகைகளான chador, tuding,DOA gaung,shayla,khimar,hijab,esarp என்பனவற்றில் கண்களை மட்டுமே காட்டும் niqab வகையைத் தேர்ந்து எடுத்துள்ளார், முழுக்க அது அவரின் சுதந்திரம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.
கதீஜாவின் தங்கை ரஹீமா பர்தா அணியாமல் மாடர்னாகவே வலம் வருகிறார்(பார்க்க படம் ), ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவும் சாதாரணமான முகபடம் மட்டும் அணிகிறார், மகன் அமீன் நவநாகரீக இளைஞனாகவே இருக்கிறார்.
ரஹ்மானை விமர்சிக்க இந்த பர்தா விஷயத்தை ஏன் சற்றும் புரிதல் இல்லாமல் கையில் எடுத்தனர் எனப் புரியவில்லை.
இது முழுக்க கதீஜா ரஹ்மானின் விருப்பம்,சுதந்திரம் மற்றும் நம்பிக்கையைச் சார்ந்தது.இங்கே அமீரகத்தில் மெத்த படித்த பல நாட்டுப் பெண்கள் ஹிஜாப் அணிவதை மிகவும் கௌரவமாக,சுதந்திரமாக அணிகின்றனர். அந்த பாரம்பர்யத்தை விட்டே கொடுப்பதில்லை.இதில் பெண்ணடிமை என்பது பற்றியெல்லாம் பேச்சேயில்லை.
இது முழுக்க முழுக்க தவறான புரிதலினால் எழுந்த சர்ச்சை என்பதனால் இந்த பதிவு இடவேண்டியதாயிற்று.