இன்று பம்மல் கிருஷ்ணா நகர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் கண்டது, சிகப்பு நிற பல்சர் 200 பைக்கில் வந்த இளைஞர் காற்று பிடிப்பவர் முன்னால் பைக்கை நிறுத்தி சென்டர் ஸ்டாண்ட் இட்டு இறங்கியவர்,ஊழியருன் கையில் இருந்த காற்றடிக்கும் குழாயை குறுகுறுவென பார்த்து, ஃபுல்லா 0 பண்ணிட்டு 29 முன் வீல் 39 பின் வீல்ல அடிங்க என்றார்.
நல்லவர்கள் விவகாரமில்லாதவர்கள் காற்று பிடிக்க போகையில் தான் பெட்ரோல் பங்கில் காற்று பிடிக்க பணியாளர் இருக்க மாட்டார்கள், அல்லது காற்று நிரப்ப வாகனங்களோடு கூட்டம் அம்மும்,இது போல விவகாரிகளுக்கு இரண்டு பேர் கூட சேவகம் செய்ய வருவார்கள் என்பது இன்று உறுதியானது.
காற்று பிடிப்பவர் அப்படி காற்றை முழுசா இறக்கி எல்லாம் காற்று பிடிக்க முடியாது என மன்றாடினார் , இளைஞர் குறுகுறுவென காற்று நிரப்புதலை மேற்பார்வை பார்த்தவர், முன் வீலில் 29 பின்வீலில் 39 psi நிரப்பியும், பங்க் ஊழியரின் சேவை திருப்தி அளிக்காததால் 5₹ tip தராமலே சென்றார்,ஊழியர் காற்றை திருடுவார் என ஐயப்பட்டிருப்பார் போல .
எந்த பிரகஸ்பதி இவர்களுக்கெல்லாம் 29 psi ,39psi அடிக்க அறிவுரை சொல்வது என தெரியவில்லை, சாலை முழுக்க பள்ளங்கள் , ஜல்லி சிதறல்கள், உடன் வெயில், ஆதலால் இதில் காற்று தினம் இரண்டு psi வரை இறங்கும், இதில் 29,39 எல்லாம் customize செய்து நிரப்பி,அந்த பங்க் ஊழியரை உபத்ரவிக்க கிளம்பி வந்து விடுகின்றனர்,
எல்லோருக்கும் 25 psi ,35 psi என்று வழமையாக நிரப்புகையில் அந்த பணியாளருக்கு பணி இலகுவாகும் என்பதை இவர்கள் யோசிப்பதில்லை.
ஒரு முறை நாமே காற்று நிரப்பிப் பார்த்தால் தான் கஷ்டம் தெரியும் , இன்று உட்கார்ந்து எழுந்திருக்கவே முடியாத பலருக்கு மண்டியிட்டு அமர்ந்து valve சரியாக கண்டுபிடித்து cap அகற்றி nozzle சரியாக பொருத்தி காற்றை நிரப்புவதற்குள் தாவு தீர்ந்துவிடும்,
அந்த பணியாளர் கடும் வெயிலில் இப்படி ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு காற்று பிடிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அவருக்கு இந்த கோபம் வரும் பணியை மனமார செய்வதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்,
Tip 5₹ ஆவது தருவதே நியாயம், free air என்றாலும் அவர்களின் சம்பளம் 10000₹க்கு குறைவாகவே இருக்கும், எனவே இந்த tip தருவது அவசியமாகிறது,நம் அவசரத்துக்கு காற்றடிக்க ஓடி வர ஊக்கமளிக்கிறது என்பது எனது புரிதல்.