தமிழ் சினிமாவில் 38 வருடங்களாக நூறு திரைப்படங்களுக்கு மேல் சொல்லிக்கொள்ளும் படி பல முக்கியமான குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் அநேகருக்கு பெயர் தெரியாத நடிகர் ரவிராஜ்.
இவர் அறிமுகமான முதல் படம் சரியாகத் தெரியவில்லை,நாசரின் முகம் திரைப்படத்தில் அறிமுகம் என்று பிழையாக இணைய செய்தி உள்ளது, அது போல இவர் பிறந்த ஆண்டு 1973 என்று பிழையாக இணைய செய்தியில் உள்ளது,
1985 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் இதயகோயில் திரைப்படத்தில் அண்ணா பல்கலைகழக கல்லூரி வகுப்பறையில் விரிவுரையாளராக தோன்றுகிறார், இவரை வெறுப்பேற்றி ராதா உள்ளிட்ட வகுப்பறை மாணவர்கள் ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு பாடலை பாடுகின்றனர்.
1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படத்தில் வேலுநாயகரால் மிரட்டப்படும் பம்பாய் அரசு மருத்துவமனை டாக்டர் இவர் தான், வேலு நாயக்கர் தமிழில் கேள்வி கேட்க இவரிடம் ஐயர் டெல்லிகணேஷ் இந்தியில் கேட்பார், நாயகனில் rolling credit ல் இவர் தோற்றம் uncredited , முக்கிய கதாபாத்திரம் செய்தும் பெயர் வரவில்லை.
அடுத்து 2003 செல்வராகவன் இயக்கத்தில் வந்த காதல் கொண்டேன் திரைப்படத்தில் எச்சில் வழிய தூங்கும் தனுஷை எழுப்பி கருப்பு பலகையில் கணக்கு புதிர் விடுவிக்க சொல்லி சீறிவிழும் கதாபாத்திரத்தை அத்தனை அருமையாக செய்தார்,அப்படத்துக்கே திருப்புமுனை காட்சி.
நிறைய திரைப்படங்களில் தோன்றி professional ஆக attitude ஆன புத்திஜீவி கதாபாத்திரங்களில் நின்று விடுவார் நடிகர் ரவிராஜ், படங்களை வரிசைப்படுத்துவது என் நோக்கமல்ல.
தமிழ் சினிமாவில் நடிகர் ரவிராஜ் மிகவும் underrated, இவரைப் பற்றி wikipedia பக்கம் கூட இல்லை, பெண் ஆட்டோ ஓட்டுனரை கூட பேட்டி எடுக்கும் youtube channel கூட இவரை பேட்டி காணாதது வியப்பாக உள்ளது,பிக் பாஸ் 6 சீஸன் கடந்தும் இவரை அதில் பங்குபெற அழைக்காதது வியப்பாக உள்ளது, இவருக்கு கலைமாமணி விருது கூட இன்னும் தரப்படவில்லை, இவருக்கு விகடன் விருது, விஜய் டிவி விருது , ஃபிலிம்பேர் விருது ஏதாவது வழங்கப்பட்டதா தெரியாது,தரவுகள் படிக்க கிடைக்கவில்லை .
தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகர்களுக்கு நல்ல சம்பளம் தான் தருவதில்லை என்று பார்த்தால், உரிய credit அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை என்பது மிகவும் வேதனையானது.
தமிழ் சினிமாவில் திறமை உள்ளவர்களுக்கு அங்கீகாரம் இருக்காது என்பது இன்னொரு முறை உறுதியானது.
Ps: நடிகர் ரவிராஜ் தரமணி திரைப்பட கல்லூரியில் பேராசிரியராக நீண்டகாலம் பணியாற்றி அதன் முதல்வராக ஓய்வு பெற்றவர், அவர் DD மெட்ரோ சேனல் காலத்தில் எழுத்தாளர் சா.கந்தசாமியின் தொலைந்து போனவர்கள் கதையை தொலைக்காட்சித் தொடராக இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது,எத்தனை இயக்குனர்களை உருவாக்கியிருப்பார்,ஆனால் இவர் பற்றி எந்த திரைத்துரையினரும் இதுவரை பேசாதது அதிசயமாக உள்ளது .