முள்ளும் மலரும்(1978), வேனலில் ஒரு மழா( 1979), ப்யாரி பெஹனா(1985) மூன்று வடிவத்தைப் பார்த்தபின் முள்ளும் மலரும் தான் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது, தமிழில் இருந்த அழகியல் , யதார்த்தமான எளிமை, க்ளாசிக் தன்மை, subtleness, minimalism என மீள் படைப்புகளில் பின்பற்றப்படாதது நம் துர்அதிர்ஷ்டம்.
முள்ளும் மலரும் தான் இதில் சந்தேகமின்றி மாஸ்டர்பீஸ், காளி கதாபாத்திரம் செய்த மூவரில் ரஜினி அற்புதமான நடிகர், அவர் தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டி தன்னை விட்டுக் கொடுத்து விட்டவர்,"சார்,ரெண்டு கையும் ,ரெண்டு காலும் போனாக்கூட காளிங்கறவன் பொளச்சுக்குவான் சார்,கெட்ட பய சார் அவன் " என்னும் வசனத்தை அவர் பேசுகையில் தான் அதன் வீரியம் புரிகிறது.
மலையாளத்தில் காளி கதாபாத்திரத்தில் மதுவிற்கு பதிலாக காளி கதாபாத்திரத்தில் ஜெயனை நடிக்க வைத்திருக்கலாம் இயக்குனர், மிதுன் நடிப்பும் காளி வேடத்தில் நன்றாக இருந்தது,ஆனால் அந்த தங்கைப் பாசத்தை, பாசத்தின் வெளிப்பாடான கர்வத்தை கண்ணில் தேக்கி வைத்து பிரதிபலித்தவர் ரஜினி மட்டுமே.
மலையாள வடிவத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் மது தன் சிறப்பான நடிப்பால் வாசு என்ற பாத்திரத்தை செய்திருந்தாலும், அவரிடம் அந்த வேகம்,இளமை ,குறும்பு,தீ இல்லை.
படாபட் ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தனர்,அப்பாத்திரம் மேலும் சிறப்புற்றது.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடல் எண்டே ராஜ்ய கொட்டாரத்தில் மதிலுகளில்லா என உருவம் பெற்றது (என் அரண்மனைக்கு சுவர்கள் இல்லை)இப்பாடலை தாசேட்டா பாடினார்.
ராமன் ஆண்டாலும் பாட்டை தமிழில் எஸ்பிபி பாடினார்,
https://youtu.be/tweD2O2WWT8
அதன் இந்தி வடிவ பாடலை கிஷோர் தா பாடியுள்ளார்,
https://youtu.be/8dCQf91cffA
மலையாள படத்தின் எல்லா பாடல்களையும் கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பியே எழுதினார், அவர் இப்படத்தின் இயக்குனரும் கூட, படத்தின் ஒளிப்பதிவு பழம்பெரும் ஒளிப்பதிவு இயக்குனர் கே.ஏ.விஜயம்
மூன்று படத்திலுமே ஊட்டி க்ளென்மார்கன் விஞ்ச் ஸ்டேஷனில் தான் காளியின் பணியிடமாக கதைக்களம் அமைத்திருந்தனர்.
இந்தியில் காளியின் பெயர் காளிச்சரண்,மிதுன் சக்ரபொர்த்தி தான் காளிச்சரண்,படாபட் வேடத்தில் பத்மினி கோலாபுரி நடித்தார்.
முள்ளும் மலரும் படத்தில் ரஜினி,படாபட்டுக்கு டூயட் இல்லை,அது குரங்குகள் குடித்துவிட்டு ஆடுவது போல இருக்கும் என்பதால் டூயட் வைப்பதில் உடன்பாடு இல்லை என்றார் இயக்குனர் மகேந்திரன், மலையாள வடிவமான வேனலில் ஒரு மழா படத்தில் டூயட் வைத்தனர், https://youtu.be/jheuGwFqGn0
ப்யாரி பெஹனா படத்திலும் டூயட் வைத்துள்ளனர்,
தமிழ் வடிவத்தில் காளியை சீண்ட அவன் கைக்கடிகாரத்தை எடுத்து படாபட் ரவிக்கைக்குள் போட்டுக்கொள்வார், இந்தியில் அக்காட்சியில் மாற்றமில்லை,
https://youtu.be/JlXPTiBrF5o
மலையாளத்தில் கைக்கடிகாரத்துக்குப் பதில் சாவிக்கொத்தாக மாற்றியிருந்தனர்.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலின் இந்தி வடிவம் இது .பாடலை ஆஷா போன்ஸ்லே,கிஷோர்தா பாடினார்கள்.
https://m.youtube.com/watch?v=whUdIlliTqY&feature=share
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலின் மலையாள வடிவம் இது அயலா பொரிச்சதுண்டு என வடிவம் பெற்றது .பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.
https://youtu.be/8BE3quMJkzI
முள்ளும் மலரும் படத்தின் இந்தி வடிவத்தில் வடக்கில் ராக்கி கட்டும் திருவிழா பிரசித்தம் என்பதால் ராக்கி திருவிழா பாடலை வைத்தனர்,விபத்தில் அடிபட்ட கையைக் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வெளியூர் சென்ற அண்ணன் காளி இதில் தனியனாக ரயிலில் வந்து இறங்குகிறான்,கருப்பு போர்வை போர்த்திய அண்ணனைக் கண்டு ஓடுகிறாள் தங்கை தன்வி அஸ்மி.
https://m.youtube.com/watch?v=UtAZPwX_TLM&feature=share
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாடலின் மலையாள வடிவத்தில் , பூஜைக்கொருங்கி நிற்கும் பொன்னம்பல மேடு என்ற பாடலாக உருவானது, தாசேட்டா பாடியது,தமிழில் சரத்பாபு ஷோபா மற்றும் தோழியரை ஜீப்பில் வைத்து ஓட்டுவார்,இதில் நாயகி ரோஜாரமணி நாயகன் ஜெயன் ஜீப் ஓட்டுவதை வேடிக்கை பார்க்கிறாள்.
https://youtu.be/2lURwL9AWVE
அடி பெண்ணே!!! பாடலின் மலையாள வடிவத்தில் ஷோபா நடித்த தங்கை கதாபாத்திரத்தில் மலையாளத்தில் ரோஜாரமணி நடித்தார், இவர் கோகிலா படத்தில் பணிப்பெண் கதாபாத்திரம் செய்தவர், சரத்பாபு நடித்த லாபாயிண்ட் இஞ்சினியர் கதாபாத்திரத்தில் ஜெயன்,
இந்த ஏது பந்தல் கண்டாலும் அது கல்யாண பந்தல் பாடலைப் பாடியது
வாணிஜெயராம் அவர்கள்.
https://youtu.be/jheuGwFqGn0
மலையாளத்தில் இசை எம்.எஸ்.வி.அவர்கள், தமிழில் படாபட் ஜெயலட்சுமிக்கும் ரஜினிக்கும் டூயட் கிடையாது, இதில் உண்டு,படாபட் வேடத்தில் ஸ்ரீவித்யா நடித்தார், நிறைவாகவே இருந்தது.
இந்தியில் இசை பப்பி லஹரி, இதில் சிறு வயது காளி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார்.சரத்பாபு கதாபாத்திரத்தில் வினோத் மெஹ்ரா நடித்திருந்தார்,இவருக்கு இந்தி வடிவத்தில் கோட் மாட்டி விட்டனர்.
இப்படத்தின் இசையில் இசைஞானி இசையே மாஸ்டர் பீஸ், எம்எஸ்வி அவர்கள் பழைய மெட்டுகள் எதையும் உபயோகிக்கவில்லை, அனைத்து பாடல்களையும் புதிதாகவே படைத்திருந்தார்.பின்னணி இசையையும் அவர் தன் பாணியில் தான் தந்திருந்தார்,1985 ஆம் ஆண்டு வந்த இந்தி வடிவத்தின் இசையில் பாடல்கள் நன்றாக இருந்தன,ஹிட் அடித்தன,ஆனால் பின்னணி இசை மனதில் நிற்கவில்லை,
ஒளிப்பதிவில் பாலுமகேந்திரா அவர்கள் அழகியல் என்றால் என்ன என்பதை மெய்ப்படுத்திக் காட்டினார், நேச்சுரல் ஒளியமைப்பில் ஜாலங்கள் செய்திருந்தார், மலையாளத்தில் வி.ஏ. விஜயம் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது, இந்தியில் பக்கா கமர்ஷியல் சினிமாவுக்கான ஒளிப்பதிவாக மாற்றி செய்திருந்தனர்.
மூன்று படங்களிலும் அந்த மலினமான மளிகைக் கடை காமெடி ட்ராக் தவறாமல் இடம் பெற்றது, இந்திப்படத்தில் வீரு தேவ்கன் ஸ்டன்ட் மாஸ்டர் என்பதால் சண்டைகள் அதிகமாக இருந்தது.
இந்தி வடிவத்தில் பெயர் போடுகையில் ஒரு பாடல் சேர்த்திருந்தனர், தங்கைக்கொரு அண்ணனின் பாட்டு அது, பாடியது எஸ்.பி.பி அவர்கள்.
https://youtu.be/M7t2VlLzDNQ
கடைசியாக இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று இயக்குனர் மகேந்திரனின் பெருந்தன்மை, முள்ளும் மலரும் படத்தின் கதைக்கான க்ரெடிட்டை உமாசந்திரனுக்கு தந்து நல்ல ஒரு துவக்கத்தை ஏற்படுத்தினார், அது மலையாளத்திலும், இந்தியிலும் கூட அவருக்கு மூலக்கதைக்கான க்ரெடிட்டை பெற்றுத் தந்தது.
#முள்ளும்_மலரும்,#வேணலில்_ஒரு_மழா,#ப்யாரி_பெஹனா,#ரஜினி,#மது,#ஜிதேந்திரா,#ரீமேக்,#விஞ்ச்,#க்ளென்_மார்கன்,#ஊட்டி,#மகேந்திரன்,#இசைஞானி,#எம்எஸ்வி,#பாலு_மகேந்திரா