என்ன தமிழகத்துக்கு பெருமையா?
வாழ்த்துகள், முன்னாள் மேகாலய கவர்னர் தமிழர் வி.சண்முகநாதன் தேடித்தந்தது போல அவமானத்தை மட்டும் தேடித்தர வேண்டாம்.
பிஜேபி அரசால் மேகாலயா மாநிலத்தில் கவர்னராக நியமிக்கப்பட்ட தமிழரான வி.சண்முகநாதன் அங்கு பெண் பித்தினால் பல இழி செயல்கள் செய்து பெயர் கெட்டது, அங்கு கவர்னர் அலுவலக ஊழியர்கள் ஒற்றுமையுடன் ஒன்று திரண்டு பெரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர், அதன் முடிவில் பதவியும் விலகினார் வி.சண்முகநாதன்.
இவர் 1962 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கட்சியில் சேர்ந்தார்.
பிஜேபி கட்சியில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்குப் பல பதவிகள் கொடுக்கப்பட்டன.
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த சையது அகமத் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இவர் 2015 அக்டோபர் 1 முதல் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும் உடனே நியமிக்கப்பட்டார்.
இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வலுவான ஆதாரத்துடன் எழுந்ததைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 அன்று தனது இரண்டு மாநில ஆளுநர் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்தார்.
இப்படிப்பட்ட கவர்னர்கள் எல்லாம் பிஜேபி தரப்பில் இருந்து பதவியை அலங்கரித்துள்ளனர்.
ஆட்டுக்கு தாடி எதற்கு?, நாட்டுக்கு கவர்னர் எதற்கு? எனக் கேட்டவர்கள் நாம், மன்னர் மானியம் ஒழித்ததைப் போல இந்த அலங்கார வெள்ளை யானை பதவியும் ஒழிக்கப்பட வேண்டும்.