ஹேராம் படத்தில், ட்ராமில் சாகேத்ராமும்,அப்யங்கரும் பயணிக்கும் போது சன்னல் வழியே பார்க்கும் சாகேத்ராம்,வெளியே ஒரு பாரவண்டி கவிழ்க்கப்பட்டு மூட்டைகள் சரிந்திருக்க வயிற்றில் குத்தி அறுக்கப்பட்ட காளையின் வயிற்றில் நாய் ஒன்று தஞ்சமடைந்திருப்பதை குறுகுறுவென்ற அருவருப்புடன் பார்ப்பார்,அங்கே நாற்றம் பிடுங்க தன்னிச்சையாக இருவருமே தம் விரல்களால் மூக்கை மூடிக் கொள்வர்,
ஒரு நொடியில் கடக்கும் இக்காட்சி அதிகம் பேசப்படாமல் போனது துரதிர்ஷ்டமானது, அக்காட்சியையும் பிற உலக சினிமா க்ளாசிக் படங்களில் வந்த கோரமும் அதிர்ச்சியும் நிரம்பிய காட்சிகளையும் எளிமையாக தொகுத்துள்ளேன், நினைவுக்கு வர வர இப்பட்டியல் நீளும்
முதலில் Tin Drum (1979)படத்தில் வரும் நீர்யானையின் அறுபட்ட தலைக்குள் விலாங்கு மீன்கள் கூட்டம் தஞ்சம் புகும் காட்சி, இதைப் பார்க்கும் யாருக்கும் வயிற்றை பிறட்டும் என்பது திண்ணம்,
யாரும் தொட முடியாத கற்பனை மற்றும் காட்சியாக்கங்களாக இந்தப் படம் முழுக்க detail களால் நிரம்பியிருக்கும்,
இயக்குனர் Volker Schlöndorff
எத்தனை தத்ரூபமாக,நேர்மையாக , Günter Grass எழுதிய கதையை படமாக்கியிருக்கிறார் என்று வியப்பு மேலிடும்.
அடுத்ததாக Revenant (2015 )படத்தில் வரும் காட்சி, Learnado DiCaprio வெள்ளையும் பழுப்பு நிற புள்ளிகளும் கொண்ட பெரிய குதிரையில் பனிக்காட்டுக்குள் , எதிரிகள் துரத்த சீறிப் பறக்கையில் குதிரையும் இவரும் பெரிய பள்ளத்தில் சிக்கி குதிரை இறந்துவிடும்,
இவர் உடலெங்கும் காயங்களுடன் உயிருடன் இருப்பார், ஆனால் செத்துக்கொண்டே இருப்பார், கடும் பனிப் பொழிவில் இருந்து பிழைக்க ஒரே வழி குதிரையின் வயிற்றுக்குள் தஞ்சமடைவது,
அவர் தாமதியாமல் குதிரையின் வயிற்றைக் கத்தியால் கிழித்து , குடல் ,இரைப்பை,கணையம் என எல்லாவற்றையும் வெளியே எடுத்து கடாசிவிட்டு , அந்த நெஞ்சாங்கூட்டை உடைத்து பிளந்து உள்ளே சென்று, உடம்பு சூட்டில் அடங்கி வயிற்றுத் தோலைப் போர்த்திக் கொள்வார்,classy gruesome scene by Alejandro González Iñárritu.
akira kurisawa வின் yojimbo ( 1961) படத்தில் ஒரு ஊரே கடுமையான வாட்போரில் வெட்டிக் கொண்டு சாவார்கள், அங்கே தெரு நாய் ஒன்று துண்டுபட்ட ஒற்றைக் கையை வாயில் கவ்வி தன் வயிற்றுப்பாட்டிற்கு எடுத்துச் செல்லும், அதை அறுபதுகளில் யோசித்து படத்தில் வைத்திருக்கிறார் பாருங்கள்.
#ஹேராம்,#டின்ட்ரம்,#ரெவனன்ட்,#யோஜிம்போ,#heyram,#tindrum,#revenant, #yogimbo,#gruesome,