கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் கலந்தது தான் சினிமா , விருமாண்டி திரைப்படத்தில் இந்த முதல் காட்சி பாருங்கள், வஜ்ரா என்ற கலவரத்தை அடக்கும் பெரிய கண்ணீர் புகை வீசும் இரட்டைக் குழல் பீரங்கிகள் அமைந்த வேன்,அதன் பின்னால் ஒரு ரிசர்வ் காவல்துறை ஸ்வராஜ் மஸ்தா வேன் என விருமாண்டி படப்பிடிப்புக் குழுவினர் தயார் செய்து கொண்டவர்கள், அப்போது சென்ட்ரல் மத்திய சிறை இயங்கி வந்த பல்லவன் சாலையை ஒட்டிய service சாலையில் இவ்வாகனங்கள் விரைந்து செல்கையில் கீழே பாலத்துக்கு அடியில் தாம்பரம் செல்லும் ரயில் வெளிப்படுகையில், ஒரு ஷாட்டை ரீடேக் எதுவும் இன்றி படம்பிடித்துக் கொண்டார்கள்,
மீண்டும் ஒரு காட்சி எதிரே அரசு மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து இந்த இரு வேன்கள் சிறை வாசலுக்குள் நுழைவது போல பிரமை ஏற்படுத்தி எடுத்துள்ளனர்,எடிட்டர் மேசையில் கமல்ஹாசன் எடிட்டர் ராம் சுதர்ஷனுடன் அமர்ந்து இக்காட்சியை stich செய்து பிரமிப்பூட்டியிருக்கிறார்.
ஓட்டுனர்கள் மற்றும் crew அந்த இரு வேன்களை உள்ளே செக் போஸ்டில் நுழைக்காமல் லாவகமாக திரும்ப எடுத்துக் கொண்டு வந்ததை 17 years of virumandi walkdown the memory lane நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் மற்றும் நடிகர் சிவாஜி பகிர்ந்தார், எத்தனை பெரிய சிறப்பான காட்சியை அனுமதி வாங்காமல் துணிவுடன் சமயோஜிதமாக எடுத்துவிட்டு அடக்கமாகப் பகிர்ந்தார் அவர்.
இது போல ஏற்கனவே மகாநதி திரைப்படத்தில் ஒரு aerial view காட்சியை இவர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் எடுத்து வந்து கிண்டி கேம்ப கோலாவில் அமைத்த சிறைச்சாலை செட்டில் location match செய்து காட்சி அமைத்ததையும் போகிற போக்கில் பகிர்ந்தனர்,
இவர்கள் எல்லாம் unsung heroes, இவர்கள் சாதனைகள் ஊரறிய வேண்டும், இந்த திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்க்கையில் இதற்கு செய்த மெனக்கனல்களை பார்வையாளர்கள் உணரவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன்,
இன்று VFX மற்றும் Digital intermediate, back production பணிகளை வைத்து நம்மால் என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியும், ஆனாலும் பல்லிளித்துவிடும், கண்டுபிடித்து விமர்சிப்போம், ஆனால் அன்று இதை குறையின்றி நிறைவாகச் செய்தார்கள்,அதை பேசியே ஆக வேண்டும்.
#சென்னை_மத்திய_சிறை, #17yearsofvirumaandi,#விருமாண்டி,#கமல்ஹாசன்,#இசைஞானி,#பசுபதி,#நெப்போலியன்,#நாசர்,#அபிராமி,#sn_லட்சுமி,#ரோஹினி,#சண்முகராஜன்,#oak_சுந்தர்,#கு_ஞானசம்பந்தம், ,#பாலாசிங்,#oak_சுந்தர்,#காந்திமதி,#பிரமிட்_நடராஜன்,#பெரியகருப்பத்தேவர்,#சுஜாதா_சிவகுமார்,#ராஜேஷ்,#DOP_கேஷவ்_பிரகாஷ்,#art_பிரபாகர்,#editing_ராம்_சுதர்ஷன்,#கவிஞர்_முத்துலிங்கம்,#நீதிபதி_VR_கிருஷ்ணையர்