எந்த இந்திய குடிமக்களின் சந்தேகத்துக்கிடமான மரணத்துக்குப் பிறகும் கண்டிப்பாக பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்பது சட்டம் ஆகும்,
இயற்கையில்லாத சந்தேகத்திற்குரிய மரணத்தை பிரேத பரிசோதனை செய்யாமல் எரியூட்டுவதோ அடக்கம் செய்வதோ தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்,
இதை இந்திய அரசே காந்தியின் விஷயத்தில் மீறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க
செயல், எனக்கு காந்தியின் இறுதி மரியாதைப் படங்களைப் பார்க்கையில் அந்த மூன்று துப்பாக்கி குண்டு துளைகளை எளிதில் பார்க்கும் வண்ணம் இருக்கும்,
கபாலமும் உடலும் துணியால் இறுக்க மூடாமலிருக்கும் , காந்திக்கு பிரேத பரிசோதனை செய்யவில்லை போலிருக்கிறது என ஊகித்திருந்தேன்.
இதே சந்தேகம் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த ஹேமந்தா பண்டா என்பவருக்கும் எழுந்துள்ளது, அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுதிக் கேட்க, காந்திக்கு அவர் வீட்டார் விருப்பத்துக்கிணங்க பிரேத பரிசோதனை செய்யப்படவில்லையாம், அவரின் முதல் தகவல் அறிக்கை உருதுவில் எழுதப்பட்டிருந்தது, (இந்தி அப்போது தான் பிறந்த குழந்தை)
அந்த முதல் தகவல் அறிக்கையின் மூலப்பிரதியே national archives of India வின் ஆவணக் காப்பில் இல்லையாம், அது எங்கே இருக்கும் என்றும் உறுதியாகத் தெரியவில்லையாம்,
அதன் ஆங்கில மொழியாக்கம் வேண்டுமெனில், டெல்லி, துக்ளக் ரோடு காவல் நிலையம் நேரில் சென்று இலவசமாகப் பெற்றுக் கொள்ள அறிவுருத்தியிருக்கின்றனர்.(குசும்பு)
பிரேத பரிசோதனை இன்றி எப்படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து ,இக்கொலையில் பொருளுதவி செய்தவர்களை அவர்களுக்கு வேண்டியவர்களை தப்பவிட்டு , குற்றத்தை நிரூபித்து குற்றவாளி கோட்சேவுக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்றினர் ? என்று மலைப்பாக இருக்கிறது.தூக்கில் ஏறியிருக்க வேண்டியது கோட்சே மட்டுமா?
67 வருடங்கள் ஆனாலும் அரசு இழைத்த தவறும் தவறு தானே?!!!
இணைப்பில் தகவல் உரிமை ஆணையம் தந்த விளக்கத்தைப் படியுங்கள்.
#காந்தி,#கொலை,#குற்றப்பத்திரிக்கை,