ஹேராம் படத்தில் நாம் பார்த்த direct action day சம்பவங்கள் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்டது,அன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைந்த இந்திய நாடு கேட்டனர், முஸ்லிம் லீக் கட்சியோ வடகிழக்கிலும்,வடமேற்கிலும் என இரு பிரிவினை பிரதேசங்கள் தங்களுக்குக் கேட்டனர்,
ஆங்கிலேய அரசுடனான கடைசிக் கட்ட உடன்படிக்கை பேச்சு வார்த்தையில் சுதந்திர இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம் கூட்டாட்சியை ஏற்படுத்தி விட்டு அவர்களிடம் நாட்டை கொடுக்கலாம் என்று தீர்மானம் ஆனது,
இதை எதிர்த்து ஜின்னாவின் முஸ்லிம் லீக் நாடு முழுக்க பந்த் அறிவித்தது, இஸ்லாமியர்கள் தங்கள் பலத்தை நிரூபனம் செய்யவேண்டும் என்பதே குறிக்கோள், வங்கத்தில் அன்று ஆட்சியில் இருந்தது முஸ்லீம் லீக் கட்சி,அக்கட்சி பத்து வருடங்களாக ஆண்டு கொண்டிருந்தது, அங்கே போலீசார், மாஜிஸ்த்ரேட்கள் என பெரும்பான்மையினர் இஸ்லாமியர், அதன் வங்காள ப்ரீமியர் சுஹ்ராவர்தி ஒரு நிரூபனமான பிரிவினைவாதி,
அவர் ஆங்கிலேய ஆட்சியரிடம் பந்த் அன்று முழு விடுமுறை அறிவிக்க கேட்டு ஆங்கிலேய கவர்னரை அழுத்தம் தர, அதன்படியே விடுமுறை அறிவிக்கப்பட்டு கடைகள் முழுக்க அடைக்கப்பட்டன, அன்று பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுஹ்ராவர்தி மற்றும் பிற தலைவர்களின் பேச்சு பிரிவினையைத் தூண்டுவதாக அமைந்தது,இரும்புத் தடி ,மூங்கில் கழி என தருவிக்கப்பட்டு பாமர மக்களுக்கு வழங்கப்பட்டு நம் கை ஓங்கியிருந்தால் தான் தனி நாடு என்ற பிரிவினைவாத மூளைச் சலவையும் நடந்தது,
தவிர போலீஸ் கன்ட்ரோல் ரூமில் எப்போதும் குடியிருக்கும் வழக்கம் கொண்ட சுஹ்ராவர்த்தி , ரேடியோ ரிசீவர் வழியாக போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தாராம், அதனால் தான் அவரை butcher of Bengal என்றே இன்றும் அழைக்கின்றனர்.
இப்படம் நடந்த வரலாற்றை தான் காட்டியது,ஆகஸ்ட் 16 ஆம் தேதி முழுக்க இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டால் ,ஆகஸ்ட் 17,18 ஆம் தேதி அவர்களுக்கு பதிலடி தருவதற்கு இந்து பிரிவினைவாதிகள்,சீக்கிய பிரிவினைவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர், ஒரு வாரம் வரை பிணங்களைக் கூட அப்புறப்படுத்த முடியவேயில்லை,
வன்முறை காட்டுத்தீயாக நவகாளி உள்ளிட்ட பக்கத்து நகரங்களுக்கு பரவிவிட்டது, கங்கையில் இருந்து பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டம் கூட்டமாக கல்கத்தாவில் தஞ்சம் அடைந்து வீதியில் இரைந்து கிடந்த பிணங்களை சதா கொத்திக் கொண்டிருந்தன,இதை அமெரிக்க பத்திரிக்கையான Life பத்திரிக்கை புகைப்படக்கலைஞர் எடுத்துத் தள்ளிய படங்களில் இருந்து அறியலாம்.
இந்த நீண்ட Post Direct Action Day காட்சியை எடுப்பதற்கு இயக்குனர் கமல்ஹாசன் தேடிப் படித்த நடுநிலையான புத்தகங்கள் எண்ணிலடங்காதது,
direct action day கழிந்து ஒரு வருடத்துக்குப் பின் படத்தின் ஒரு காட்சியில் வங்காள மக்களுடன் சாகேத்ராம் சேர்ந்து கொண்டு வங்காள ப்ரீமியர் வசிக்கும் மாளிகையை முற்றுகை இடுவார்,அங்கே காந்தி பக்ரீத் பண்டிகை சமயத்தில் சமாதானம் மதநல்லிணக்கத்திற்கு வேண்டி வந்து தங்கியிருப்பார் ,
பால்கனியில் சன்னலைத் திறந்து பெங்கால் ப்ரீமியர் சுஹ்ராவர்தியுடன் காந்தியும் தோன்றுவார்,
நாட்டில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என பேசுவார்.
அப்போது சாகேத்ராம் சென்ற வருடம் நடந்த direct action day படுகொலைக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்களா? என ஆத்திரத்துடன் நேரடியாகக் கேட்பார், கூட்டம் ஆமோதிக்கும்.
காந்தி முன்னிலையில் சுஹ்ராவர்தி அந்த துயர சம்பவத்துக்கு எச்சில் விழுங்கிய படி முழுப் பொறுப்பேற்பதாக அறிவிப்பார், காந்தி சுஹ்ராவர்தியை வேதனையுடன் பார்ப்பார்,மக்களைப் பார்த்து இன்னும் என்ன வேண்டும் என சைகை செய்வார்,அதைக் கேட்டு அதுவரை ஒழிக என்று சொன்ன கூட்டம் ,வாழ்க என்று சொல்லிவிட்டு கலையும்,.
அங்கே மறுபடியும் அப்யங்கரும் சாகேத்ராமும் சந்திப்பார்கள், அவர் போலீஸ் தேடுகையில் தப்பிச் சென்றதால் பத்து மாதங்கள் சந்தேக வழக்கில் சிறையில் இருந்ததாகவும் ஒன்றும் நிரூபிக்க முடியாததால் சிறை மீண்டதாகவும் சொல்வார்,
படத்தில் வங்காள ப்ரீமியர் சுஹ்ராவர்த்தியை சாகேத்ராம் சந்திக்கும் மூன்று கதாபாத்திரங்கள் குற்றம் சாட்டுவர், நொடியில் அவை வசனங்களாக கடக்கும்
சாகேத்ராம் பயணிக்கும் கல்கத்தா டாக்சி டிரைவர்,
சாகேத்ராம் வசிக்கும் நீல்கமல் மேன்சனில் வசிக்கும் வயதான தம்பதியரில் அந்த முதிய பெண்மணி
சாகேத் ராம் காப்பாற்றும் சீக்கிய வீட்டுப் பெண் வீட்டில் இருந்து போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு இவர் பேசுகையில் அங்கே போனில் எதிர்புறம் பேசும் ஆங்கிலேய போலீஸ் ஆணையர்,
17 August 1947 Direct Action Day ன் மறுநாள் கல்கத்தா வீதிகளில் எங்கும் முன் இரவு கலவரத்தால் இறந்தவர்கள் பிணங்களின் குவியல், நொடியில் கடக்கும் காட்சிகள் தானே என்று இக்காட்சிகளில் எந்த சிறு மெத்தனமும் காட்டப்படவில்லை,
ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா அது பாட்டிற்கு அலையும்,அது சுழலும் 360 டிகிரியிலும் detailகளால் அக்காட்சி நிரம்பியிருக்கும், முதல் நாள் நர வேட்டையின் போது எதிர்ப்பட்ட ஸ்ரீராம் அப்யங்கர் தான் edit செய்வதாக சொல்லித் தந்த bharath publications தினசரி அலுவலகத்தைத் தேடி சாகேத்ராம் வருகிற காட்சி இது,
ஒரு வங்காளக் குடும்பம் தன் காணாமல் போன உறவினரை வீதியில் வரிசையாக கிடத்தப்பட்ட பிணக்குவியல்களில் தேடும், அங்கே தென்படாமல் போக பிணங்களை வாரிப்போட்டுக்கொண்டு கடக்கும் ஒரு ட்ரக்கின் பின்னால் உள்ள பிணக் குவியல்களில் தேடும்,
அங்கே பாகன் வயிற்றில் கத்தியால் குத்தி குடல்கள் வெளியேறியிருக்க, கையில் அங்குசத்துடன் பிணமான பாகன், அனாதையான யானை,
அங்கே ஒரு நாய் பசியில் அலைந்து திரியும், பசியால் நரமாமிசம் சாப்பிட பழகியிருக்கும், வானம் முழுக்க பிணம் தின்னிக் கழுகுகள் வட்டமிடத் துவங்கும், அங்கே விளக்கு கம்பத்தில் ஒருவரை தூக்கில் ஏற்றிக் கொன்றிருப்பார்கள், அப்யங்கர் இவரை மாடிபடிப்பக்கம் கண்டவர் , என்னையா தேடுகிறாய் ? என்பார்,
ஆம் என்றவரை கைபிடித்து அழைத்துக் கொண்டு தப்புகையில் , நீ ஏன் குளித்து உடை மாறவில்லை? என ரத்தக்கறை படிந்த சட்டையைப் பார்த்தவர் வங்காளத்தில் கேட்க, இவர் கற்றுக் கொண்டிருக்கும் புதிய மொழி ஆதலால் பதில் திணறி தமிழில் பதிலுரைப்பார், இது அத்தனையையும் தன்னிச்சையாக செய்வார்,
அப்போது தான் அப்யங்கர் தமிழா? நானும் தமிழ் தான்,தஞ்சாவூர் மராட்டா என்பார்,அங்கே காரிடாரில் ஒரு பிணம் தொங்கும் ,அங்கே தூண்களில் ஃபேன்ஸி ட்ரெஸ் விளம்பரம், கோல்ட் ஃபில்டர் சிகரட் விளம்பரம், கைரிக்ஷாக்கள்,தீ அணைக்க மாநகராட்சி நிறுவிய் fire hydrantகள்,
shell பெட்ரோல் kiosk என முடிந்தவரை detail களால் நிரப்பி
ஒரு இயக்குனராக கமல்ஹாசன் இந்தக் காட்சிக்கு எப்படி நீதி செய்திருக்கிறார்?, எப்படி தொழிற்நுட்ப கலைஞர்களை ஒருங்கிணைத்துள்ளார்? பாருங்கள் , பிரமிப்பு மிஞ்சுகிறது,
PS: ஹேராம் படத்திற்கு கமல்ஹாசன் சம்பளம் எடுத்துக் கொள்ளாமல் மொத்தம் 16 கோடிகள் ஆகியுள்ளது , அதாவது அசல் 16 கோடிகள் ,இது பற்றி ஒரு பேட்டியில் அவர் சொன்ன பதில் இங்கே.
Q: How much are you pumping into the project?
A: As of now, without my remuneration (smiles) we've budgeted the project at Rs. 16 crores.
#ஹேராம்,#கல்கத்தா,#கமல்ஹாசன்,#heyram,#kamalhaasan,#சுஹ்ராவர்தி,#The_Vultures_of_Calcutta