1967 ஆம் ஆண்டு மவுண்ட் ரோடு ESSO பெட்ரோல் பங்கில் 93 octane என்ற hi speed கார்களுக்கான உயர்வகை பெட்ரோல் கிடைத்துள்ளதை பாருங்கள்,
அன்று நிறைய வெளிநாட்டுக் கார்கள் இருந்ததால் பழுதானால் மீட்டெடுப்பது கடினம்,நிரந்தரமாக ஷெட் தான் கதி, எனவே எல்லா வெளிநாட்டு கார்களுக்கும் இந்த வகை 93 octane தான் நிரப்பி ஓட்டி உள்ளனர்,உள்ளூர் டாக்ஸி, ப்ரீமியர் பத்மினி, அம்பாசடருக்கு சாதா பெட்ரோல்.
இன்று extra premium ,speed போன்ற பெட்ரோல் வகைகளுக்கு முன்னோடி, இன்று இந்த பங்க் தாராபூர் டவர்ஸ் இடப்புறம் HP பெட்ரோல் பங்காக இயங்குகிறது.
நெஞ்சிருக்கும் வரை வெளியாகையில் நடிகர் திலகத்துக்கு பத்மஸ்ரீ தந்திருக்கிறார்கள், அந்த பட்டத்தையும் ரோலிங் டைட்டிலில் சேர்த்துள்ளனர், நடிகர் திலகம்,K.R.விஜயா,முத்துராமன், v.கோபாலகிருஷ்ணன் என யாருக்கும் ஒப்பனை இல்லை.
இயக்குனர் ஸ்ரீதர் அலுவலகத்தில் அப்போது லண்டனில் படித்து வந்த v.s.ஷர்மா என்பவர் ஆபீஸ் நிர்வாகம் பார்த்ததை அறியமுடிகிறது.
இந்திய பாகிஸ்தான் யுத்தம் பற்றிய திரைப்படமாக உருவாக இருந்த படம் ஏழை நாயகன் நண்பனுக்கு தான் ஒருதலையாக விரும்பிய பெண்ணை மணம்முடித்து உயிர் தியாகம் செய்யும் கதையாக மாற்றப்பட்டது.ஒளிப்பதிவு N.பாலகிருஷ்ணன், இதற்கு முந்தைய படமான காதலிக்க நேரமில்லை (1964) வெண்ணிற ஆடை அழகிய ஈஸ்ட்மென் கலருக்கு உதாரணமான வண்ணப்படங்கள் என்றாலும் வறுமையை தாரித்திரத்தை இயல்பாக பிரதிபலிக்க கருப்பு வெள்ளையை தேர்ந்தெடுத்தார் இயக்குனர் ஸ்ரீதர்.
உட்புற படப்பிடிப்பு செலவை கட்டுக்குள் வைத்தது ஆனால் அவை அட்டை, துணித் திரை,சமூக வரலாற்றுக்கு,திரை வரலாற்றுக்கு எந்த வகையிலும் அந்த அரங்க பின்னணி உதவுவதில்லை,மலினமான பின்னணி லயிப்பை தருவதில்லை, என்பதால் நான் sets ஐ விரும்புவதில்லை., இது போல படப்பிடிப்புகள் பொதுவில் நடந்தால் நம் சமூக மாற்றத்தின் காலக்கண்ணாடியாக அவை விளங்கும் என்பது திண்ணம்.