The Zone Of Interest தி ஸோன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் 2023

2023 ஆம் ஆண்டு வெளியான "தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்" திரைப்படம் உலக சினிமா வரலாற்றில்  மிக முக்கியமான படைப்பாகும். 

மார்ட்டின் அமிஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வரலாற்றுத் திரைப்படம் மனிதகுலத்தின் இருண்ட பக்கமான ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் பின்னணியில் ஒரு சாதாரணக் குடும்பத்தின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது.

 ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இனப்படுகொலையை நேரடியாகக் காட்டாமல் அதன் கொடூரத்தை உணரவைத்த விதத்தில் இந்தப் படம் ஒரு மேதமை நிறைந்த படைப்பாகக் கருதப்படுகிறது.

 இயக்குனர் ஜோனாதன் கிளேசர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் உழைத்து இந்தத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

உலக சினிமா மேதமையுடனான விமர்சனமாக இந்தப் படம் பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணம் அது கையாளும் பாணி ஆகும். பொதுவாகப் போர்க்காலத் திரைப்படங்கள் வன்முறையைத் திரையில் காட்டி பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்யும்.

 ஆனால் இந்தப் படம் அந்த வன்முறையை ஒரு செங்கல் சுவருக்குப் பின்னால் மறைத்து வைத்துவிடுகிறது. ஒரு பக்கம் ஒரு குடும்பம் அழகிய தோட்டத்தில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் புகைபோக்கிகளில் இருந்து வரும் கரும்புகையும் துப்பாக்கிச் சத்தங்களும் அந்த இடம் ஒரு நரகம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. 

இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையிலான முரண்பாடுதான் இந்தப் படத்தின் ஆன்மாவாக இருக்கிறது.

இயக்குனர் ஜோனாதன் கிளேசர் இந்தப் படத்தை ஒரு ஆவணப்படம் போன்ற துல்லியத்துடன் படமாக்கியுள்ளார். 

இதற்காக ஆஷ்விட்ஸ் முகாமிற்கு அருகிலேயே ஒரு வீட்டை உருவாக்கி அதில் பத்து ரகசியக் கேமராக்களைப் பொருத்தி நடிகர்கள் இயல்பாக வாழ அனுமதிக்கப்பட்டனர்.

 படப்பிடிப்பு குழுவினர் அந்த இடத்தில் இல்லாமல் தொலைவில் இருந்து கேமராக்களைக் கண்காணித்தனர். 

இந்த பிக் பிரதர் பாணியிலான படமாக்கம் நடிகர்களின் நடிப்பில் ஒரு அசாத்தியமான எதார்த்தத்தைக் கொண்டுவந்தது. 

லூகாஸ் சால்  என்பவரின் ஒளிப்பதிவு செயற்கை விளக்குகளைத் தவிர்த்து இயற்கையான ஒளியிலேயே மொத்தப் படத்தையும் காட்சிப்படுத்தியது. 

இருட்டு நேரக் காட்சிகளுக்காக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெப்ப உணர் கேமராக்கள் (Thermal imaging cameras) பயன்படுத்தப்பட்டன. 

இது படத்தில் ஒரு கனவுத்தன்மையையும் அதே சமயம் ஒரு பதற்றத்தையும் உருவாக்குகிறது.

 ருடால்ப் ஹோஸாக நடித்த கிறிஸ்டியன் ஃபிரீடல்  மற்றும் அவரது மனைவி ஹெட்விக்காவாக நடித்த சாண்ட்ரா ஹல்லர் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. 

அவர்கள் இருவருமே ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்துவிட்டு எவ்வித குற்ற உணர்வும் இன்றி வாழும் மனிதர்களாகத் தங்களை உருமாற்றிக் கொண்டனர்.

 குறிப்பாக சாண்ட்ரா ஹல்லர் அந்த வீட்டின் ராணியாகத் தன்னை நினைத்துக்கொண்டு அதிகாரத்தோடு நடமாடும் விதம் அசாத்தியமானது.

 அவர்கள் ஒருபோதும் தங்களை வில்லன்களாகக் காட்டிக்கொள்ளவில்லை. மாறாகத் தங்களின் கடமையைச் செய்யும் சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்தனர். 

இதுதான் பார்வையாளர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மைகா லெவி  இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்ற படங்களைப் போல உணர்ச்சிகளைத் தூண்டுவதாக இல்லாமல் ஒரு தொழில்நுட்ப ரீதியான எச்சரிக்கையாகவே ஒலிக்கிறது. 

ஜானி பர்ன்  உருவாக்கிய ஒலிக்கலவை இந்தப் படத்தின் மற்றொரு தூண் ஆகும். திரையில் நாம் காணும் அமைதிக்கு மாறாகப் பின்னணியில் கேட்கும் எந்திரங்களின் சத்தம் மற்றும் அலறல்கள் ஒரு நிமிடம் கூட நம்மை நிம்மதியாக இருக்க விடுவதில்லை. 

இந்த ஒலிக் கோப்புதான் இந்தப் படத்தை ஒரு முழுமையான அனுபவமாக மாற்றுகிறது.

2023 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம் அங்கு கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. 

அதைத் தொடர்ந்து உலகெங்கும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படம் 96 ஆவது அகாடமி விருதுகளில் சிறந்த சர்வதேசத் திரைப்படம் மற்றும் சிறந்த ஒலிக்கலவை ஆகிய இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது.

 பிரிட்டிஷ் அகாடமி விருதுகளிலும் பல முக்கிய அங்கீகாரங்களைப் பெற்றது. 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இது தற்போதே பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஒரு வரலாற்று நிகழ்வை நிகழ்காலத்தின் கண்ணாடியாக மாற்றிய விதத்தில் இந்தப் படம் உலக சினிமா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

இந்தத் திரைப்படத்தின் அடிநாதம் என்பது தீமையின் இயல்புநிலை மற்றும் மனித மனசாட்சியின் மரத்துப்போன தன்மையாகும். 
ஒரு மிகப்பெரிய கொடூரம் அரங்கேறிக் கொண்டிருக்கும்போது அதற்கு மிக அருகிலேயே எவ்வித சலனமும் இன்றி ஒரு குடும்பம் தனது அன்றாட வாழ்க்கையை மிகச் சாதாரணமாக வாழ்வதே இந்தப் படத்தின் மையக்கரு கருவாகும். 

ருடால்ப் ஹோஸ் (கிறிஸ்டியன் ஃபிரீடல்) மற்றும் ஹெட்விக் (சாண்ட்ரா ஹல்லர்) தங்களின் வீட்டை ஒரு சொர்க்கமாக மாற்றியிருக்கிறார்கள். 

அந்த வீட்டின் ஒரு பக்கச் சுவருக்கு அப்பால் ஆயிரக்கணக்கான மனிதர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அந்த மரண ஓலங்கள் எதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் விளையாடுவதும் தோட்டம் வளர்ப்பதும் விருந்து வைப்பதுமாக இருக்கிறார்கள். 

தீமை என்பது எப்போதுமே கொடூரமான முகத்தோடு வருவதில்லை அது ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் முகமூடி அணிந்தும் வரலாம் என்பதை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது.

இந்தத் திரைப்படத்தின் மற்றொரு முக்கிய அடிநாதம் கவனத்தைத் திசைதிருப்புதல் மற்றும் வசதியான கள்ள மௌனம் ஆகும். அந்தத் தோட்டத்துச் சுவர் என்பது வெறும் செங்கல் சுவர் மட்டுமல்ல அது மனித நேயத்திற்கும் அதிகார போதைக்கும் இடையே எழுப்பப்பட்ட ஒரு தடுப்புச் சுவர். 

தனக்குச் சாதகமான விஷயங்களை மட்டும் பார்த்துக் கொண்டு மற்றவர்களின் துயரத்தை முற்றிலும் புறக்கணிக்கும் ஒரு சராசரி மனிதனின் மனநிலையை இந்தப் படம் பிரதிபலிக்கிறது. 

தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் மலர்களுக்குக் கைதிகளின் சாம்பலை உரமாகப் பயன்படுத்தும் ஹெட்விக்கின் கதாபாத்திரம் மனித நேயம் எவ்வளவு தூரம் அழுகிப் போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

 இந்தப் படம் அதிகாரத்தின் பெயரால் செய்யப்படும் வன்முறையை விட அந்த வன்முறையை ஒரு வேலையாகப் பார்த்து எவ்வித உறுத்தலும் இன்றிச் செயல்படும் அந்த இயந்திரத்தனமான மனநிலையைத் தான் அதிகம் விமர்சிக்கிறது. 

ருடால்ப் ஹோஸ் தான் செய்யும் கொலைகளை ஒரு நிர்வாகச் செயல்பாடாகவே பார்க்கிறான். அவனது உடல் எடுக்கின்ற அந்த வாந்தி அவனது ஆன்மா அடைந்திருக்கும் வீழ்ச்சியை அவனுக்கு உணர்த்துகிறது.

 அதிகாரம் மற்றும் வசதிக்காகத் தனது சக மனிதர்களின் மீதான இரக்கத்தை இழந்து வாழும் ஒவ்வொருவரும் இந்தத் தீமையின் ஒரு பகுதிதான் என்பதே இந்தப் படம் உலகுக்குச் சொல்லும் கசப்பான செய்தி.

இயக்குநர் ஜோனாதன் கிளேசர் மார்ட்டின் அமிஸ் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தைத் தொடங்கினாலும் அதில் உள்ள கற்பனைப் பாத்திரங்களைத் தவிர்த்துவிட்டு உண்மையான வரலாற்று மாந்தர்களான ருடால்ப் ஹோஸ் மற்றும் ஹெட்விக் ஆகியோரின் வாழ்க்கையைத் திரையில் கொண்டு வர முடிவு செய்தார்.

 இதற்காக இரண்டு ஆண்டுகள் ஆஷ்விட்ஸ் அருங்காட்சியகம் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டார்.

 தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் அந்த வீட்டில் வேலை செய்தவர்கள் அளித்த சாட்சியங்களைத் திரட்டி ஒவ்வொரு காட்சியையும் செதுக்கினார். 

குறிப்பாக வரலாற்றாசிரியர் திமோதி ஸ்னைடர் எழுதிய பிளாக் எர்த் (Black Earth) என்ற புத்தகத்தை ஒரு முக்கிய வழிகாட்டியாக அவர் பயன்படுத்தினார்.

திரைப்படத்தின் ஒரு முக்கிய அங்கமாக வரும் அந்தப் போலந்து நாட்டுச் சிறுமியின் கதாபாத்திரம் அலெக்சாண்ட்ரா பைஸ்ட்ரோன் கோலோட் ஜீஜிக் (Aleksandra Bystroń-Kołodziejczyk) என்ற உண்மையான பெண்ணின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது. 

16 வயதே ஆன அந்தச் சிறுமி தனது மிதிவண்டியில் சென்று கைதிகளுக்கு ஆப்பிள் பழங்களை மறைத்து வைத்து உதவியவர். படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட அந்த மிதிவண்டியும் அந்த நடிகை அணிந்திருந்த உடையும் அந்தப் பெண் நிஜத்தில் பயன்படுத்தியவையே ஆகும்.

 ஆஷ்விட்ஸ் முகாமில் கைதியாக இருந்த ஜோசப் வுல்ஃப் என்பவர் இசையமைத்த ஒரு பாடலை அந்தச் சிறுமி பியானோவில் வாசிக்கும் காட்சி ஒரு ஆழமான குறியீடாகப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒலிக் கோப்பிற்காக ஜானி பர்ன் 600 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான ஆவணத்தைத் தயாரித்தார். அதில் முகாமின் வரைபடம் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் துப்பாக்கிகள் மற்றும் மனிதர்களின் அலறல் சத்தங்கள் என ஒவ்வொன்றையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்தார். 

2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்ட மனிதக் குரல்களை ஆஷ்விட்ஸ் முகாமில் புதிதாக நுழையும் கைதிகளின் குரல்களாகப் பயன்படுத்தினார். 

அதேபோல் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மதுக்கடைகளில் பதிவான சத்தங்களை முகாம் அதிகாரிகளின் குதூகலச் சத்தங்களாக மாற்றினார்.

 பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியாத அந்த நரகத்தை வெறும் ஒலியின் மூலமே ஒரு வருடம் உழைத்துக் கட்டமைத்தார்.

படத்தின் இறுதி காட்சியில் ருடால்ப் ஹோஸ் படிக்கட்டுகளில் இறங்கும்போது எடுக்கும் அந்தத் தொடர் வாந்தி தி ஆக்ட் ஆஃப் கில்லிங்  என்ற ஆவணப்படத்தின் தாக்கத்தால் உருவானது.

 அந்த ஆவணப்படத்தில் ஒரு கொலையாளி தனது பழைய குற்றங்களை ஒப்புக்கொள்ளும் இடத்தில் இதேபோன்ற உடல் உபாதைக்கு உள்ளாவார்.

 அந்த உத்தியையே கிளேசர் இங்கு பயன்படுத்தியுள்ளார்.  2016 ஆம் ஆண்டிலேயே இப்படத்தின் இசைப் பணிகளைத் தொடங்கிய மைகா லெவி மனிதக் குரல்களையும் சிந்தசைசர் கருவியையும் இணைத்து ஒரு புதுமையான ஒலியை உருவாக்கினார். 

இது ஒரு நவீன , பழமையான உணர்வை ஒரே நேரத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டிடக்கலை நுணுக்கங்களும் அந்த வீட்டின் அமைப்பும் ஒரு பொறியியல் ரீதியான துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 ருடால்ப் ஹோஸ் தங்கியிருந்த உண்மையான இல்லம் தற்போது ஒரு தனியார் குடியிருப்பகமாக இருப்பதால் படப்பிடிப்பிற்காக அதே போன்ற ஒரு பாழடைந்த கட்டிடத்தை படக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர். 

அந்த வீட்டை அப்படியே ஹோஸின் இல்லமாக மாற்றும் பணியில் கலை இயக்குனர் கிறிஸ் ஓடி பல மாதங்கள் உழைத்தார். 

1943 ஆம் ஆண்டில் அந்த வீடு எப்படிப் புதிதாக இருந்திருக்குமோ அதே போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டு வர நவீன கட்டுமான உத்திகள் பயன்படுத்தப்பட்டன.

 குறிப்பாக அந்த வீட்டின் பூந்தோட்டம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே பயிரிடப்பட்டது. அப்போதுதான் படப்பிடிப்பு தொடங்கும் போது செடிகளும் கொடிகளும் செழிப்பாக வளர்ந்து ஒரு சொர்க்கத்தைப் போன்ற தோற்றத்தைத் தரும் என்பதால் இந்தத் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

அந்நாட்களில் ஆஷ்விட்ஸ் முகாமின் கட்டிடங்கள் எப்படி இருந்தன என்பதைத் துல்லியமாகக் காட்ட கணினி வழி வரைகலை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

 காலப்போக்கில் சிதைந்து போன அந்த முகாமின் கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்கள் டிஜிட்டல் முறையில் மீண்டும் உருவாக்கப்பட்டன.

 படத்தின் ஒளிப்பதிவாளர் லூகாஸ் சால் சோனி வெனிஸ்  ரக டிஜிட்டல் கேமராக்களையும் லைக்கா லென்ஸ்களையும் பயன்படுத்தி காட்சிகளைப் பதிவு செய்தார். 

அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டன. இது ஒரு ரியாலிட்டி ஷோ போன்ற உணர்வைத் தருவதற்காகவும் நடிகர்கள் கேமராவைப் பார்க்காமல் இயல்பாக நடமாடுவதற்காகவும் செய்யப்பட்ட ஒரு நவீன உத்தியாகும்.

இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற ஏ24  நிறுவனம் இதனை உலகெங்கும் கொண்டு சேர்த்தது. 2023 ஆம் ஆண்டு மே மாதம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட பிறகு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவிலும் பிப்ரவரி 2024 இல் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் போலந்திலும் இப்படம் வெளியானது. 

105 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் சுமார் 52 மில்லியன் டாலர்களை வசூலித்து ஒரு மாபெரும் வணிக வெற்றியைப் பெற்றது. 

ஒரு வரலாற்றுத் திரைப்படம் வெறும் ஆவணப்படமாக இல்லாமல் ஒரு கலைப் படைப்பாகவும் அதே சமயம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும் என்பதை இந்தப் படம் நிரூபித்தது. 

குறிப்பாக அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.

 இப்படத்தின் இயக்குனர் ஜோனாதன் கிளேசர் ஆஸ்கார் மேடையில் ஆற்றிய உரை பெரும் விவாதங்களை உருவாக்கியது. 

மனித நேயத்தை இழந்த ஒரு சமூகம் எத்தகைய அழிவைச் சந்திக்கும் என்பதைத் தனது படத்தின் மூலம் காட்டிய அவர் தற்காலப் போர்ச் சூழல்களையும் அதனுடன் ஒப்பிட்டுப் பேசினார். 

யூதராக இருந்துகொண்டே அவர் ஆற்றிய அந்த உரை உலகளாவிய கவனத்தைப் பெற்றது. இந்தப் படம் வெறும் கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல அது இன்றைய காலத்தின் மனசாட்சியையும் கேள்வி கேட்கும் ஒரு கருவியாகவே பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை:-

1943 ஆம் ஆண்டு ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமின் கட்டளை அதிகாரியாக இருக்கும் ருடால்ப் ஹோஸ் (கிறிஸ்டியன் ஃபிரீடல்) அந்த முகாமிற்கு மிக அருகிலேயே ஒரு சொகுசான இல்லத்தில் தனது மனைவி ஹெட்விக் (சாண்ட்ரா ஹல்லர்) மற்றும் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறான். 

அந்த வீட்டின் ஒரு சுவருக்கு அப்பால் நரகமே நடந்து கொண்டிருந்தாலும் இந்த குடும்பம் ஒரு பூஞ்சோலையில் இருப்பதை போன்றே வாழ்கிறது. 

ருடால்ப் தனது குழந்தைகளை ஆற்றுக்கு அழைத்துச் சென்று நீந்த வைக்கிறான். ஹெட்விக் தனது வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பதில் கவனமாக இருக்கிறாள். 

முகாமில் கொல்லப்படும் யூதர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உயர்ந்த ஆடைகளும் உடமைகளும் இந்தக் குடும்பத்திற்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

 அவர்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் துப்பாக்கிச் சத்தம் மற்றும் அலறல் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. 

ஆனால் அந்த ஒலிகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்கிறார்கள்.

அந்த முகாமில் பிணங்களை எரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய நவீன இயந்திரங்களுக்கு ருடால்ப் ஒப்புதல் அளிக்கிறான். 

ஒருமுறை ஆற்றில் குளிக்கும்போது மனித எலும்புகள் மிதந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தனது குழந்தைகளை அவசரமாக வெளியேற்றுகிறான்.

 அதேபோல் முகாம் எல்லைகளில் இருக்கும் பூச்செடிகள் புகைபோக்கியில்  புகையில் இருந்து வரும்  பிணச் சாம்பலால் சேதமடைவதைக் கண்டு அங்கிருக்கும் அதிகாரிகளைக் கண்டிக்கிறான். 

இரவு நேரங்களில் ருடால்ப் தனது மகள்களுக்கு கதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு போலந்து நாட்டுச் சிறுமி (ஜூலியா போலாசெக்) ரகசியமாக கைதிகள் வேலை செய்யும் இடங்களில் கிடைத்த  உணவைக் கொண்டு போய்  ஆங்காங்கே வைக்கிறாள்.

ஹெட்விக்கின் தாய் தங்குவதற்காக அங்கு வருகிறாள். தனது மகள் அடைந்திருக்கும் செல்வச் செழிப்பைக் கண்டு அவள் வியக்கிறாள். 

இதற்கிடையில் ருடால்ப்பிற்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அவன் பெர்லின் நகருக்கு அருகே இருக்கும் ஓரானியன்பர்க் பகுதிக்கு மாற்றப்படுகிறான். 

ஆனால் தனது சொகுசு வாழ்க்கையை இழக்க விரும்பாத ஹெட்விக் அங்கேயே தங்குவதற்கு பிடிவாதம் பிடிக்கிறாள்.

 இதனால் ருடால்ப் மட்டும் பெர்லின் செல்கிறான். அங்கு சென்ற பின் ஹங்கேரிய யூதர்களைக் கொல்வதற்காக ருடால்ப் என்ற பெயரிலேயே ஒரு புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. 

இதன் மூலம் 700,000 யூதர்களைக் கொல்லும் பொறுப்பை ஏற்று அவன் மீண்டும் ஆஷ்விட்ஸ் முகாமிற்குத் திரும்புகிறான்.

ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் ருடால்ப் அங்கிருக்கும் அனைவரையும் எப்படி விஷவாயு செலுத்தி எளிமையாக திறமையாகக் கொல்லலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். 

அவன் பெர்லின் அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது இருட்டில் எதையோ பார்த்து மீண்டும் மீண்டும் வாந்தி எடுக்கிறான். 

அந்தத் தருணத்தில் காட்சி 1944 ஆம் ஆண்டிலிருந்து இன்றைய காலத்திற்கு மாறுகிறது. தற்போதைய ஆஷ்விட்ஸ் அருங்காட்சியகத்தை ஊழியர்கள் சுத்தம் செய்யும் காட்சிகள் காட்டப்படுகின்றன.

 மனித வரலாற்றின் மிகப்பெரிய வன்முறை நடந்த அந்த இடம் இப்போது ஒரு அமைதியான நினைவிடமாக மாறியிருப்பதை இது உணர்த்துகிறது. 

மீண்டும் பழைய காலத்திற்கு வரும் காட்சி ருடால்ப் இருண்ட படிக்கட்டுகளில் இறங்கிச் செல்வதோடு நிறைவடைகிறது.

ருடால்ப் ஹோஸ் ஒரு அதிகாரியாகத் தனது கடமையை மிகச் சரியாகச் செய்வதாகவே நம்புகிறான். 700,000 ஹங்கேரிய யூதர்களைக் கொல்லும் ஆக்ஷன் ஹோஸ் திட்டத்தை அவன் ஒரு சாதனையாகப் பார்க்கிறான். 

பெர்லினில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கூட அங்கிருக்கும் நபர்களை எப்படித் திறமையாகக் கொல்லலாம் என்றுதான் அவன் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். 

அவனது மூளை ஒரு இயந்திரத்தைப் போலக் கொலைகளைத் திட்டமிட்டாலும் அவனது உடல் அந்தப் பாவத்தின் சுமையைத் தாங்க முடியாமல் தவிக்கிறது.

 அவன் படிக்கட்டுகளில் இறங்கும்போது ஏற்படும் அந்தத் தொடர் வாந்தி அவனது ஆழ்மனதின் தார்மீக வீழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

அவன் படிக்கட்டுகளில் நின்று இருளைப் பார்க்கும் அந்தத் தருணத்தில் காட்சி இன்றைய காலத்திற்கு மாறுகிறது.

 தற்போதைய ஆஷ்விட்ஸ் அருங்காட்சியகத்தில் இருக்கும் கண்ணாடிப் பெட்டிகள் காலணிகள் மற்றும் ஆடைகளை ஊழியர்கள் சுத்தம் செய்வதை நாம் பார்க்கிறோம். 

இது ருடால்ப் செய்த கொடுமைகளின் நேரடிச் சாட்சியாக அங்கே எஞ்சியிருப்பவை. அவன் செய்த அந்தப் பயங்கரமான செயல்கள் வரலாற்றில் ஒரு வடுவாக மாறப்போவதை அவன் ஒரு கணம் அந்த இருட்டில் உணர்வது போன்றே அந்த வாந்தி எடுக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் வன்முறையைத் திரையில் காட்டாமலேயே அதன் கொடூரத்தை நமக்கு உணர்த்துகிறது. அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள் மற்றொரு பக்கத்தில் மரண ஓலங்கள் கேட்கின்றன.

 ருடால்ப்பின் மனைவி அந்தச் சுவருக்குப் பின்னால் நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் தனது சொகுசு வாழ்க்கையிலேயே குறியாக இருக்கிறாள். 

மனித நேயம் அறவே அற்றுப்போன ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை இந்தப் படம் தோலுரித்துக் காட்டுகிறது.

இறுதியில் அந்த இருண்ட படிக்கட்டுகளில் அவன் இறங்கிச் செல்வது அவன் செய்த பாவங்களின் இருளில் அவன் மூழ்குவதைக் குறிக்கிறது. 

அவனது உடல் எடுத்த அந்த வாந்தி அவனது ஆன்மா அடைந்த அழுகிய நிலையின் வெளிப்பாடாகும். அவன் ஒரு சிறந்த அதிகாரியாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவனது இயற்கை உணர்வு அவன் ஒரு கொலையாளி என்பதை அவனுக்கு நினைவுபடுத்துகிறது.

இந்தத் திரைப்படம் நமக்கு சொல்லும் செய்தி மிகவும் ஆழமானது மற்றும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. 

இந்தத் திரைப்படம் தீமை என்பது பயங்கரமான உருவத்தோடுதான் வரும் என்பதில்லை அது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் உருவத்திலும் வரலாம் என்பதைச் சொல்கிறது. 

ருடால்ப் ஹோஸ் ஒரு கொடூரமான அரக்கனாகக் காட்டப்படவில்லை. அவன் தனது குழந்தைகளிடம் அன்பாக இருக்கும் ஒரு தந்தை தனது மனைவியுடன் தோட்டத்தில் உலா வரும் ஒரு சாதாரண மனிதன். 

ஆனால் அதே கைகளால் அவன் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் திட்டங்களைத் தீட்டுகிறான்.

 ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்க்கையைச் செய்துகொண்டே எப்படி இவ்வளவு பெரிய கொடூரத்தை எவ்வித உறுத்தலும் இன்றி செய்ய முடிகிறது என்பதையே இந்தப் படம் சுட்டிக்காட்டுகிறது.

ருடால்ப்பின் மனைவி ஹெட்விக் அந்தச் சுவருக்குப் பின்னால் நடக்கும் மரண ஓலங்களை நன்றாகவே அறிவாள். ஆனாலும் அவளுக்குத் தேவையானது அந்தச் சொகுசு இல்லமும் அதிகாரமும் மட்டுமே. 

தனது வசதிக்காக மற்றவர்களின் மரணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத மனித மனத்தின் உச்சகட்ட சுயநலத்தை இந்தப் படம் காட்டுகிறது. அந்தத் தோட்டத்துச் சுவர்  வெறும் செங்கல் சுவர் அல்ல அது மனித நேயத்திற்கும் அதிகார போதைக்கும் இடையே இருக்கும் ஒரு திரை. 

அந்தத் திரையை விலக்காமல் தங்களுக்குச் சாதகமான ஒரு போலி உலகத்தை அவர்கள் கட்டமைத்துக் கொள்கிறார்கள்.

ருடால்ப் தனது மூளையினால் கொலைகளை நியாயப்படுத்தினாலும் அவனது உடல் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. அவன் படிக்கட்டுகளில் வாந்தி எடுக்கும் காட்சி அதைக் காட்டுகிறது ,  மனிதன் எவ்வளவுதான் தனது மனசாட்சியை அடக்கி வைத்தாலும் அவனது இயற்கை உணர்வு அவன் செய்யும் பாவத்தைச் சுட்டிக்காட்டி விடும்.

 அவன் செய்த செயல்களின் சாட்சியாக இன்று அந்த இடம் ஒரு அருங்காட்சியகமாக மாறியிருப்பதை இன்றைய காலக் காட்சிகளின் மூலம் இயக்குநர் உணர்த்துகிறார் இயக்குனர்.

 அதிகாரம் அழியும் ஆனால் செய்த பாவங்கள் வரலாற்றில் அழியாத வடுகளாக நிற்கும் என்பதே இதன் செய்தி.

கேட்காத சத்தங்களின் வலி மற்றும்
திரையில் வன்முறை எங்குமே காட்டப்படுவதில்லை. ஆனால் பின்னணியில் கேட்கும் துப்பாக்கிச் சத்தங்கள் அலறல்கள் மற்றும் எரியும் புகையின் நிறம் ஆகியவற்றின் மூலம் அந்தப் பயங்கரத்தை நம் மனதிற்குள் கடத்துகிறார்கள். 

ஒரு சமூகத்தில் அநீதி நடக்கும்போது அதைக் கண்டும் காணாமல் தனது சொந்த இலாபத்திற்காக வாழும் ஒவ்வொருவரும் அந்த அநீதிக்குத் துணை போகிறார்கள் என்ற கசப்பான உண்மையை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (220) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)