Anora அனோரா 2024

அனோரா திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அமெரிக்கத் திரைப்படங்களில் ஒன்று.

 ஷான் பேக்கர் எழுதி இயக்கி தயாரித்துத் தொகுத்த இத்திரைப்படம் நியூயார்க்கின் பிரைட்டன் பீச் பகுதியில் வசிக்கும் அனோரா என்கிற அனி என்ற ஆடை அவிழ்ப்பு நடனக் கலைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. 

ஒரு ரஷியக் கோடீஸ்வரரின் மகனை அவர் திருமணம் செய்வதும் அதைத் தொடர்ந்து ஏற்படும் அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளுமே இப்படத்தின் கதைக்களம்.

 உலக சினிமா மேதைகள் கையாண்ட கிளாசிக் முறையிலான திரைக்கதை அமைப்பையும் சமகாலத் தன்மையையும் இப்படம் ஒருசேரக் கொண்டுள்ளது.

 லூபிட்ச் அல்லது ஹோவர்ட் ஹாக்ஸ் போன்ற ஜாம்பவான்களின் பட அமைப்பை நினைவூட்டும் அதே வேளையில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு புதிய அனுபவத்தைத் தருவதாகப் புகழ்பெற்ற இயக்குநர்கள் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் ஷான் பேக்கர் விளிம்புநிலை மனிதர்களின் கதைகளைத் திரையில் கொண்டு வருவதில் வல்லவர். பாலியல் தொழில் சார்ந்த வாழ்வாதாரத்தின் மீதான சமூக இழிவை நீக்கும் நோக்கில் இக்கதையை அவர் உருவாக்கியுள்ளார்.

 உண்மைச் சம்பவங்கள் மற்றும் தனது நண்பரின் அனுபவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வர்க்கப் போராட்டம் மற்றும் மனித உணர்வுகளை மிக யதார்த்தமாகப் பிரதிபலிக்கிறது.

 நியூயார்க்கின் புரூக்ளின் மற்றும் லாஸ் வேகஸ் பகுதிகளில் 37 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. கோடக் 35 மிமீ பிலிமில் அனமார்பிக் லென்ஸ்களைப் பயன்படுத்தி 1970களின் க்ரைம் டிராமா பாணியில் இதன் ஒளிப்பதிவு அமைக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக 25 நிமிடங்கள் நீளும் அந்த வீட்டு அத்துமீறல் காட்சி மட்டும் 10 நாட்கள் படமாக்கப்பட்டது படத்தின் நுணுக்கமான உழைப்பிற்குச் சான்றாகும்.

இத்திரைப்படம் 2024 மே மாதம் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு 10 நிமிடங்கள் எழுந்து நின்று வழங்கப்பட்ட பாராட்டுதல்களுடன் பாம் டி ஆர் விருதை வென்றது.

 அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் அமெரிக்காவில் வெளியாகி 6 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாகி 59.3 மில்லியன் டாலர் வசூலித்துச் சாதனை படைத்தது. 

 மைக்கி மேடிசன் அனோரா கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இதற்காக அவர் ரஷிய மொழியைக் கற்றதோடு புரூக்ளின் வட்டார வழக்கையும் பயின்றுள்ளார்.

 மார்க் எய்டெல்ஸ்டைன் வன்யாவாகவும் யுரா போரிசோவ் ஈகராகவும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளனர். 

ஈகர் கதாபாத்திரம் படத்தின் இறுதியில் காட்டும் அந்த மென்மையான மனிதநேயம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 ராபின் ஷூல்ஸ் மற்றும் டி ஏ டி யு போன்றவர்களின் பாடல்கள் படத்தின் சூழலுக்கு ஏற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 இப்படத்தின் ஒட்டுமொத்தத் தொகுப்புப் பணியையும் இயக்குநரே செய்துள்ளார். விருதுகள் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

 97வது அகாடமி விருதுகளில் சிறந்த படம் சிறந்த இயக்குநர் சிறந்த நடிகை சிறந்த அசல் திரைக்கதை மற்றும் சிறந்த படத்தொகுப்பு என ஐந்து ஆஸ்கார் விருதுகளை அனோரா வென்றது. 

கான் விழாவின் உயரிய விருதையும் ஆஸ்கார் விருதையும் ஒரே ஆண்டில் வென்ற மிகச் சில படங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.

ஷான் பேக்கரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்து உலக அளவில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

இயக்குநர் ஷான் பேக்கர் இந்தப் படத்தின் நாயகி மைக்கி மேடிசனை ஒரு நேர்காணல் கூட செய்யாமல் நேரடியாக ஒப்பந்தம் செய்தார். இதற்காக மைக்கி மேடிசன் ஓராண்டு காலம் ரஷிய மொழியைத் தீவிரமாகப் பயின்றதோடு புரூக்ளின் பகுதியில் உள்ள கிளப்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நடனக் கலைஞர்களின் உடல்மொழி மற்றும் பேச்சுவழக்கை உள்வாங்கிக் கொண்டார்.

 படத்தின் மிக முக்கியமான காட்சியாகக் கருதப்படும் அந்த 25 நிமிட வீட்டு ஊடுருவல் பகுதியை மட்டும் படமாக்க 10 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வன்யாவின் பிரம்மாண்ட மாளிகையாகக் காட்டப்படும் இடம் உண்மையில் ரஷியத் தொடர்புடைய ஒரு பெரும் கோடீஸ்வரருக்குச் சொந்தமான மில் பேசின் பகுதியில் உள்ள நிஜமான மாளிகையாகும்.

தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் டிஜிட்டல் கேமராக்களுக்குப் பதில் 35 மிமீ பிலிமில் அனமார்பிக் லென்ஸ்களைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்டது. 1970களின் கிளாசிக் படங்களான தி பிரஞ்சு கனெக்ஷன் பாணியில் இதன் ஒளிப்பதிவு அமைய வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்தார். 

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அலெக்ஸ் கோகோ கிளப் காட்சிகளுக்கான இசையை அமைக்கும் டிஜே நிபுணராகவும்  பணியாற்றினார். 

ஆபாச முத்திரை குத்தப்படும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வியலை ஒரு மனிதநேயப் பார்வையில் அணுகுவதற்காக ஷான் பேக்கர் அந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துப் படமாக்கினார்.

விருதுகளில் அனோரா ஒரு அபூர்வமான சாதனையைப் படைத்துள்ளது. கான் திரைப்பட விழாவின் உயரிய விருதான பாம் டி ஆர் மற்றும் ஆஸ்கார் விருதான சிறந்த படம் ஆகிய இரண்டையும் வென்ற உலக சினிமா வரலாற்றின் நான்காவது படம் இதுவாகும். 

குறிப்பாக 97வது அகாடமி விருதுகளில் ஐந்து விருதுகளை வென்றதன் மூலம் வால்ட் டிஸ்னியின் சாதனையை ஷான் பேக்கர் சமன் செய்துள்ளார். 

ஒரே படத்தில் நான்கு வெவ்வேறு ஆஸ்கார் விருதுகளைத் தனி நபராக வென்ற முதல் மனிதர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. 

6 மில்லியன் டாலர் என்ற மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 59.3 மில்லியன் டாலர் வசூலித்தது இப்படத்தின் பிரம்மாண்ட வணிக வெற்றியாகும்.

இந்தத் திரைப்படம் அதிகார வர்க்கத்திற்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடையிலான சமமற்ற போராட்டத்தை மிகத் தீவிரமாகச் சித்தரிக்கிறது. படத்தின் நாயகி அனி ஒரு சாதாரண நடனக் கலைஞர். அவர் தனது கடினமான வாழ்விலிருந்து ஒரு விடுதலையைத் தேடுகிறார்.

 வன்யா போன்ற ஒரு பெரும் கோடீஸ்வரரின் அறிமுகம் அவருக்குக் கிடைக்கும்போது அதை ஒரு அழகிய கனவாகவும் தனது வாழ்வை மாற்றப்போகும் ஒரு வாய்ப்பாகவும் அவர் நம்புகிறார். 

ஆனால் பணக்கார வர்க்கத்தைப் பொறுத்தவரை அனி போன்றவர்கள் வெறும் பொழுதுபோக்குச் சாதனங்கள் மட்டுமே என்பதை வன்யாவின் பெற்றோரின் அணுகுமுறை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

வன்யா காட்டிய காதல் என்பது ஒரு வகையான கோழைத்தனம் மற்றும் பொறுப்பற்றத்தனம் கலந்தது. தனது பெற்றோரின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கவும் அமெரிக்காவிலேயே தங்கி உல்லாசமாக இருக்கவும் அனியை ஒரு கருவியாக அவன் பயன்படுத்திக் கொள்கிறான். 

அனி அந்த உறவில் உண்மையான அன்பைக் கண்டதாக நம்பித் தனது வேலையைத் துறந்து அவனுடன் வாழ முற்படுகிறார். ஆனால் சிக்கல் வரும்போது அனியைப் பாதுகாக்க முன்வராமல் பயந்து ஓடும் வன்யாவின் செயல் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளின் முதிர்ச்சியற்ற தன்மையையும் சுயநலத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது.

படத்தின் மிக முக்கியமான செய்தி மனித நேயம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இல்லை என்பதை உணர்த்துவதாகும். அனியைத் துன்புறுத்திய அடியாளாக வரும் ஈகர் இறுதி வரை அவரோடு பயணிக்கும்போது அனியின் மீதான அவரது பார்வை மாறுகிறது. 

ஒரு பெரும் கோடீஸ்வரக் கணவன் கொடுக்கத் தவறிய மரியாதையையும் பாதுகாப்பையும் ஒரு சாதாரண ஏவலாளியான ஈகர் அனிக்கு வழங்குகிறார். அந்தப் பணக்காரக் குடும்பம் பிடுங்கிக்கொண்ட அனியின் திருமண மோதிரத்தை ஈகர் ரகசியமாகத் திரும்பக் கொடுப்பது மனிதத்துவத்தின் எஞ்சிய அடையாளமாகத் தெரிகிறது.

இறுதிக்காட்சியில் அனி ஈகரின் கைகளில் சாய்ந்து கதறி அழுவது ஒரு மிகப்பெரிய மனவேதனையின் வெளிப்பாடு. தான் கண்ட கனவு எவ்வளவு போலியானது என்பதையும் தான் நேசித்த மனிதன் எவ்வளவு தரம் தாழ்ந்தவன் என்பதையும் உணரும்போது ஏற்படும் அந்த வலி சொல்லொணாதது. 

இந்த உலகம் எளியவர்களின் கனவுகளை எப்படித் தனது அதிகார பலத்தால் நசுக்குகிறது என்பதையும் அதே வேளையில் ஒரு எளிய மனிதனின் ஆறுதல் மட்டுமே அனியைப் போன்றவர்களுக்குக் கடைசியில் மிஞ்சுகிறது என்பதையும் இப்படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

அனோரா படத்தின்  மையப்பகுதியான கைகலப்புக் காட்சி, திரையில் பார்ப்பதற்கு ஒருபுறம் பதற்றமாகவும் மறுபுறம் வினோதமான வேடிக்கையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 வன்யாவின் மாளிகைக்குள் புகுந்து அனியைப் பிடிக்க முயலும் அந்த 25 நிமிடக் காட்சி, கிட்டத்தட்ட ஒரு நவீன காலத்து ஸ்லாப்ஸ்டிக்  வகை காமெடி போல படமாக்கப்பட்டுள்ளது.

வன்யாவைக் காணவில்லை என்றதும் அடியாளாக வரும் ஈகர், கர்னிக் மற்றும் கர்னிக் மனைவி ஆகியோருக்கும் அனிக்கும் இடையே நடக்கும் அந்தப் போராட்டம் மிகவும் தத்ரூபமானது. அனி ஒரு சிறுத்தைப் போலச் சீறிப்பாய்ந்து அவர்களைக் கடிக்கவும் உதைக்கவும் முயல்வார். 

 கர்னிக் மற்றும் ஈகர் ஆகிய இருவரும் அனியைத் தொடக்கூடத் தயங்கி, அதே சமயம் அவரைக் கட்டுப்படுத்தவும் முடியாமல் திணறும் காட்சிகள்  சிரிப்பலையை ஏற்படுத்தின. 

அந்தப் பெரிய மாளிகைக்குள் அனி அங்குமிங்கும் ஓடி அவர்களை அலைக்கழிப்பதும், கையில் கிடைப்பவற்றால் அவர்களைத் தாக்குவதும் ஒரு வினோதமான சூழலை உருவாக்கியது.

தொழில்நுட்ப ரீதியாக இந்தக் காட்சியைப் படமாக்க மட்டும் பத்து முழு நாட்கள் செலவிடப்பட்டன. ஒரு வீட்டின் வரவேற்பறையில் நடக்கும் சாதாரணச் சண்டை போலத் தெரிந்தாலும், இதில் ஒவ்வொரு அசைவும் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. 

மைக்கி மேடிசன் இந்தக் காட்சிக்காகத் தனது உடல்வலிமை முழுவதையும் பயன்படுத்தி நடித்துள்ளார். இதில் ஒரு வினோதம் என்னவென்றால், அடியாளாக வரும் ஈகர் ஒரு கட்டத்தில் அனியின் ஆவேசத்தைக் கண்டு மிரண்டு போய், அவரை எப்படிக் கையாள்வது என்றே தெரியாமல் திகைத்து நிற்பார். 

இந்த முரண்பாடுதான் அந்த வன்முறை கலந்த சூழலிலும் ஒரு மெல்லிய நகைச்சுவையைத் தந்தது.
இந்தப் போராட்டத்தின் முடிவில் அனி பிடிபட்டு வாயில் துணி கட்டப்படும் அந்தத் தருணம் வரை, ஒரு  குழப்பமான சூழல் அங்கே நிலவும். 
அதிகார வர்க்கத்தின் ஏவலாளிகள் ஒரு இளம்பெண்ணிடம் திணறும் அந்த வினோதப் பின்னணி, படத்தின் விறுவிறுப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

படத்தின் கதை:-

நியூயார்க்கின் பிரைட்டன் பீச் பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண் அனோரா என்கிற அனி (மைக்கி மேடிசன்). 

ரஷிய அமெரிக்கர்கள் வாழும் அந்தப் பகுதியில் ஒரு கிளப்பில் நடனக் கலைஞராகப் பணியாற்றும் இவருக்கு ரஷிய மொழி சரளமாகத் தெரியும். 

ஒருநாள் இவரது முதலாளி ஜிம்மி (வின்சென்ட் ராட்வின்ஸ்கி) இவரை இவான் என்கிற வன்யாவிற்கு (மார்க் எய்டெல்ஸ்டைன்) அறிமுகம் செய்து வைக்கிறார். 

வன்யா ரஷியாவின் பெரும் கோடீஸ்வரரான நிகோலாய் ஜாகரோவின் (அலெக்ஸி செரெப்ரியாகோவ்) 21 வயது மகன். 

அமெரிக்காவிற்குப் படிக்க வந்த வன்யா தனது நேரத்தை படிப்பில் செலவிடாமல் கிளப்களில் பார்ட்டி செய்வதிலும் தனது பெற்றோரின் பிரம்மாண்ட மாளிகையில் அமர்ந்து வீடியோ கேம் விளையாடுவதிலும் கழிக்கிறார்.

வன்யா அனியைத் தனது பாலியல் தேவைகளுக்காகப் பலமுறை அழைக்கிறார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகத் தனது மாளிகைக்கு அழைக்கும் வன்யா மறுநாள் அனியிடம் ஒரு வாரத்திற்குத் தனது காதலியாக நடிக்க 15,000 டாலர் தருவதாகக் கூறுகிறார். 

அந்த வாரத்தில் அனி வன்யா மற்றும் அவரது நண்பர்களான டாம் (ஆண்டன் பிட்டர்), கிரிஸ்டல் (ஐவி வோல்க்) ஆகியோருடன் லாஸ் வேகஸ் நகருக்கு ஆடம்பரச் சுற்றுலா செல்கிறார். 

அங்கு அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். சுற்றுலாவின் இறுதியில் தான் நிரந்தரமாக ரஷியாவிற்குத் திரும்பித் தனது தந்தையின் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று வன்யா கூறுகிறார். தனது பெற்றோரின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் வன்யா ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் தான் ரஷியாவிற்குச் செல்லத் தேவையில்லை எனக் கருதுகிறார்.

திடீரென அனியைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வன்யா வற்புறுத்துகிறார். முதலில் அனி தயங்கினாலும் வன்யாவின் உணர்வுகள் உண்மையானவை என அவர் உறுதி அளித்ததால் அனி சம்மதிக்கிறார். அவர்கள் வேகஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் ரகசியமாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

 வன்யா அவருக்கு ஒரு பெரிய வைர மோதிரத்தையும் விலையுயர்ந்த ரோமங்களால் ஆன டிசைனர் அங்கியையும் வாங்கித் தருகிறார். 

அனி தனது ஸ்ட்ரிப்பர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வன்யாவின் மாளிகையில் குடியேறுகிறார். ஆனால் இந்தத் திருமணச் செய்தி ரஷியாவிற்கு எட்டுகிறது. 

வன்யாவின் தாய் காலினா (தார்யா எகமசோவா) ஆத்திரமடைந்து வன்யாவின் மெய்ப்பாதுகாவலரான தோரோஸிற்கு (காரன் கராகுலியன்) உத்தரவு பிறப்பிக்கிறார். வன்யாவைக் தேடிக் கண்டுபிடித்து இந்த திருமணத்தை ரத்து செய்யுமாறும் தான் கணவருடன் அமெரிக்காவிற்கு வருவதாகவும் கூறுகிறார்.

தோரோஸ் தனது அடியாட்களான கர்னிக் (வாச்சே தோவ்மாஸ்யன்) மற்றும் ஈகரை (யுரா போரிசோவ்) மாளிகைக்கு அனுப்பி வைக்கிறார்.

 அவர்கள் அனியை ஒரு பாலியல் தொழிலாளி என்றும் வன்யா வெறும் கிரீன் கார்டுக்காகவே அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்றும் கூறி அவமானப்படுத்துகிறார்கள்.

 பயந்துபோன வன்யா மாளிகையை விட்டுத் தப்பி ஓடுகிறார். அனி அங்கிருந்த கர்னிக் மற்றும் ஈகருடன் கடுமையாக பகீரதபிரயத்தனத்துடன் போராடுகிறார்,எதிராளிக்கு அத்தனை உடல்சேதம் பொருள் சேதம் விளைவிக்கிறார் .

 ஒரு கட்டத்தில் அவர்கள் அனியைக் கட்டிப்போட்டு வாயை பொத்துகிறார்கள். அங்கு வரும் தோரோஸ் இந்த மாளிகையும் சொத்துக்களும் வன்யாவிற்குச் சொந்தமானவை அல்ல என்றும் வன்யா இன்னும் தனது பெற்றோரைச் சார்ந்தே வாழும் ஒரு சிறுபிள்ளை என்றும் கூறுகிறார். 

அனியின் திருமண மோதிரத்தைப் பறிக்கும் அவர் திருமணத்தை ரத்து செய்ய 10,000 டாலர் தருவதாகப் பேரம் பேசுகிறார். தான் வன்யாவை உண்மையாக நேசிப்பதாக அனி வாதிட்டாலும் வன்யாவைக் கண்டுபிடிக்க அவர் அவர்களுக்கு உதவ சம்மதிக்கிறார்.

அனி, தோரோஸ், கர்னிக் மற்றும் ஈகர் ஆகிய நால்வரும் புரூக்ளின் முழுவதும் தப்பி ஒளிந்த வன்யாவைத் தேடுகிறார்கள். 

தனது நண்பர்கள் மூலம் வன்யா அனி வேலை செய்த அதே கிளப்பில் டைமண்ட் (லிண்ட்சே நார்மிங்டன்) என்ற மற்றொரு பெண்ணுடன் இருப்பதை அனி அறிகிறார்.

 அவர்கள் வன்யாவை அங்கிருந்து இழுத்து வருகிறார்கள். ஆனால் வன்யா கடும் போதையில் இருப்பதால் யாரையும் அடையாளம் காணும் நிலையில் இல்லை. 

அவர்கள் அனைவரும் குடும்ப நீதிமன்றத்திற்கு வெளியே இரவு முழுவதும் காத்திருக்கிறார்கள். ஆனால் நெவாடாவில் நடந்த திருமணத்தை இங்கே ரத்து செய்ய முடியாது என தாமதமாகவே தெரியவருகிறது.

இறுதியாக விமான நிலையத்தில் அனி வன்யாவின் பெற்றோரைச் சந்திக்கிறார். அனி ரஷிய மொழி பேசி தன்னை அறிமுகம் செய்து கொண்டும் காலினா அவரைத் துச்சமாகவே மதிக்கிறார்கள். 

தனது பெற்றோரின் அதிகாரத்திற்கு அடிபணிந்த வன்யா அனியிடம் தங்கள் உறவு இத்துடன் முடிந்துவிட்டதாக நடுங்கும் குரலில் கூறுகிறார். 

காலினா அனைவரையும் லாஸ் வேகஸிற்கு அழைத்துச் செல்கிறார். ஆரம்பத்தில் தனக்கு முறையான விவாகரத்து இழப்பீடு வேண்டும் என அனி பிடிவாதம் பிடித்தாலும் காலினா அவரைச் சொத்து ஏதுமின்றி நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுவேன் என மிரட்டுகிறார்.

 வன்யாவின் கோழைத்தனத்தையும் அந்தப் பணக்காரக் குடும்பத்தின் கொடூரத்தையும் உணர்ந்த அனி வேறு வழியின்றி திருமண ரத்து ஆவணங்களில் கையெழுத்திடுகிறார். 

அனி வன்யாவையும் காலினாவையும் கடுமையாகத் திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

ஈகர் அனியை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நியமிக்கப்படுகிறார்.  மாளிகைக்குச் சென்று அனியுடைய பொருட்களை எடுத்துக்கொள்ள உதவுகிறார். 

அப்போது அனி ஈகரை நோக்கித் தன்னைக் கட்டிப்போட்டுத் துன்புறுத்தியதற்காகச் சீறுகிறார். 

ஆனால் ஈகர் தான் ஒருபோதும் அனியைத் தவறான நோக்கில் அணுகவில்லை எனத் தெளிவுபடுத்துகிறார்.

 மறுநாள் காலை தோரோஸ் வாக்களித்த பணத்தையும் அனியின் திருமண மோதிரத்தையும் ஈகர் ஒரு நன்மதிப்பின் அடையாளமாகத் திருப்பித் தருகிறார். 

ஈகரின் கனிவான பேச்சால் கவரப்படும் அனி அவரோடு நெருக்கமாக முயல்கிறார். ஆனால் ஈகர் அவரை முத்தமிட வரும்போது தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய துரோகத்தையும் இழப்பையும் உணர்ந்து அனி ஈகரின் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுகையில் இப்படம் நிறைகிறது.

அனோரா என்றால் லத்தீன் மொழியில் ஒளி அல்லது சுடர் என்று பொருள்படும்.
இப்படத்தின் நாயகி அனி தனது இருண்ட வாழ்வாதாரத்திலிருந்து ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் ஒரு சிறு சுடரைப் போலத் தனது சுயமரியாதையைத் தக்கவைக்கப் போராடுவதையும் இப்பெயர் அடையாளப்படுத்துகிறது. கௌரவம் மற்றும் மதிப்பிற்குரியவர் என்ற பொருளும் இதற்கு உண்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (220) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)