வி ஷல் நாட் பி மூவ்ட் We Shall Not Be Moved 2024


ஒரு வரலாற்றுப் படுகொலையின் காயம் பல தசாப்தங்கள் கடந்தும் ஒருவரின் வாழ்க்கையைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டிருந்தால், அந்த வலியிலிருந்து விடுபடுவது எப்படி?

குற்றவாளியைத் தண்டிப்பதுதான் நீதியா, அல்லது இழப்பின் வேதனையை ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொள்வதிலும் நீதி இருக்கிறதா?

இத்தகைய ஆழமான கேள்விகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மெக்சிகத் திரைப்படம் ‘நோ நோஸ் மொவெரான்’வி ஷல் நாட் பி மூவ்ட்  We Shall Not Be Moved.

2024ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பியர் செயின்ட் மார்ட்டின் எழுதி இயக்கியுள்ளார். இது அவரது முதல் இயக்குநர் முயற்சியாகும்.
நகைச்சுவை, கருப்பு நகைச்சுவை, நாடகம் மற்றும் அரசியல் வரலாறு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் தனித்துவமான படைப்பாக இது அமைந்துள்ளது.

1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற மாணவர் இயக்கமும், அதை ஒடுக்குவதற்காக நிகழ்த்தப்பட்ட த்லாடெலோல்கோ படுகொலையும் இத்திரைப்படத்தின் வரலாற்றுப் பின்னணியாக அமைகின்றன.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அரசியல் வன்முறையை வெறும் வரலாற்றுச் சம்பவமாக அணுகாமல், அதன் தாக்கம் அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கையிலும் குடும்ப உறவுகளிலும் எவ்வாறு தொடர்கிறது என்பதை ஆராய்வதே இயக்குநரின் முக்கியமான கலைநோக்காகத் தெரிகிறது.

இதனால் திரைப்படம் கடந்த காலத்தைப் பற்றிய பதிவாக மட்டும் நின்றுவிடாமல், வரலாற்று அநீதியின் நீண்டகால மனிதநேய விளைவுகளைப் பேசும் படைப்பாக மாறுகிறது.

இயக்குநர் பியர் செயின்ட் மார்ட்டின் இந்தக் கதைக்கான உந்துதலைத் தனது குடும்ப வரலாற்றிலிருந்து பெற்றுள்ளார். 1968ஆம் ஆண்டு தனது தாயின் சகோதரர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மை நிகழ்வின் தாக்கம் இத்திரைப்படத்தின் உருவாக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட குடும்ப இழப்பையும் ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றையும் இணைக்கும் இந்த அணுகுமுறை படைப்புக்கு உணர்ச்சிப்பூர்வமான அடித்தளத்தை வழங்குகிறது. குறிப்பாக, அரசியல் வன்முறையைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அனுபவங்கள் வழியாக அணுகுவது திரைப்படத்தின் தனித்துவத்தை அதிகரிக்கிறது.

திரைக்கதையின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் வகைமைச் சேர்க்கையாகும். தீவிரமான வரலாற்றுப் பின்னணியையும் கருப்பு நகைச்சுவையையும் ஒன்றிணைப்பது எளிதான முயற்சியல்ல.

ஆனால், இத்திரைப்படம் நகைச்சுவையையும் நாடகத்தையும் ஒரே படைப்புக்குள் இணைத்து, அதன் அடிப்படையான உணர்ச்சித் தீவிரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அணுகுமுறையைக் கொண்டுள்ளது.

இதனால் அரசியல் வன்முறை, தனிப்பட்ட இழப்பு, நீதி மற்றும் மன்னிப்பு போன்ற கனமான கருப்பொருள்கள் ஒரே மாதிரியான உணர்ச்சித் தொனியில் சொல்லப்படாமல், பல்வேறு மனநிலைகளின் வழியாக வெளிப்படுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.

முக்கியக் கதாபாத்திரமான சொக்கோரோவாக நடித்துள்ள லூயிசா ஹுவெர்டாஸின் பங்களிப்பு இத்திரைப்படத்தின் முக்கியமான பலமாகும். வயது, தனிப்பட்ட துயரம், மன உறுதி ஆகியவற்றின் கலவையைக் கொண்ட ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டிருப்பது படைப்புக்கு வலுவான மனிதநேயப் பரிமாணத்தை அளிக்கிறது.

இந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிசார் சிக்கல்களை வெளிப்படுத்துவதில் நடிகையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இதற்காக 50ஆவது ஹுவெல்வா ஐபீரோ-அமெரிக்கத் திரைப்பட விழாவில் சிறந்த நடிப்புக்கான விருதையும், 67ஆவது ஏரியல் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் அவர் பெற்றுள்ளார்.

எஸ்பெரான்சா, சித்தார்த்தா, ஜார்ஜ், லூசியா உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்கள் மூலம் குடும்ப உறவுகள், தலைமுறைகளுக்கு இடையிலான மனநிலை வேறுபாடுகள், தனிப்பட்ட வாழ்க்கையில் வரலாற்றுக் காயங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவை படைப்பின் உலகத்தை விரிவுபடுத்துகின்றன.

குறிப்பாக, ஒருவரின் தீராத துயரம் அவரைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும் என்ற மனித உறவுகளின் சிக்கலான தன்மையை இக்கதாபாத்திர அமைப்பு வெளிப்படுத்துகிறது.

லூயிசா ஹுவெர்டாஸுடன் இணைந்து ரெபெக்கா மான்ரிகேஸ், ஜோஸ் ஆல்பர்டோ பாட்டினோ, பெட்ரோ ஹெர்னாண்டஸ், அகுஸ்டினா குயின்சி, ஜுவான் கார்லோஸ் கொலம்போ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சீசர் குட்டியெரெஸ் மிராண்டாவின் பங்களிப்பும் திரைப்படத்தின் காட்சியுலகிற்கு முக்கியமானது. த்லாடெலோல்கோவின் வரலாற்றுப் பின்னணியும் கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலும் ஒரே திரைப்பட அனுபவத்தில் இணைக்கப்படுகின்றன.

பழைய ஆவணக் காட்சிகளான ‘எல் கிரிட்டோ’ திரைப்படத்தின் பகுதிகளைக் கொண்டு தொடங்கும் காட்சியமைப்பு, வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடையே நேரடியான தொடர்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் திரைப்படத்தின் அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி பார்வையாளருக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

ராபர்டோ போலாடோ மற்றும் ரவுல் சென்தேஹாஸ் மேற்கொண்ட படத்தொகுப்புப் பணி திரைப்படத்தின் கதை சொல்லும் அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கடந்தகால வரலாற்றுச் சம்பவங்களையும் தனிப்பட்ட வாழ்க்கையின் உணர்ச்சிகளையும் இணைக்கும் படைப்பில், காட்சிகளின் தொடர்ச்சியும் அவற்றுக்கிடையிலான தொடர்பும் முக்கியமானவை.

இந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பு அந்தக் கதை அமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. அலெஹாண்ட்ரோ ஒத்தாயோலாவின் இசை திரைப்படத்தின் இசையமைப்புப் பங்களிப்பாக இடம்பெறுகிறது.

மேலும், திரைப்படத்தின் தலைப்பே ஒரு பாடலை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. இறுதியில் இடம்பெறும் ‘நோ நோஸ் மொவெரான்’ பாடலும் திரைப்படத்தின் தலைப்புக்கும் அதன் உணர்ச்சிப்பூர்வமான அடையாளத்துக்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது.

திரைப்படத்தின் தொழில்நுட்பப் பங்களிப்புகள் மெக்சிகத் திரைப்படத் துறையின் முக்கியமான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, ஒலியமைப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு மற்றும் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் ஏரியல் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதையும் சிறந்த முதல் படைப்புக்கான விருதையும் வென்றது. குறிப்பாக, இயக்குநரின் முதல் திரைப்படமாக இருந்தபோதும் பல்வேறு பிரிவுகளில் கிடைத்த அங்கீகாரம் கவனிக்கத்தக்கது.

திரைப்படத்தின் சர்வதேசப் பயணமும் குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டு துலூஸ் சினெலத்தீனோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மாணவர் புனைவுத் திரைப்பட விருது, சிசிஏஎஸ் புனைவுத் திரைப்பட விருது, பிரெஞ்சுத் திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது ஆகிய மூன்று அங்கீகாரங்களைப் பெற்றது.

அதே ஆண்டு குவாதலஹாரா சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான மெஸ்கால் விருதையும் பார்வையாளர் விருதையும் வென்றது.

பின்னர் சாவோ பாலோ மற்றும் ஹுவெல்வா உள்ளிட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இடம்பெற்றது. 2025ஆம் ஆண்டு மெக்சிகோவின் சார்பில் 98ஆவது ஆஸ்கர் விருதுகளின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.

‘நோ நோஸ் மொவெரான்’ திரைப்படத்தின் தனித்துவம் அதன் அரசியல் வரலாற்றுப் பின்னணியை ஒரு தனிமனிதனின் உணர்ச்சிப் பயணத்துடன் இணைப்பதில் இருக்கிறது.

பழைய காயங்கள், குடும்ப உறவுகள், நீதிக்கான தேடல், மன்னிப்பு, மனித மனத்தின் முரண்பாடுகள் ஆகியவற்றை நகைச்சுவையும் நாடகமும் கலந்த அணுகுமுறையில் ஆராய்கிறது. ஒரு நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த அநீதி என்பது அந்தக் காலத்தோடு முடிந்துவிடுவதில்லை; அதன் தாக்கம் பல ஆண்டுகள் கழித்தும் மனிதர்களின் வாழ்க்கையில் நீடிக்கக்கூடும் என்ற சிந்தனையை முன்வைக்கிறது.

அரசியல் வரலாற்றையும் தனிப்பட்ட உணர்ச்சிகளையும் இணைக்கும் திரைப்படங்களை விரும்புவோருக்கு மட்டுமல்லாமல், மனித உறவுகளின் ஆழத்தையும் நீதியின் உண்மையான பொருளையும் சிந்திக்க விரும்பும் அனைவருக்கும் பார்க்கத் தகுந்த மெக்சிகத் திரைப்படமாக இது அமைகிறது.
===============================
படத்தின் கதை:-

1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் மாணவர்கள் அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர் இயக்கத்தை ஒடுக்குவதற்காக அரசு படைகளைப் பயன்படுத்தியது.

இதன் உச்சகட்டமாக, 1968 அக்டோபர் 2ஆம் தேதி மெக்சிகோ நகரின் த்லாடெலோல்கோ பகுதியில் மாணவர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் படுகொலையாக மாறியது.

இந்தச் சம்பவத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையின் வரலாற்றுப் பின்னணியுடன் திரைப்படம் தொடங்குகிறது. அன்றைய போராட்டத்தையும் அதை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட வன்முறையையும் காட்டும் பழைய ஆவணக் காட்சிகள் திரையில் இடம்பெறுகின்றன.

சொக்கோரோ (லூயிசா ஹுவெர்டாஸ்) அறுபது வயதைக் கடந்த பெண் வழக்கறிஞர். 1968ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற த்லாடெலோல்கோ படுகொலையில் தனது சகோதரர் கோக்கே கொல்லப்பட்டதிலிருந்து, அவரது மரணத்திற்குக் காரணமான ராணுவ வீரர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதையே தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், தனது சகோதரருக்கு நீதி கிடைக்கவில்லை என்ற வேதனை அவரைத் தொடர்ந்து வாட்டுகிறது. அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பானவரை அடையாளம் கண்டு அவரைத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

சொக்கோரோ தனது சகோதரி எஸ்பெரான்சா (ரெபெக்கா மான்ரிகேஸ்) உடன் த்லாடெலோல்கோ பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்.

அவர் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே வாழ்கிறார். சகோதரரின் மரணம் தொடர்பான தீராத துயரமும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் அவரது இயல்பையும் குடும்ப உறவுகளையும் பாதித்திருக்கின்றன.

இதனால் எஸ்பெரான்சாவுடனான அவரது உறவும் சுமுகமாக இல்லை. அதேபோல், அவரது மகன் ஜார்ஜுடனும் (பெட்ரோ ஹெர்னாண்டஸ்) அவருக்கு நெருக்கமான உறவு கிடையாது.

சிறுவயதிலிருந்தே தாயின் தீராத மனவேதனையின் தாக்கத்துடன் வளர்ந்த ஜார்ஜ், அவருடன் இயல்பான குடும்ப உறவைப் பேண முடியாமல் தவிக்கிறார். இருப்பினும், ஜார்ஜின் மனைவி லூசியாவுடன் (அகுஸ்டினா குயின்சி) சொக்கோரோ ஓரளவு அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுகிறார்.

ஒருநாள், சொக்கோரோவின் சகோதரர் கோக்கே  எழுபத்தைந்தாம் வயது  பிறந்த நாளில், நீண்ட காலமாகக் கிடைக்காமல் இருந்த தடயம் அடங்கிய ஒரு உறை அவரிடம் வந்து சேருகிறது. அந்தப் உறையில் கோக்கே இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசிப் புகைப்படம் தொடர்பான முக்கியமான தகவல் இடம்பெற்றிருக்கிறது.

அந்தப் புகைப்படத்தில் அவரது சகோதரருக்கு அருகில் காணப்படும் ராணுவ வீரரின் பெயர் தெரியவருகிறது. அவர் ஜுவான் அகுன்டெஸ் . பல ஆண்டுகளாகத் தனது சகோதரரைக் கொன்ற ராணுவ வீரரைத் தேடிக்கொண்டிருந்த சொக்கோரோவுக்கு, இந்தப் பெயர் மிக முக்கியமான தடயமாக அமைகிறது.

இதுவரை யாரென்றே தெரியாமல் இருந்த அந்த நபரை இப்போது அடையாளம் காண முடியும் என்ற நம்பிக்கை அவருக்குள் உருவாகிறது.
தனது சகோதரரின் மரணத்திற்குப் பொறுப்பானவர் என்று நம்பும் ஜுவான் அகுன்டெஸைத் தேடிக் கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று சொக்கோரோ முடிவு செய்கிறார்.

இதற்காகத் தனது குடியிருப்பின் காவலாளியான சித்தார்த்தாவின் (ஜோஸ் ஆல்பர்டோ பாட்டினோ) உதவியை நாடுகிறார். அவரது உதவியுடன் அகுன்டெஸின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்.

ஆனால், தனது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அவருக்குச் சில முக்கியமான உதவிகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக, ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்யக்கூடிய நபரை கண்டறிய  வேண்டியிருக்கிறது.

அதற்காக மெக்சிகோ நகரில் தற்போது நீதிபதியாகப் பணியாற்றும் தனது முன்னாள் மேலதிகாரியை அணுகுகிறார். அவரிடம் இருந்த அதிகாரத்தையும் தொடர்புகளையும் பயன்படுத்தி, ஒரு கூலிப்படைக் கொலையாளியின் தொடர்பு விவரங்களைப் பெறுவதற்காக அவரை மிரட்டிப் பணிய வைக்கிறார்.

தனது பழைய அதிகாரியைப் பயன்படுத்தி இந்தத் தொடர்பைப் பெறுவதன் மூலம், பழிவாங்கும் திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல முடியும் என்று கருதுகிறார்.

இதற்கிடையில் சொக்கோரோவின் உடல்நிலை மோசமடையத் தொடங்குகிறது. அவருக்குப் பகுதியளவு காது கேளாமை இருக்கிறது. அடிக்கடி மயங்கி விழும் பிரச்சினையும் ஏற்படுகிறது.

வயதும் உடல்நலக் குறைபாடுகளும் அவரது முயற்சிகளுக்குத் தடையாக இருந்தாலும், சகோதரரின் மரணத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்க வேண்டும் என்ற உறுதியை அவர் கைவிடவில்லை.

தனது திட்டத்திற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்காக, தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பையே அடமானம் வைக்கிறார்.

அதன்மூலம் கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி ஜுவான் அகுன்டெஸைக் கடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். கடத்தலுக்குத் தேவையான நபர்களையும் தொடர்புகளையும் ஏற்பாடு செய்து, தனது நீண்டகாலப் பழிவாங்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகிறார்.

இதே காலகட்டத்தில் அவரது மகன் ஜார்ஜின் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உருவாகின்றன. ஜார்ஜின் நிலையற்ற வாழ்க்கை முறையால் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருக்கும் அவரது மனைவி லூசியா, அவரைப் பிரிந்து செல்ல முடிவு செய்கிறார். அவர் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்திருந்தாலும், அந்தச் செய்தியை ஜார்ஜிடம் தெரிவிக்காமல் அர்ஜென்டினாவுக்குத் திரும்பிச் செல்கிறார். இதனால் ஜார்ஜின் குடும்ப வாழ்க்கை மேலும் சிக்கலான நிலையை அடைகிறது.

மறுபுறம், சொக்கோரோ திட்டமிட்டபடி ஜுவான் அகுன்டெஸ் கடத்தப்படுகிறார். ஆனால், இந்த நடவடிக்கையில் அவருக்கு உதவியவர்கள் எதிர்பார்த்தபடி செயல்படுவதில்லை. அவர்கள் தடுமாறுவதால், சொக்கோரோவின் பழிவாங்கும் திட்டம் சிக்கலுக்குள்ளாகிறது. இதனால் கடத்தப்பட்ட நபரைத் தானே நேரடியாகச் சந்திக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது.

சொக்கோரோ கடத்தப்பட்ட மனிதரை நேருக்கு நேர் சந்திக்கும்போது, அவரது உடல்நலப் பிரச்சினை மீண்டும் குறுக்கிடுகிறது. அவர் திடீரென மயங்கி விழுகிறார். தனது சகோதரரின் மரணத்திற்குக் காரணமானவரை எதிர்கொண்டு பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருந்த அவர், அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சொக்கோரோ மருத்துவமனையில் கண்விழிக்கிறார். அப்போது அவருக்குத் தெரியவரும் தகவல் ஆச்சரியமளிக்கிறது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்தது வேறு யாருமல்ல; அவர் கடத்தி வைத்திருந்த அதே மனிதர்தான்.

தன்னைக் கொல்ல நினைத்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தபோது, அந்த மனிதரே அவருக்கு உதவி செய்து மருத்துவமனைக்குக் கொண்டுவந்திருக்கிறார்.

இதற்குப் பிறகு இருவரும் ஒரே வாடகை காரில் பயணம் செய்கிறார்கள். அந்தப் பயணத்தின்போது, அந்த மனிதர் 1968ஆம் ஆண்டு நடந்த சம்பவங்கள் குறித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொக்கோரோவிடம் தெரிவிக்கிறார்.

கோக்கே இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது தான் என்பதை அவர் மறுக்கிறார். அதாவது, புகைப்படத்தில் காணப்படும் ராணுவ வீரர் தானல்ல என்று கூறுகிறார்.

ஆனால், அதே நேரத்தில் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற த்லாடெலோல்கோ படுகொலையில் தான் பங்கேற்றதை அவர் மறைக்கவில்லை. அப்போது தனது மேலதிகாரி பிறப்பித்த உத்தரவின் பேரில் அந்தப் படுகொலையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்கிறார்.

எனவே, கோக்கேவின் மரணத்துடன் தொடர்புடைய ராணுவ நடவடிக்கையில் தான் இருந்ததை அவர் ஏற்றுக்கொண்டாலும், சொக்கோரோ தேடிக்கொண்டிருந்த குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் தானல்ல என்று தொடர்ந்து கூறுகிறார்.

தனது செயல்களுக்காக அவர் சொக்கோரோவிடம் துப்பாக்கி ஒன்றைக் கொடுத்து, தன்னைக் கொன்றுவிடும்படியும் கூறுகிறார். தனது உயிரை முடித்துக்கொள்ள அவருக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், சொக்கோரோவின் பழிவாங்கும் எண்ணத்திற்கு இடமளிக்கிறார்.

ஆனால், இத்தனை ஆண்டுகளாகத் தனது சகோதரரின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டும் என்று வாழ்ந்த சொக்கோரோ, அந்த நேரத்தில் அவரைக் கொல்ல மறுக்கிறார்.

அதற்கான காரணத்தையும் அவர் தெளிவுபடுத்துகிறார். அந்த மனிதரைக் கொல்வதால் உண்மையான நீதி கிடைத்துவிடாது என்று கருதுகிறார். அவர் செய்த குற்றத்திற்காகச் சட்டப்படி விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே சொக்கோரோவின் எண்ணம்.

ஆனால், அத்தகைய நீதி கிடைக்காமல் போய்விட்டது. எனவே, இப்போது அவரைக் கொல்வது தனது சகோதரருக்கு உரிய நீதியை வழங்கிவிடாது என்பதை உணர்ந்து, துப்பாக்கியைப் இயக்க மறுக்கிறார்.

இதற்குப் பிறகு சொக்கோரோ மீண்டும் தனது வீட்டிற்குத் திரும்புகிறார். நீண்ட காலமாகத் தனது சகோதரரின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்திலும் பழிவாங்கும் எண்ணத்திலும் மூழ்கியிருந்த அவர், தனது சகோதரி எஸ்பெரான்சாவுடன் மீண்டும் சமாதானமாகிறார்.

இருவரும் கோக்கேவின் மரணத்தையும் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலையையும் நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பல ஆண்டுகளாகத் தங்களுடைய வாழ்க்கையைப் பாதித்த அந்த இழப்பையும் அதனால் ஏற்பட்ட மனவேதனையையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இருவரும் வருகின்றனர்.

இறுதியில், சொக்கோரோ தனது சகோதரர் கோக்கேவின் புகைப்படத்தை எடுத்துத் தீயிட்டுக் கொளுத்துகிறார். பல ஆண்டுகளாகத் தனது சகோதரரின் மரணத்திற்கான ஆதாரமாகவும், பழிவாங்கும் எண்ணத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருந்த நினைவுச் சின்னமாகவும் இருந்த அந்தப் புகைப்படத்தைத் தானே எரிக்கிறார்.

அப்போது அவர் நோ நோஸ் மொவெரான் (நாங்கள் எங்கள் இடத்தைவிட்டு நகரமாட்டோம்) என்ற பாடலைப் பாடுகிறார். தனது சகோதரரின் மரணத்திற்குப் பின்னால் இருந்த உண்மையைத் தேடி, குற்றவாளியைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல ஆண்டுகள் வாழ்ந்த சொக்கோரோவின் பயணம், அந்தப் புகைப்படத்தை எரிக்கும் இறுதிக் காட்சியுடன் நிறைவடைகிறது.

#கீதப்ப்ரியன்ஸ்பானிஷ்சினிமா
#கீதப்ப்ரியன்ஏரியல்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) உலக சினிமாபார்வை (272) தமிழ் சினிமா (261) ஆஸ்கர் (225) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (18) இலக்கியம் (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)