ஹேராம் ( 2000 )படத்தில் வந்த அல்டாஃப் டெய்லர் கதாபாத்திரத்தை ஒருவர் மறக்க முடியாது,சில நிமிடங்களே வந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருப்பார் ஷதாப் கான்,கராச்சியில் இருந்து கல்கத்தாவுக்கு சாகேத்ராம் வருகையில் முழுக்கடையடைப்பு இருக்கும்,இந்துக்கள் கடைகள் கூட வன்முறைக்கு பயந்து மூடியிருக்கும், திரு திமு என கழிகள் கொடிகளுடன் ஒரு கூட்டம் வரும் , அல்டாஃப் அக்கூட்டத்தில் துரு துருவென இருப்பார்,இவரைப் பார்த்து பெங்காலியில் கூசாமல் கேட்பார்,மேம்சாப் இப்போது என்னிடம் படுப்பதேயில்லை,வேறு யாராவது கிடைத்து விட்டாரா சாப் என்று, வங்காளம் இவர் கற்று வரும் மொழி என்பதால் இவர் புரிந்து கொள்ள தடுமாறுவார்.அதற்குள் கார் கண்ணாடியில் தக்காளி அடிக்கப்படும்.
இவர் காலஞ்சென்ற அம்ஜத்கானின் மகனும்,பழைய இந்தி நடிகர் ஜயந்தின் பேரனுமாவார்,
https://en.m.wikipedia.org/wiki/Shadaab_Khan
இச்சம்பவம் மிகவும் விசித்திரமானது, இவர் 1997 ஆம் ஆண்டு Raja Ki Aayegi Baaraat என்னும் இந்தி படத்தில் ராணி முகர்ஜியுடனே அறிமுகமாகியுள்ளார் , கற்பு பதிவிரதம் டைப் கதை, அதிலும் இவர் ராணி முகர்ஜியை ரேப் செய்து விடுகிறார், கமல் இவரிடம் ஹேராம் படத்தின் காட்சியை விவரிக்கையில் இந்த ப்ரீகுவாலிஃபிகேஷனுக்காக நிச்சயம் சிரித்திருப்பார்கள்,
ஹேராம் தந்த நெகடிவ் புகழாலோ என்னவோ இவருக்கு மற்றுமொரு பரேக்த்ரு கிடைக்கவேயில்லை, இவர் இயக்குனர்,மற்றும் எழுத்தாளரும் கூட
பெஷாவரைச் சேர்ந்த பத்தான் வம்சாவழி,சுண்டினால் சிவக்கும் சிகப்பு, இவரை கமல் வங்காள முஸ்லிம் பாத்திரத்துக்கு எப்படி தேர்ந்து எடுத்தார் ? என யோசித்திருக்கிறேன்.
#ஹேராம்,#சதாப்கான்,#கமல்ஹாசன்,#ராணிமுகர்ஜி