மழை அடித்துப் பெய்ந்து ஓய்கிறது, பின்னர் பெய்கிறது , பம்மலில் இங்கே தரைத்தளத்தில் எங்கள் வீடு, சாலையை விட மூன்றடி தாழ்வாகிவிட்ட இருபத்து மூன்று வருட பழமையான அடுக்ககம் எங்களுடையது ,இரு மாதங்கள் முன்பு வீட்டை சுற்றி இருந்த காலி இடங்களில் சிமெண்ட் தரை அமைத்து நல்ல நேர்த்தியாக வாட்டம் வைத்து கிணற்றில் சென்று விழுவது போல செய்தோம், அர்த்தமுள்ள பணி அது,
இந்த முறை பெருமழை நாள் இரவில் ஒரு நம்பிக்கையில் நான் செய்து வைத்த ப்ரத்யேக flood gate இடவில்லை,வெளியே வாசற்படி மூழ்கி உள்ளது, ஆனால் தண்ணீர் மழை பெய்யாத வேளையில் வடிகிறது,
நேற்று மாலை திநகர் வரை சென்று வந்தேன் gst சாலைகள் கூட பல நாற்சந்தி கூடும் இடங்களில் தார் அரித்து உள்ளது, கன்டெய்னர் லாரி, ட்ரக், டாங்கர் போக்குவரத்து இருக்கும் இடங்களில் பெரும் பள்ளங்கள் உள்ளன , ஆனால் நேற்று மாலை பெரிய சாலைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை,திநகர் பெரிய தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது, பள்ளங்களில் நகராட்சி பழைய ரப்பிஷ் கொட்டுகின்றனர் அதில் பெரிய செங்கல் பேவிங் ப்ளாக் என அனைத்தும் அடக்கம், அதில் இரு சக்கர வாகனம் மிகவும் கவனமாக செல்ல வேண்டும், zomato ,swiggy dunzo என ஊழியர்கள் பலர் மழையிலும் பணியாற்றுவதைப் பார்க்க முடிகிறது ,அவர்களுக்கு சொல்வது ஒன்று தான், ஹாரன் அடியுங்கள் , இண்டிகேட்டர் இடுங்கள், head light எரிய விடுங்கள், பள்ளத்தில் இறங்கி முந்தாதீர்கள், ட்ரக் அருகே , முன்னால் அல்லது பின்னால் சென்றால் ஹாரன் அடித்து கடக்கவும், காரணம் மழைநாளில் ட்ரக் டிரைவருக்கு wind screen ஆவி அடித்து frost ஆகி visibility இருக்காது, rear view mirror ,centre mirror இவை பார்த்து ட்ரக் ஓட்டுனர் திரும்ப அறிவு இருக்காது,பலவேளை க்ளீனர் ஓட்டுவர், ஆபத்துக்கு பாவமில்லை, இந்த ஹாரன் சப்தம் உங்களை நிச்சயம் பாதுகாக்கும், இதைச் செய்யாமல் போனதால் மணலியில் பல்சர் ஓட்டி வந்து மழைநீர் பள்ளத்தில் விழுந்த ஸொமேட்டோ ஊழியர் ஹெல்மெட் அணிந்த தலை மீது ட்ரக் டயர் ஏறி சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார், விழுந்த நிலையிலும் கையை அந்த உணவுப் பெட்டி மீது வைத்திருந்ததை பார்க்க என்னவோ செய்தது, எனவே அதிக கவனம் எடுத்து பயணிக்கவும் .