சமீபத்தில் எந்த பெட்ரோல் பங்க்களிலும் looseல் பெட் பாட்டிலில் பெட்ரோல், டீஸல் தருவதில்லை,தீவிரவாத செயல் தடுப்பு நடவடிக்கையாம், எனவே முதல் நாள் இரவில் எப்பாடு பட்டாவது அலைந்து திரிந்து வரிசையில் காத்திருந்து உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்பி விடுங்கள்,
இன்று பெட்ரோல் பங்க் ஒன்றில் என் EV க்கு காற்றடிக்க போகையில் பார்த்தது, தன் வண்டி நின்று விட்டதால் அதை தொடர்ந்து தள்ளமுடியாமல் ஓரம் நிறுத்தி விட்டு இரண்டு கிலோமீட்டர் நடந்து எங்கோ பெட் பாட்டில் தேற்றி எடுத்து வந்து ஒரு லிட்டர் பெட்ரோல் கேட்டார்,
ஊழியர்கள் அவருக்கு எத்தனை கெஞ்சியும் பெட்ரோல் தர மறுத்து விட்டனர், இவை cctv ல்
பதிவாகிறது பாவம் பார்த்து பெட்ரோல் தந்தால் நாங்கள் போலீஸாருக்கு பதில் சொல்லனும், என்று சொன்னார்கள்,
நான் அவரை அழைத்து வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் பைக் வரை விட்டுவிட்டு வீடு திரும்பினேன்,அதன் பின்னர் அவர் பங்கிற்கு வண்டி தள்ளிப் போய் பெட்ரோல் நிரப்பியிருக்க வேண்டும்.
இது போல யாரும் அசட்டையாக வண்டியில் பெட்ரோல் நிரப்பாமல் விட்டு வண்டி தள்ளாதீர்கள்.