திருவள்ளூர் வைத்ய வீர ராகவஸ்வாமி கோயில் செல்பவர்கள் கோயில் அலுவலகத்தில் எவ்வுள் கிடந்தான் என்ற மாத இதழுக்கு 200₹ பணம் செலுத்தி வருடசந்தா பதிவு செய்து கொள்ளலாம்,அல்லது இந்த படிவத்தை பூர்த்தி செய்து மனி ஆர்டர் அனுப்பலாம்,அல்லது தந்துள்ள அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சந்தா செலுத்தலாம் ,நான் ஐந்து வருடங்களாக சந்தாதாரர், எத்தனை தரமான வண்ண இதழ் இது,எப்படி 20₹க்கு தருகின்றனர் என வியப்பேன்.ஆறு மாதம் முன்பு வரை 10₹ தான்.
கொரோனா காலகட்டத்தில் கோயில் செல்ல முடியாததால் ஒரு வருடம் நான் சந்தாகட்டாமலே எனக்கு தொடர்ந்து எவ்வுள் கிடந்தான் இதழை அனுப்பி வைத்தனர், வைத்ய வீரராகவர் எங்களை தொடர்ந்து தேடி வந்து ஆசி தந்தது போன்று இருந்தது, பின்னர் கோயில் செல்ல இரண்டு வருட சந்தாவை கேட்டு செலுத்தினேன்.
இது போன்ற உயரியவற்றை 20₹ க்கு தரமாக தருகையில் உலகில் இன்னும் பணத்துக்கு மதிப்பு உள்ளது என விளங்குகிறது, ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்கு இதழ் வீடு வந்துவிடும்,உற்சவ பத்திரிக்கை பிரசாதம் என வரும், இந்த இதழை நாங்கள் முழுதாக படிக்கிறோம், படங்கள் பார்க்கிறோம் என்பதை விட அது ஒரு இறைவன் ஆசி என்றே நினைக்கிறேன்,ஆத்மார்த்தமாக சேமித்து வருகிறேன்.