Sri Arulmighu Dhenupureeshwarar Thirukovil,மாடம்பாக்கம்
தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சிறிய சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்,இந்த அபூர்வமான வெள்ளை வண்ண லிங்கத்தின் வடிவம் ஒரு கொழு கொம்பு போல் உள்ளது, இரண்டு அங்குல அகலம் அரையடி உயரத்தில் உள்ளது, இந்த சுயம்புவுக்குத் தான் எல்லா வகை அபிஷேகங்களும்.
சுயம்பு லிங்கம் உள்ள கருங்கல் பீடத்தில் பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது, லிங்கத்தின் மீது வெள்ளி உலோகத்தினால் ஆன சிறிய மண்டபம் போன்ற அமைப்பும்,அதன் மீது நாகாபரணமும் அபிஷேகம் முடிந்தவுடன் அணிவிக்கப்படுகிறது,
மூர்த்தி சிறியது, ஆயினும் கீர்த்தி பெரியது,தூங்கானை மாட அமைப்பு கர்ப்ப கிரகம் கொண்ட கோவில்,மிகவும் அழகிய அம்பாள் தேனுகாம்பாள் மூலவர் உயரம் மூன்றடிதான், ( விகிதாச்சாரம் )
தூங்கானை மாடத்தில் பெரிய விஷ்ணுவும், அதன் நேர்எதிரே வரதராஜ பெருமாளும் ஸ்ரீதேவி,பூதேவி தாயாரும், அடுத்து காசி விசுவனாதர்,விசாலாட்சி, அடுத்து முருகன் வள்ளி தெய்வயானை சந்நதிகள்,பிரம்மன்,சண்டிகேசர்,துர்க்கை சந்நிதிகள் உட் பிரகாரத்திலேயே அமைந்துள்ளன,தட்சிணாமூர்த்தி திருமேனியின் தலைமீது ஆல மரம் இங்கு இல்லை,துர்க்கை இங்கு கிளி வைத்துள்ளார்,
கோவில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
இன்று 9-30 மணிக்கு நான் போகையில் அபிஷேகம் ஆரம்பம் ஆனது, அப்போது மட்டுமே சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.
இது புதன் பரிகாரஸ்தலம், வக்ரதோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலம்,தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு,சண்டியை வதம் செய்யும் சரபேசுவரர் வழிபாடு பிரசித்தி பெற்றது.
கோவில் UNESCO கட்டுப்பாட்டில் உள்ளது,தேனுபுரீஸ்வர்ர் கோவிலுக்கு அடுத்த block ல் 18 சித்தர் பீடமும், உலகின் பெரிய மரகதலிங்க மேருவும்,ஷேஷாத்ரி சுவாமிகள் சந்நிதி, குருவாயூரப்பன் சந்நிதி அமைந்துள்ளது,
இந்த மாடம்பாக்கம் 18 சித்தர் பீடத்தில் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் மேரு நிறுவும் முன் சேஷாத்ரி சுவாமிகளின் சந்நிதியை நிறுவினர்,அங்கு சுவாமிகளின் தத்ரூபமான கற் சிலை உண்டு, அடுத்தடுத்து பிரம்மாண்டமான அப்பணி நிறைவேறி 20 வருடமாகிறது.
#தேனுபுரீஸ்வரர்கோயில்,#மாடம்பாக்கம்