மிகவும் அருமையான முன்னெடுப்பு இது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் அன்றே கிடைக்கிறது, என் மகளுக்கு அவரின் ஆசிரியை கண்களை கண் மருத்துவமனையில் சோதனை செய்ய வேண்டி school diary ல் எழுதித் தந்தது நினைவுக்கு வருகிறது , ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பார்வை குறைபாடு அதற்கான சிகிச்சை கூட எட்டாக்கனி, எத்தனையோ மாணவர்கள் தனக்கு பார்வைக் குறைபாடு உள்ளது என்பதையே அறிந்திருக்க மாட்டர் என்பதே உண்மை , இது தகப்பன் தாயார் போன்ற அக்கறையில் எழும் முன்னெடுப்பு, இந்த குறைபாடுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் நிறக்குருடு குறைபாட்டையும் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிறப்பு கண்ணாடி, தரமிகு சிகிச்சை, எதிர்கால வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களை தந்தால் இன்னும் தொலை நோக்காக இருக்கும்,
நிறக்குருடு என்ற colour blindness குறைபாடு கொண்டவர்களை வகுப்பில் எளிமையாக ishihara test cards கொண்டு அந்த முப்பரிமான வண்ணப்புள்ளிகளின் இடையே உள்ள எண்களை வாசிக்க வைத்து கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை நன்றாக வழிநடத்தலாம்,