தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் எத்தனை பிரம்மாண்டமான படைப்பு?!!
முதலாம் இராஜ இராஜ சோழனின் காலத்தை விஞ்சி நிற்கும் படைப்பு,(1003 AD - 1010 AD ) நாம் எளிதில் போய் தரிசிக்க இயலாத கைலாய மலையை ஆயிரம் வருடங்களுக்கு முன் கிழக்கு நோக்கிய கோபுரத்தில் புடைப்புச் சிற்பமாக மூன்று நிலைகள் உயரத்துக்கு அப்படியே தத்ரூபமாக செதுக்கியுள்ளதைப் பாருங்கள்,
இதற்கு பின்னே கீழாக " கதலிகாகரணம்" என்ற வாழைப்பழச் சீர் வடிவ சிறிய Atrium உள்ளது (குறுக்கு வெட்டு section பார்க்கவும் ).
கதலிகாகரணங்கள் ( atrium) இது ஆலய கமிட்டி section படி நான்கு இடங்களில் இருக்கிறது , இதன் பயன்கள் பல பல,இந்த உயரிய வெற்றிடத்தை சூட்சும லிங்கம் என்றும் வழங்குகின்றனர்.
பெரிய சதுரமான கதலிகாகரணம்,இது மஹாமேரு தத்துவப்படி ஓம்காரத்தை உரைக்கிறது,சங்கில் எப்படி ஓங்காரம் முடிவின்றி ஒலிக்குமோ? அது போல இந்த கருவறையிலும் ஓம் ஓம் என்ற ஓம்காரம் ஒலிக்கிறது, அதாவது அருவமான மஹாமேரு எனக் கொள்க , மேரு போலவே உச்சியில் புள்ளியாக பிந்து மண்டலம் காணலாம், மஹா மேரு என்றால் திரிபுரம் அதன் உச்சியான பிந்து மண்டலத்தில் உறைபவள் திரிபுரசுந்தரி, சிவன் முடிமேல் கங்கை தத்துவம் போல பிரம்மாண்ட லிங்கத்தின் மீது அருவமாக இந்த மஹா மேரு வெற்றிடமாக அமைந்துள்ளது, உலகின் மிக உயரமான கருவறை இந்த பெருவுடையார் கோயில்கருவறை 13 அடுக்குகளைக் கொண்டது, ஆங்கிலத்தில் செங்கற்களை வைத்து கோபுரங்களாக கட்டுவேலை அமைப்பதை corbelling என்பர், அந்த வகையில் தனித்துவமான பிரம்மாண்ட பரீட்சார்த்தத்தை கொண்டுள்ளது இந்த கருவறை.
குறுக்கு வெட்டு தோற்றத்தில் இரண்டாம் கதலிகா கரணம்
பாருங்கள், இது கைலாய மலையை கோபுரத்தில் வார்த்துள்ள மேட்டின் பின்னால் இருப்பது,
( இப்படி வாழைப்பழ சீர் போன்ற வெற்றிடம் அமைப்பது cosmic energy ஐ கோவில் கருவறைக்குள் ஈர்க்கும் என்ற முதற்காரணம் )
ஒரு பெரிய கைலாய மலை மேட்டை கோபுரத்தில் உருவாக்கினால் , கட்டுமானப் பொருட்களால் filling செய்ய வேண்டி வரும், அப்படிச் செய்தால் எத்தனை எடை கூடும்? அதே கைலாய மேட்டின் உள்ளே வெற்றிடமாக அடுக்குகளாக இப்படி உருவாக்கினால் எத்தனை கட்டுமானப் பொருள் எடை குறையும்? அந்த காரணம் தான் இந்த கதலிகாகரண concept ,
இந்த கைலாய மலையின் பிரம்மாண்டம் காண இரு விழிகள் போதாது , இதன் மீது வார்த்திருந்த பொற்தகடுகளை உடைத்துத் திருடி எடுத்துச் சென்றனர் ஃப்ரெஞ்சுப் படைகள் ,
அந்நாளில் ப்ரெஞ்சுப் படையினர் இதை பெரிய உலக அதிசயமாகக் கருதினர்,அன்றைய 1758 ஆம் வருடத்தில் அவர்களின் உலக அதிசயமான ஈஃபில் கோபுரம் அவர்களிடம் இல்லை, (சுமார் 50 வருடம் கழித்தே அதை எளிதாகக் கட்டும் தொழில்நுட்பம் பயின்று உலகின் மூலைகளில் இருந்து தருவித்த எக்கு கிராதிகள் கொண்டு கட்டி முடித்தனர் )
தெற்கு மத்திய ஆசியாவில் இப்படி ஒரு பிரம்மாண்டமான கலைப் பொக்கிஷத்தை எதிர்கொள்ள இயலாமல் பீரங்கி கொண்டும் முடிந்தவரை தகர்த்து துளைத்தனர், அதையும் தாண்டி இன்றும் ஓங்கு தாங்காக நிற்கிறது பெருவுடையார் கோவில்.
#தஞ்சைபெரியகோவில்,#ஆவுடையார்கோவில்,#கைலாயம்,#mountkailash,#kailash,#abodeofshiva,#கதலிகாகரணம்