நேற்று என் நண்பர் ஒருவர் தனக்கு சற்றுமுன் மெட்ராஸ் ஐ பீடித்து விட்டது என்று போன் செய்தார், அவர் தந்தையின் கண் சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனை வந்தவருக்கு கண்கள் உறுத்த ஆரம்பித்து கண்ணில் நீர் வழிய ஆரம்பித்து குத்துவலி எடுக்க மெட்ராஸ் ஐ வந்ததை உறுதி செய்தார்,
சென்னையில் தற்சமயம் கண்சவ்வழற்சி என்ற மெட்ராஸ் ஐ நோய் பாதிப்புகள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பருவமழை முடிவடையும் போது இந்த கண்சவ்வழற்சி நோய் வேகமாக பரவுகின்றன, இந்த ஆண்டு நகரில் நீடிக்கும் மழைப்பொழிவு கண்சவ்வழற்சி நோயை மேலும் அதிகரித்துள்ளது.
பிறருக்கு பரப்பாமல் இருக்க கருப்பு கண்ணாடி அணிதல், தனிமைப்படுத்துதல் மூலமே இந்த கண்சவ்வழற்சியை ஐந்து நாட்களில் விரட்டலாம்.அடிக்கடி சானிடைசர் கொண்டோ சோப்பு கொண்டோ கை கழுவவேண்டும், மழையில் வெளியே செல்கையில் கண்ணாடி அணிய வேண்டும், எக்காரணம் கொண்டும் விரல்களால் கண்ணை தொட்டு விடக்கூடாது.
இந்த மெட்ராஸ் ஐ பரவுவது பற்றி தினத்தந்தி ஆங்கில தினசரி செய்தி வெளியிட்டுள்ளது, வெளியில் செல்லும் நண்பர்கள் அதிக கவனம் எடுக்கவும்.சுத்தமான கைக்குட்டை மாஸ்க் சானிடைசர் பையில் வைத்திருக்க மறக்க வேண்டாம்.
PS: இந்த கண்வலிக்கு என்றே அப்போது மருந்துக்கடைகளில் இதற்கென்றே வேப்பம்பழம் போன்ற வடிவில் கேப்சூல்கள் கிடைக்கும் அந்த கேப்சூல்கள் முனையை வெட்டி கண்ணில் பிதுக்கினால் கெட்டியான வெந்நிற மருந்து வெளியேறும், அந்த பிசுபிசுப்பை சகித்துக்கொண்டு கண்களை கசக்காமல் இருந்தால் மூன்று நாட்களில் சற்று குணமாகி,ஐந்து நாட்களில் கண்வலி விட்டு விடுதலையாகும்.
https://www.dtnext.in/city/2022/11/04/madras-eye-cases-on-the-rise-in-city