நம் நாட்டின் தலைவிதியை
பார்த்தீர்களா?
டீவிற்றவர் நாட்டை ஆள்வதும் கடிகாரம் தயாரிப்பவர் பாலத்தை பழுதுநீக்கி சுங்கம் வசூலிப்பதும் என கடந்த எட்டு வருடங்களில் prequalification என்ற அடிப்படை முன் அனுபவம் இப்படி சந்தி சிரிக்கிறதே.
மோர்பி தொங்கு பாலத்தை கடக்க 17₹ வசூலித்த நுழைவுச்சீட்டைப் பாருங்கள், தங்கமுட்டை இடும் வாத்தை அறுப்பது போல ஒரே சமயத்தில் ஐநூறு பேரை தொங்கு பாலத்தின் உள்ளே அனுப்பி உள்ளனர் முட்டாள் ஊழியர்கள், இப்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தின் படி பாலத்தில் இருக்கும் ஆட்கணக்கை எண்ணும் people counter இருபுறமும் நிறுவியிருந்தால் கூட இந்த உயிர்பலிகளை தடுத்திருக்கலாம்.
மக்கள் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது இது தான் , இந்த நுழைவுச் சீட்டில் என்ன எழுதி உள்ளது தெரியுமா?
தொங்கு பாலத்தை சேதப்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு கேட்கையில் டிக்கெட்டை வழங்க வேண்டும், வெளியேறிய பிறகு 'பாஸ்' செல்லுபடியாகாது.
இந்த மோர்பி பாலத்தை ஏழு மாதங்களாக மராமத்து செய்தவர்கள் யார் தெரியுமா? கட்டுமானத்துறையில் Prequalification இல்லாத oreva என்ற குஜராத் மோர்பியை சேர்ந்த சுவர் கடிகாரம் மற்றும் ebike தயாரிப்பாளர்கள்,
சீன உதிரி பாகம் வாங்கி பொருத்தி சந்தைப்படுத்தும் குடிசைத்தொழில் நிறுவனத்தார் என்றால் மிகையில்லை,
மக்கள் உயிர் சம்மந்தப்பட்ட இந்த தொங்குபால மராமத்து ஒப்பந்தப்பணியை இவர்களுக்குப் போய் தேடிப்பிடித்து தந்துள்ளனர்,தவிர 2037 ஆம் ஆண்டு வரை நுழைவுக் கட்டணம் வசூல் செய்யவும் அனுமதி தந்துள்ளனர்.
இதன் விளைவாக நூற்றுக்கணக்கானோர் பலியான இந்த கோர விபத்து நிகழ்ந்திருக்கிறது,
இது தான் குஜராத் மாடல்,இதை தமிழகத்தில் கொண்டு வரத் தான் ஆசைப்படுகின்றனர் வாட்ஸப் பல்கலை விஷவிதை பகிர்வாளர்கள்,
மோர்பி தொங்கு பாலம் விபத்து நிகழ்ந்த இந்த துயர் மிகு தருணத்தில் எனக்கு PM Office ல் இருந்து மின்னஞ்சலில் வந்த செய்தி என்ன தெரியுமா? மோதி இந்தியாவில் அழிந்து வரும் சிறுத்தை இனத்தை காப்பதற்கு வேண்டி நமீபியாவில் இருந்து 8 சிறுத்தை குட்டிகளை இறக்குமதி செய்து மத்திய பிரதேசத்தின் குனே தேசிய உயிரியல் பூங்காவில் விட்டிருக்கிறாராம்,அவற்றைப் பார்க்க வாருங்கள் என்ற செய்தி தான் அது, சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைப்பது போல சிறுத்தைகள் வாங்கிய செய்தியை வைத்து இந்த துயர்மிகு மக்கள் உயிர்பலி செய்திகளை மறைக்க முடியுமா?