ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ரயிலில் செய்தித்தாள் வாசிக்கும் காட்சி இது, இதில் காணவில்லை என்ற பெட்டி செய்தி விளம்பரம் கொண்ட செய்தித்தாளை தனியாக ப்ரிண்ட் செய்யாமல் ஏதோ பழைய செய்தித் தாள் மீது ஓட்டியது துருத்தித் தெரிவதைப் பாருங்கள்,அதுவும் ஓரம் கிழித்ததைப் பாருங்கள்.
அந்த 1966 க்கு தமிழ்சினிமாவில் அவ்வளவு தான் perfection, அத்தனை தான் மெனக்கெடல், இந்த அவலத்தை தன் படங்களில் களையத் துவங்கியது நடிகர் கமல்ஹாசன் தான்.
மைக்கேல் மதனகாமராஜனில் ராஜூவின் கீழே விழுந்த கிழிந்த பர்ஸ் பாருங்கள்.