இன்று தாழம்பூர் Dlf garden city ல் எங்கள் தங்கை வீடு சென்று வந்தேன், இது தாழ்வான பகுதி ஆதலால் பெருமழைக்காலத்தில் ஏரிபோல நீர் சூழ்ந்து காட்சி அளிக்கும், சுமார் பத்தாயிரம் வீட்டு மனிதர்கள் எதற்கும் வெளியே வர முடியாது, இங்கு படகு போக்குவரத்துக்கு 1000₹ வசூல் செய்த கதைகள் கூட உண்டு, சவ மரியாதைக்கு பெரிய ட்ரக் லாரியை உபயோகித்த துயரக் கதைகள் 
கேட்டுள்ளேன், இன்றைய படங்கள் இணைப்பில் பாருங்கள்,
முந்தைய ஆட்சிக்காலத்தில் இங்கே இந்த gated communityஐ சுற்றிலும்  அமைய இருந்த covered  box caison canal திட்டத்தை அப்படியே பத்து வருடங்கள் கிடப்பில் இட்டுவைத்திருந்தனர், 
ஒவ்வொரு மழைக்காலத்திலும் இங்கே ஏரியாக மூடிவிடும், psbb பள்ளி , அம்மா உணவகம் என அனைத்தும் நீரில் மூழ்கிவிடும்.
கிரஹணம் விட்டது போல ஆட்சி மாற்றம் அமைந்து இந்த gated community ன் பின்னால் எல்லை சுவரை தொட்டடுத்து   box caison canal பணிகள் ஒரு வருடத்திற்குள் பூர்த்தி ஆனதை இணைப்பு படங்களில் zoom செய்து பாருங்கள், இது 20 ஆம் மாடி பால்கனியில் இருந்து எடுத்த படங்கள்,gated commutity வளாகத்திற்குள் இம்முறை பொட்டு தண்ணீர் எங்கும் தேங்கவில்லை.
பிரதான சாலை மீது மூன்று கண் மதகுப் பணிகள் பாருங்கள், இதன் உயரம் 16 அடி, ஒரு மதகின் உள்கூடு 10அடி, (3x10'= 30' ) மூன்று கண் மதகு சுமார் 35 அடி அகலம் எத்தனையோ கிலோ மீட்டர் நீளத்தில் பணிகள் நிறைவாக நடந்து வருகின்றன, இதன் மீது sluice என்ற மடைமாற்றும் மதகு கதவுகள் கூட அமைய உள்ளனவாம்,இந்த முழுக்க காங்க்ரீட்டால் மூடிய கால்வாய்களை நேரே கடலில் கொண்டு போய் கலக்க விட பணிகள் நடைபெறுகின்றன, அத்தனை நிறைவான பணி இது , முதல்வர் ஸ்டாலின் இது வரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை வந்து இந்த பணிகளை பார்வையிட்டு துரிதமாக பணிகள் நடைபெறுவதை உறுதி செய்வதாக அறிந்தேன்.
இரு வருடங்களுக்கு முன்பு இதே நவம்பர் மாதத்தின் பெருமழைக்காலத்தில் இந்த dlf garden city  gated community எப்படி இருந்தது என்ற அவலத்தை இங்கே பாருங்கள்.
இது ஆகஸ்ட் மாதம் எழுதிய பதிவு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
 
 
 
 
 
