Prem Behari Narain Raizada | பிரேம் பிஹாரி நரேன் ரைசாதா (1901–1966) இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் எழுத்துக்கலை ஓவியர் (calligraphist) ஆவார்.
நம் ஒப்பற்ற அசல் அரசியலமைப்பு சாசனத்தை அவர் calligraphy பாணியில் சிரமேற்கொண்டு அத்தனை அழகியலுடன் எழுதினார்.
அசல் அரசியலமைப்பின் இந்தி பதிப்பின் எழுத்துரு கொண்ட பக்கங்களுக்கு மட்டும் எழுத்துக்கள் ஓவியர் வசந்த் கிருஷன் வைத்யா இவருடன் இணைந்து பணி செய்தார்.
அரசியலமைப்பு மண்டபத்தில் (இப்போது இந்திய அரசியலமைப்பு கிளப் என்று அழைக்கப்படுகிறது) ஒரு அறையில் அயறாது பணிபுரிந்த பிரேம் பிஹாரி, 395 கட்டுரைகள், 8 அட்டவணைகள் மற்றும் ஒரு முன்னுரையை உள்ளடக்கிய ஆவணத்தை ஆறு மாத காலத்தில் கைகளால் எழுதி நமக்கு அருங்கொடையாக வழங்கியுள்ளார்.
அவர் எழுதும் போது நூற்றுக்கணக்கான பேனா நிப்புகளை பயன்படுத்தினார், அவரது எழுத்து நடை பாணி பற்றிய graphic design, font குறிப்பையும் அவர் அந்த சாசன ஆவணத்தில் இணைத்தார்.
இந்த அரசியல் சாசனம் முழுக்க வரைந்தும் எழுதியும் முடிந்ததும், கையெழுத்துப் பிரதி 251 பக்கங்கள் மற்றும் 3.75 கிலோ (8.26 பவுண்டுகள்) எடையிருந்தது.
இந்த கையெழுத்துப் பிரதி 26 நவம்பர் 1949 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது , மற்றும் 26 ஜனவரி 1950 ஆம் ஆண்டு அரசியல் தலைவர்கள் படித்துப் பார்த்து திருத்தங்கள் சொன்னதும் புரிந்துணர்வுடன் கையெழுத்திடப்பட்டது.
அரசியலமைப்பை கையால் எழுதுவதற்கு என்ன கட்டணம் வசூலிப்பீர்கள் என்று பிரதமர் நேரு கேட்டதற்கு, ரைசாடா பதிலளித்தார்.
ஓவியர் ரைசாதா இந்த தேசத்தின் பெருமை மிகுந்த பணிக்கு கட்டணம் எதுவும் வேண்டாம் என மறுத்தவர்,
எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நான் என் பெயரை எழுத வேண்டும்,கடைசிப் பக்கத்தில் என் தாத்தாவின் பெயரான Master Ram Parshadji Saxena உடன் என் பெயரையும் எழுத வேண்டும் என்றிருக்கிறார், பிரதமர் நேரு அந்த creator credit விருப்பத்தை மதித்து நிறைவேற்றியுமிருக்கிறார்.
"ரைசாடா 1901 ஆம் ஆண்டு டிசம்பரில் calligraphy கையெழுத்து கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார்.
அவரது தாயார் மற்றும் தந்தை இருவரும் இளமையாக இருந்தபோது இறந்துவிட்டனர், எனவே ரைசாதா அவரது தாத்தாவால் வளர்க்கப்பட்டார் , அவரே ஆங்கிலம் மற்றும் பாரசீக அறிஞர், ரைசாதாவுக்கு இந்திய கையெழுத்து கலையை கற்பித்தார்.
ரைசாடா டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் படித்தவர், அங்கு அவர் தனது எழுத்துத் திறனைத் தொடர்ந்து செம்மைப்படுத்தினார்.
1940 களின் பிற்பகுதியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சபை உருவாக்கிக்கொண்டிருந்தபோது, ஜவஹர்லால் நேரு ரைசாதாவை அணுகி முதன்மை அரசியல் சாசன ஆவணத்தின் முதல் நகலை எழுதும்படி கேட்டுக் கொண்டார்.
ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் ஜரிகை எல்லைக் கோடுகளும் நந்தலால் போஸ் தலைமையிலான சாந்திநிகேதனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்களால் பார்த்துப் பார்த்து நகாசு வேலைகள் செய்து அலங்கரிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றில் இருந்து பல்வேறு சரித்திர நிகழ்வுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் அரசியலமைப்பின் அந்தப் பக்கங்களில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் குறிக்கோள்கள் மற்றும் இலட்சியங்களைக் கோடிட்டுக் காட்டும் இந்த உன்னத ஆவணத்தில் மகாத்மா காந்தியைத் தவிர பல தலைவர்கள் கையெழுத்திட்டனர்,
மகாத்மா காந்தி முழு அரசியலமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்தபோது உயிருடன் இல்லை.
முழு அரசியலமைப்பையும் பக்கம் பக்கமாக எழுதுவதற்கு நீண்ட நாட்கள் ,நீண்ட நேரம் எடுத்த போதிலும், ஒரு அடித்தல் திருத்தல் ,வெள்ளை வைத்து அழித்த அடையாளமும் எங்கும் இல்லை, italic font ல் சாய்வு நடையில் ஒரே சீரான உயரத்தில் , ஒரே சீரான தடிமனில் தரமாக எழுதப்பட்ட சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று இந்த ஆவணப்புத்தகம்.
இவர் வரைந்த சாசன பக்கங்கள் சில இணைப்பில்.
#இந்திய_அரசியலமைப்பு_சட்டம்,#calligraphy, #manual_documentation, #master_piece