அண்ணாத்தே படத்தின் காமெடி புதுமையாக உள்ளது,polygamy அடல்ட் காமெடியை அதன் விரசம் வெளியே தெரியாமல் வசனங்களில் அபிமான நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட திதி கன்னட படத்தின் சென்சுரி கவுடா குணாதிசயத்தை நம் காளையன் அண்ணாத்தேக்கு தந்திருக்கிறார் இயக்குனர்.
அண்ணாத்தேயின் முறைப்பெண்கள் மீனாவும் குஷ்பூவும், அண்ணாத்தே இவர்களை ஒரு சேர பத்து வருடங்களுக்கு முன்பு வரை முறையே காலி டெண்ட் கொட்டாயிலும் , இருட்டு கரும்புத்தோப்பிலும் வைத்து சுகித்திருக்கிறார், வெளியே அவரின் தம்பிகள் பொரி உருண்டை, கடலை மிட்டாய் கையூட்டு பெற்று காவல் காத்திருக்கின்றனர், அது தான் அவருக்கு பெயர் காளையன் போல .
முறைப் பெண்களை பல பல வாறு சென்டிமென்ட் வசனம் பேசி பத்து வருடங்களுக்கு முன்பு கழித்துகட்டி கைகழுவியிருக்கிறார் அண்ணாத்தே.
அண்ணாத்தே அவர்களை சடுதியில் கைகழுவிவிட்டாலும் அவர்களால் அண்ணாத்தேயை மறக்கவே முடியவில்லை, லிவிங்ஸ்டன் பாண்டியராஜன் என்று ஒப்புக்கு இரண்டு வெத்து வேட்டு கணவர்களுக்கு மனைவியாக வாழ முடியவில்லையாம், அதனால் பாருங்கள், தம் உதவாக்கரை காவல்காரத் தம்பிகள் முறையே சத்யன் , சதீஷ் இருவருக்கும் அண்ணாத்தேயின் தங்கை தங்க மீனாட்சியை பெண் கேட்டு வந்து ஐந்து நாட்கள் அண்ணாத்தே வீட்டில் டேரா போடுகின்றனர், பழைய காதலரை அப்படி சைட் அடிக்கின்றனர். முறைப்பெண்களின் தம்பிகளில் ஒருவரான சத்யன் தீனிவெறியர், மற்றொருவரான சதீஷன் பணிப்பெண் வெறியர்.
தத்தம் தம்பிகளுக்கு அண்ணாத்தேயின் தங்கை தங்க மீனாட்சிக்கும் காதல் வர குடும்ப சகிதம் பாடுபடுகின்றனர்.
இருந்தும் அந்த ஆசை நிறைவேறாமலே போய்விடுகிறது.
அதனால் அவர்கள் தினத்தந்தி க்ரைம் செய்தி பாணியில் அண்ணாத்தேயை மடக்கி வாய் விட்டே கேட்கின்றனர், மீனா, ம் என்று சொல்லுங்கள் என் புருஷனை விவாகரத்து செய்து விட்டு உங்களை மணக்கிறேன் என்கிறார்.
குஷ்பூவோ, கண்ணை மட்டும் காட்டுங்கள் என் புருஷனை உலக்கையால் அடித்துக் கொன்று விட்டு உங்களுடன் வருகிறேன் என்கிறார்.
மிகவும் முன்னேற்றமான polygamy காமெடியை குடும்பப் படத்திற்குள் கச்சிதமாக வைத்துவிட்டார் இயக்குனர், இந்த படத்தை யாரும் முழுதாகப் பார்க்காதது இயக்குனருக்கு வசதியாகிவிட்டது.எதிர்காலத்தில் இது போல நகைச்சுவை ட்ராக் எழுதக்கூடியவர்களுக்கு நல்ல கிராக்கி உண்டு.
நம் தலைவர் ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்டும் கூட
https://www.facebook.com/750161339/posts/10157852490801340/
#நாட்டுக்கு_ஒரு_நல்லவன்.