ஸ்கூட்டர்,மோட்டார் பைக் டயர் மாற்ற எண்ணுபவர்கள் தயங்காமல் Michelin டயர் வாங்குங்கள், வண்டி ஓட்டுகையில் வாரி விடுகிறது, வண்டியை போட்டு விழுந்து விட்டேன் என்பவர்கள் தயங்காமல் இந்த டயர் வாங்குங்கள், பஞ்சர் அதிகம் வராது, காற்று அதிகம் இறங்காது,1350 ₹ விலை வருகிறது, இரண்டு வருட உத்திரவாதம் உண்டு, ஆன்லைனில் வாங்காதீர்கள் உத்திரவாதம் செல்லாது , இது நல்ல Road Grip தரும் , 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் அசராது உழைக்கும்,
PS: அக்டோபர் 2021 மீண்டும் மிஷலின் டயர் வாங்கி முன் சக்கரத்தில் பொருத்தினேன்,ரதம் போல செல்கிறது, அத்தனை சொகுசு.
பட்டன் பெரிதாக உள்ள மற்ற பிராண்ட் டயர்களை் வாங்கி ஏமாறாதீர்கள், உயர்தர ரப்பரின் தரம் தான் சாலையை காந்தம் போல பிடிக்கிறது,சுகமான stability ,grip தருகிறது.
அன்று ஒரு முரட்டுத்தனமான off road ride போகையில் 3 பஞ்சர் ஆகியும், 10 பாயிண்ட் காற்று மீதம் இருக்கிறது, எங்கும் நடுசாலையில் நிறுத்தவில்லை, பஞ்சர் என்றே தெரியவில்லை,
என் நண்பர் ஒருவர் ட்ராவல்ஸில் senior ஓட்டுனர்,அவர்கள் ட்ராவல்ஸில் புதிய கார் எடுத்ததும் முதலில் டயர் கடைக்கு காரை எடுத்துச் சென்று கார் கம்பெனி மாட்டித் தந்த டயர்களை கழற்றி Buy Back ல் விற்று விட்டு ,Michelin டயர் மாட்டி விட்டு அதன்பின்பு வெளியூர் சவாரி செல்வார்களாம்,காரணம் இதன் நீண்ட ஓட்டம்,குறைவான தேய்மானம்,road grip , நான் பல வருடங்களாக இந்த டயர் உபயோகிக்கிறேன், இதுவரை பயணத்தில் காலை வாரியதில்லை.
#Michelin,#டயர்,#road_grip,#mileage