கீசக வத பர்வம் நிகழக் காரணமான திரௌபதி அவமதிப்பு சம்பவ ஓவியம் இது , ஓவியர் ராஜா ரவி வர்மா 1897 ஆம் ஆண்டு வரைந்தது, திருவாங்கூர் அரண்மனைக்கு ராஜா ரவி வர்மா வரைந்த முதல் ஓவியம் இதுவாகும்.
விராட மன்னனின் மைத்துனனும் படைத் தளபதியுமான கீசகன், மிகவும் சக்தி வாய்ந்தவன் அபரிமிதமான வலிமை கொண்டவன். விராட அரசை பலமுறை எதிரிகளிடமிருந்து காப்பாற்றியவன். பணிப்பெண் சைரந்திரியை (வனவாசத்தில் ஒளிந்து வாழும் திரௌபதி) பார்த்ததிலிருந்து அவள் மீது மிகுந்த ஆசை கொள்கிறான்.
கீசகன் தன் அக்கா ராணி ஷுதேஷ்ணாவை அணுகி, அழகிய பணிப்பெண் சைரந்திரியைப் பற்றி விசாரிக்கிறான், ராணிக்கு சைரந்திரியின் உண்மையான அடையாளம் தெரியவில்லை,
எனவே ஒரு பரஸ்பர சந்திப்பை இருவருக்கும் ஏற்பாடு செய்கிறாள்,இந்த தருணத்தை கூட 1896 ஆம் ஆண்டில் தனியே ஓவியமாக வரைந்துள்ளார் ரவி வர்மா,இணைப்பில் காண்க .
சைரந்திரி,கீசகனுக்கு தான் ஏற்கனவே திருமணம் ஆனவள் என்பதைத் தெரிவிக்கிறாள், கீசகன் அவளைப் பின்தொடர்வது பொருத்தமற்றது தர்மத்திற்கு எதிரானது என்கிறாள்.
பணிப்பெண்ணாக இருப்பவளுக்கு ஆடம்பர வாழ்க்கை தருகிறேன் என்கிறான் கீசகன். சைரந்திரி தன்னை பின் தொடர்வது தவறு என்கிறாள்.
கீசகன் விரக்தியடைந்து, சைரந்திரியை இன்னும் அதிகமாக விரும்புகிறான்.
ராணி ஷுதேஷ்ணா சைரந்திரியிடம் கிசகனின் வீட்டிலிருந்து தனக்கு மதுவை எடுத்து வரச் சொல்கிறாள். சைரிந்திரி பயத்துடன் கீசகன் வீட்டிற்கு மதுவை எடுக்கச் செல்கிறாள்.கீசகன் அவளை அங்கே வைத்து வலுக்கட்டாயமாக அடைய நினைக்கிறான், இதையும் 1910 ஆம் ஆண்டு தனி ஓவியமாக வரைந்துள்ளார் ராஜா ரவிவர்மா, இணைப்பில் பார்க்கவும்.
சைரந்திரி அவனைத் தள்ளிவிட்டு மன்னன் விராடனின் அரசவைக்குள் ஓடி தஞ்சமடைந்து விழுகிறாள். கீசகன் அவளை துரத்திச் சென்று பிடித்து, அரசன் முன்னா் விராட அரசவையில் துணிவுடன் உதைக்கிறான்.
சைரந்திரி (திரௌபதி) அரசனிடம் குமுறியபடி நீதி கேட்கிறாள். விராடரும் , ஊர் தலையாரி கன்காவும் (அஞ்யாதவாசத்தில் துறவியாக வேடம் தரித்து மறைந்து வாழும் யுதிஷ்டிரர்) சைரந்திரிக்கு ஆறுதல் கூறி, அனைத்து உண்மைகளையும் உரிய விசாரணை செய்து பின்னர் நீதி வழங்குவதாக உறுதியளிக்கும் தருணம் இது.
தனக்கு ஏற்பட்ட அவமானம், நீதி தாமதம் ஆகிய காரணங்களால் மனமுடைந்த சைரந்திரி, அரசனையும்,அவர் நண்பர் கன்கனையும் வெகுண்டு எழுந்து திட்டுகிறாள்.
சைரிந்திரியிடம் தவறாக நடந்ததைப் பற்றி கேட்டு அறிந்த ராணிக்கும் மன்னருக்கும் கையறு நிலை, கீசகன் தம்பிகள் 105 பேர், அவர்கள் கீசகன் படையின் முக்கிய வீரர்கள் .
திரௌபதி அரண்மனக சமையல்காரன் மற்றும் மல்யுத்த வீரன் வல்லவா (அஞ்யாதவாசத்தில் துறவியாக வேடம் தரித்து மறைந்து வாழும் பீமன்) சந்தித்தவள் கீசகனால் தனக்கு நேர்ந்த அவமானத்தையும், தன் மூத்த கணவனான யுதிஷ்டிரன் விளைவித்த உபத்திரவத்தால் இந்த 12 ஆண்டுகள் வனவாசத்தில் எவ்வளவு விரக்தியடைந்துள்ளேன் எனவும் விவரிக்கிறாள், திரௌபதி கீசகன் தீயவன் சாக வேண்டியவன் என்பதை நன்கு தூபமிட்டு அவனுக்கு உரைக்கிறாள்,
மீண்டும் மீண்டும் வெறி கொண்டு பின்னால் வந்த கீசகனை தான் துச்சமாக நிராகரித்ததை பீமனிடம் சொல்கிறாள், கீசகனின் மரணத்தை தனக்கு பரிசளிக்குமாறு கோருகிறாள்.
அடுத்த நாள், கீசகன் மீண்டும் பணிப்பெண் சைரந்திரியை அணுகி, அவளை அடையும் நோக்கில் துன்புறுத்துகிறான், சைரந்திரி இங்கே எதுவும் வேண்டாம் என்றவள் அவனை ஒரு ஊருக்கு வெளியே உள்ள நடனப்பயிற்சி பள்ளியில் வந்து சந்திக்கும்படி கூறுகிறாள்.
சைரந்திரிக்கு பதிலாக பீமன் கீசகனை பெண்வேடமிட்டு சந்திக்கிறான், கீசகனை மல்யுத்தம் செய்து சிங்கம் யானையை தாக்கி கொல்வது போலவே கொல்கிறான்,உங்கிர சண்டையில் ஆடைகள் கிழிந்து முழு நிர்வாணமானவன் கீசகனின் தலையை முடி கொண்டு இடுப்பில் ஆடையாக அணிந்து கொள்கிறான், கீசகனின் மலை போன்ற உடலை கைகால்கள் இடுப்பு மார்பு என ஒரே மாமிச உருண்டையாக (சமகால rotisserie என்ற ஷவர்மா மாமிசப் பொதியைப் போல) உருட்டி பிடித்து வைக்கிறான் பீமன்.
தம்பிகளான உபகீசவர்கள் 105 பேர் கீசகனின் மரணத்திற்கு பணிப்பெண் சைரந்திரியைக் குற்றம் சாட்டி, அவளைப் பிடித்து எரித்துக் கொல்ல முயற்சிக்கிக்கிறார்கள், பீமன் வெகுண்டெழுந்து, சைரந்திரியை எரிக்க முயன்ற அனைவரையும் தாக்கி கொல்கிறான்,அதன் பின்பு தான் திரௌபதி மிகுந்த ஆசுவாசமடைகிறாள்.
இதில் தாடி வைத்து மன்னருக்கு அருகில் நிற்பது கன்கா (மாறுவேடமிட்ட யுதிஷ்டிரர்) மன்னர் காலடியில் தலைப்பாகை அணிந்து கண்கள் கொப்பளிக்க கோபத்தில் அமர்ந்துள்ளது அரண்மனை சமையல்காரன் வல்லவா என்ற பீமன்,அவன் செய்த அசகாய மல்யுத்த செயல்களால் அவனுக்கு நல்ல மரியாதை கிடைக்க அவன் அரண்மனையில் தரையில் வசதியாக அமரும் அந்தஸ்தை வழங்கியுள்ளது , அண்ணன் யுதிஷ்டிரரை மீறி அவரால் அங்கே எதுவும் செய்ய முடியாது,அண்ணன் தர்மர் ஆதலால் தன் சுயநலத்துக்காக மன்னரை சிக்கலில் மாட்டி விட முடியாத கையறு நிலையை அனுபவிக்கிறார்..