சலங்கை ஒலி திரைப்படத்தில் வரும் இது மௌனமான நேரம் பாடல் ஏன் இத்தனை காவியத்தன்மையுடன் அமைந்திருக்கிறது என நிறைய யோசித்திருக்கிறேன்,
இன்று அப்பாடலை நிறுத்தி நிதானமாகப் பார்க்கையில் பிடி கிட்டியது, ஜெயப்ரதா சரத்பாபுவின் மனைவியின் மணப்பெண் தோழி , கமல் மாப்பிள்ளைத் தோழர் , தோழி மணப்பெண்ணை முதலிரவு அறைக்குள் இவரது national panasonic tape recorder ல் ரேடியோ tune செய்து இந்த மௌனமான நேரம் பாடல் சரியாக துவங்கவும் உள்ளே தந்து விடுகிறார்,
அந்த அறை சுவற்றில் பாலுவின் நடனமாடும் படங்களுடன் ராஜா ரவி வர்மா வரைந்த சிவன் ஓவியம் rule of third ல் ஒட்டியதைப் பார்த்ததும்,அது கட்டியம், tribute எனக் கண்டு கொண்டேன்,
அது முதல் அப்பாடலை நான் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டேன், குறிப்பாக ஜெயப்ரதா கமல்ஹாசன் இருவரும் இரவின் தனிமையில் வள்ளுவர் கோட்டத்தில் தேரடியில் உலா போய் வீடு திரும்ப, கமல் விடை பெற்றதும் ஜெயப்ரதாவிற்கு பசலை (காதல் நோய்) படர்ந்துவிடுகிறது,
அதன் பின்னர் ஒளிப்பதிவாளர் ஜெயப்ரதாவிற்கு வைத்த கோணங்கள் அத்தனையும் ரவிவர்மாவின் ஓவியங்களின் தாக்கத்தை கொண்டிருந்தன என்றால் மிகையில்லை,
இரவின் மடியில் இசையின் துணையில் பெண்ணின் தனிமை என்ற theme ஐ அபாரமாக சித்தரித்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் P.S.நிவாஸ் அவர்களும், இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களும்,
அழகிய பெண்ணுக்கு பீடித்த பசலை, எத்தனை குளித்தாலும் போகாது, எத்தனை நன்கு உடுத்தினாலும் போகாது, எத்தனை இசை கேட்டாலும் அகலாது, பெண்மையின் அழகியல், பெண்மையின் கம்பீரம் என அத்தனை அழகு மிகுந்த இசைஞானி இசையில் , கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள்,ஜானகி அம்மாவின் பசலையை பறைசாற்றும் ரம்மியமான குரலில் மறக்க முடியாமல் செய்து விட்டனர்.
இயக்குனர் சத்யஜித் ரே அவர்களுக்கு நடிகை ஜெயப்பரதா மிகவும் பிடித்ததற்கு காரணமும் இந்த ஓவியர் ரவிவர்மா connection தான்,இந்திய சினிமாவில் பேரழகி என அவரை புகழ்ந்ததற்கும் காரணம் இதுவே, இயக்குனர் சத்யஜித் ரே அவர்கள் தன் சாருலதா, அபுர் சன்சார் , தேவி , Aranyer Din Ratri உள்ளிட்ட ஏனைய படைப்புகளில் பெண் கதாபாத்திரங்களை அழகு தேவதைகளாக சித்தரிக்க இந்த ஓவியர் ரவிவர்மா connection ஒரு முக்கிய காரணமாகும்,
இணைப்பு படங்களை ஒவ்வொன்றாக பார்த்தால் சொல்வது விளங்கும், ஒளிப்பதிவாளருக்கும் இயக்குனருக்கும் தேர்ந்த கலை ரசனை மிகவும் முக்கியம் ,அது இருந்தால் அந்த படைப்பு நிச்சயம் அமரத்துவம் பெறும்,நூறாண்டு கடந்தும் பேசப்படும்.