இன்று saveetha university சென்று என் குடும்ப dentist சேதம் செய்த metal ceramic crown ஐ அகற்றிவிட்டு ,புதிய full ceramic crown ற்கு அளவு தந்து வந்தேன்,பழைய crown அகற்ற இந்த spring action crown remover வைத்து பொருத்தமான கொறடு (claw) பூட்டி பல் அடியில் பொருத்தி இந்த press button அழுத்தியபடியே நான்கு தட்டு தட்ட சேதமடைந்த crown கையோடு கழன்று வந்து விட்டது,ஏதோ நல்லி எலும்பு கடித்து பல் உடைந்தது போல crown மேற்பகுதி தவிர முழுக்க சேதமாகிவிட்டது.
வலி இல்லை, அதன் பின்னர் root canal செய்த பல்லை சுற்றி இருந்த சிமெண்டை நன்கு கீறி சுத்தம் செய்தார் மருத்துவர், இந்த crown அகற்றுவதற்கு கட்டணமில்லை, இதை அகற்றும் முன்னர் 4 xray எடுத்தனர், அதற்கும் கட்டணமில்லை.
புதிய full ceramic crown பொருத்த 2050₹ ஆகிறது, அடுத்த வெள்ளி அன்று appointment தந்துள்ளார் MDS internship மருத்துவர்.
இங்கே Full metal crown ற்கு 650₹
படத்தில் உள்ளது போல metal ceramic crown ற்கு 1650₹ , வேண்டுபவர்கள் இந்த பல் மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று பக்கத்து dental station ல் படுத்திருந்த புள்ளீங்கோ தோற்றம் கொண்ட கல்லூரி மாணவனுக்கு பத்து பற்கள் சொத்தை, root canal செய்து cap இட வேண்டி 3200₹ + full metal ceramic 6500₹ என மொத்தம் 9700 ஆகும் என அவன் ஐயத்தை வேறு ஒரு மருத்துவர் தீர்த்தது சன்னமாக காதில் விழுந்தது.
வெளியே ஒரு 3D printing எந்திரம் யாரோ அளவு தந்த crown ஐ cad cam அளவுகளின் படி மிகவும் சிரத்தையாக 3D printing செய்து உருவாக்கியபடி இருந்தது.
இந்த metal ceramic crown சேதமான கதையை இங்கே எழுதி உள்ளேன்.