எங்கள் வீட்டில் Atomberg renessa மின்விசிறியில் இரு வாரங்களுக்கு முன்பு காற்று சுழலும் வேகம் குறைந்தது, நேற்று மாலை support@atomberg.com ற்கு invoice மின்னஞ்சல் செய்து பிரச்சனையை சுருக்கமாக எழுத,நேற்று மாலையே சர்வீஸ் டெக்னீஷியன் பேசினார், இன்று காலை சர்வீஸ் டெக்னீஷியன் விலாசம் வாங்கி நேரில் வந்தார்,மற்ற அறைகளில் சுழன்ற Atomberg renessa மின்விசிறிகளின் வேகத்தை பார்த்து இந்த குறைந்த வேகத்தை கண்டுணர்ந்தவர் , மின்விசிறியின் fan motor ஐ கழற்றி அதன் sensor board ஐ புதிதாக எந்த கட்டணமுமின்றி மாற்றித் தந்துவிட்டுச் சென்றார்,மின் விசிறியில் பழையபடி நல்ல வேகம் திரும்பி விட்டது.
மேலும் ஒரு tip,
Atomberg ல் fan blades தனியே விற்கின்றனர், இந்த 1200mm, 1400mm இரண்டு அளவுகளின் fan blades ற்கும் ஒரே fan motor தான்.
எனவே ஏற்கனவே 1200 mm sweep வாங்கி உபயோகிப்பவர்கள் 1400mm blades ஐ Atomberg இணையத்தளத்தில் வாங்கி upgrade செய்து கொள்ளலாம் , 3 blades விலை 640₹ வருகிறது,அதே 28 w மின்சாரம் தான் கோரும் .
இதில் மற்றொரு சிறப்பு என்றால் 1200 mm sweep fan blades விலையும் கூட 640₹ தான், எனவே புதிய மின்விசிறி வாங்குபவர்கள் 1400 mm தேர்வு செய்து வாங்குவது புத்திசாலித்தனம்.
ஏற்கனவே வெள்ளை நிற மின்விசிறிகள் வாங்கியவர்கள் அடர்நிற வண்ணங்களில் fan blades புதிதாக தேர்வு செய்து மாற்றலாம், 1400 mm sweep மூலம் காற்றும் அதிகம் கிடைக்கிறது,அடர் நிறங்கள் தேர்வு செய்ய சீக்கிரம் அழுக்கும் தெரியாது.
Blades, motor, remote, canopy, fan rod என எதுவும் இங்கே தனியாக வாங்கலாம்.