சென்னையில் முப்பது வருடங்களுக்கு முன்பு நகரமயமாகலுக்கு முன்னர்  இத்தனை இதமான தட்பவெப்பம் இருந்துள்ளது, அதன் பின் இப்போது தான் 25° இதமான தட்ப வெப்பத்தை உணர்கிறேன்.
வீட்டில் ஏசி ஓட விட்டே இரண்டு வாரங்கள் இருக்கும், 
அமீரகத்தில் நவம்பர் - டிசம்பர் துவங்கி மார்ச்- ஏப்ரல் வரையான சுமார் ஐந்து மாதங்கள் சொர்க்கமானவை, வீட்டில் split ac, centralized ஏசியை அணைத்தே வைத்திருப்பார்கள், கர்ண கொடூரமான window ac இயங்கும் சத்தம் எல்லாம் மக்களுக்கு மறந்தேவிடும், அங்கே கன மழை அபூர்வம், பனி இறங்கும் ,வீட்டில் இருந்து வெளியே போனால் winter jacket , தலையில் hood  இடாமல் போக முடியாது  , அறையின் சுவர் தரை எல்லாம் கூட ஜில்லென மாறி இருக்கும், அமீரகத்தில் முதலில் வேலைக்கு செல்பவர்கள் இந்த காலகட்டத்தில் சென்றால் அவர்கள் பத்து இருபது வருடம் கூட பிடித்து நின்று விடுவர், ஆகஸ்ட் செப்டம்பரில் முதலில் வேலைக்குச் செல்பவர்கள் humidity தாங்காமல் விசா அடிக்கும் முன் தெறித்து ஸ்தலம் விட்டதைப் பார்த்துள்ளேன்
சென்னையில் ஐந்து மாதம் எல்லாம் அது போன்ற இதமான தட்பவெப்ப நிலைக்கு வாய்ப்பில்லை, என்றாலும் இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் ஏங்குகிறது.

 
 
 
 
 
