ஆயிரம் ஆண்டு பழமையான கற்சிலைகளை இப்படித்தான் மெத்தனத்தில் அங்க ஹீனம் செய்கின்றனர், இன்றும் கோயில் செல்பவர்கள் நுட்பமாக கவனித்தால் எல்லா சிலைகளிலும் மூக்கு உடைந்தோ, காது அறுந்தோ, விரல் துண்டுபட்டோ, கைகள் கால்கள் துண்டாகியோ இருப்பதை பார்க்கலாம்.
மாற்று மதத்தவர் கூட சிலைகள் மீது இது போல நார்க்கயிறு கட்டி இறுக்கி பந்தல் , தொங்கு சாரம் அமைக்க மாட்டார்கள், மதுரை புது மண்டபத்தின் ஆயிரம் கால் மண்டபத்தில் தையல் தொழிலாளிகள் தைக்கும் உருப்படிகள் சாப்பாட்டு தூக்கு வாளி என சிலைகளின் கைகளில் மாட்டி வைத்திருப்பர், சிலைகளுக்கு உயிர் இருக்குமானால் hemming வேலை கூட தந்திருப்பார்களோ எனத் தோன்றும் .