Standard 2000 (1985- 1988)
சொகுசு கார்கள் இன்றும் இந்தியாவில் தயாரான சொகுசு கார்களில் கண்களுக்கு விருந்தான காராகும்,
இங்கிலாந்து Rover கார் நிறுவனம் 1985 முதல் 1988 ஆம் ஆண்டு வரை வடிவமைத்து தயாரித்த கார், இதனை வடிவமைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கார் வடிவமைப்பாளர் David Bache ஆவார், இவரே Range rover காரையும் வடிவமைத்தவராவார், அதனால் இன்றும் நீங்கள் SUV ஆன Range rover (classic ) வடிவமைப்பிலும் Sedan Muscle car ஆன standard 2000, Rover SD1 இவற்றின் வடிவமைப்பிலும் அதன் ஜாடையில் ஒற்றுமை இருப்பதைப் பார்க்கலாம்.
அன்று இதன் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களில் முப்பது வருட தொலைநோக்கை கொண்டிருந்தது என்றால் மிகையில்லை, ஆனால் rover நிறுவனம் இங்கிலாந்தில் அடுக்கடுக்காக சந்தித்த வேலைநிறுத்தங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தட்டுப்பாடு காரணங்களால் இத்தனை அழகு மிகுந்த கார் மூன்றே வருடங்களில் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரு சேரத் தோல்வி அடைந்தது கண்கூடு.
இதன் Dashboard அத்தனை அழகியது, நிஜ Deep Red Eye Burl மரத்தால் dashboard மற்றும் கதவுகளில் இழைத்து வார்க்கப்பட்டிருந்தது,
இதன் Power Steering ஓட்டுனரின் உயரத்துக்கு ஏற்ப மேலும் கீழும் மாற்றி அமைக்கும் வசதி கொண்டிருந்தது.
இரவில் வாகனம் ஓட்டுகையில் ஸ்பீடாமீட்டர் , fuel gauge உள்ளிட்ட மீட்டர்களின் பின்னணி வெளிச்சத்தை குறைக்கவும் கூட்டவும் இதில் Dimmer இருந்தது.
இதன் Steering இடப்புறம் pull and push , up and down இண்டிகேட்டர்கள், Steering வலப்புறம் wind shield wiper control இருந்தது,மழை மற்றும் குளிர்காலத்தில் rear wind shield கண்ணாடி பனி போர்த்தி உறைவதை தடுக்க பின்னாலும் wind shield wiper இருந்தது.
Jack இட்டு காரை தூக்குவதற்கு சிறப்பு திட்டுகள் கொண்டிருந்துள்ளன,
100 லிட்டர் boot space கொண்டிருந்துள்ளது,
சிகரெட் லைட்டர், சில்லரை காசுக்கான அறை இவற்றை dash board கொண்டிருந்துள்ளது.
மிகப்பெரிய படகுக்கார் போன்ற அகண்ட bucket சீட்களைக் கொண்டிருந்தது, இதன் பின் இருக்கைகளுக்கு நடுவே அகலமான வசதியான உள்ளே தள்ளியும் வெளியே நீட்டவும் முடிந்த அத்தனை பிரமாதமான hand rest இருந்தது.
எல்லா கதவுகளும் autolock , child lock, motorized windows கொண்டிருந்தன.
கார் கதவுகளில் ஏர் கண்டீஷனுக்கான vents இருந்தன, கார் கதவுகளில் ash tray இருந்தன, அத்தனை பிரம்மாண்டமான கதவுகள் அவை, மழை காலத்தில் rear view mirror ஆவி அடிக்காமல் இருக்க கார்கதவில் air vents அதை நோக்கி திருப்பி காய வைக்க முடியுமாறு வசதியைக் கொண்டிருந்துள்ளது இந்த standard 2000, காலத்துக்கு முன்பாக சிந்தித்து நம் வளரும் நாடு என்ற கார் சந்தையை சரிவர புரியாமல் சந்தைப்படுத்தப்பட்ட கார் Standard 2000, மற்றும் Rover SD1
இதன் விலை பெரிய தொழிலதிபர்களும் உச்ச நடிகர்கள் மட்டுமே வாங்க முடிந்ததாக இருந்துள்ளது, on road price தோராயமாக ரூ.2,71,034 (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது இந்திய சந்தையில் மிகவும் விலையுயர்ந்த கார் ஆகும், 1985 ஆம் ஆண்டு இந்துஸ்தான் மோட்டார்ஸின் contesso காரின் on road price 90000₹ இருந்துள்ளது, ஆனால் அதே Luxury segment காரான Standard 2000 விலை மும்மடங்காக இருந்துள்ளதும் இதன் தோல்விக்கான காரணம் .
ஸ்டாண்டர்ட் மோட்டார் புராடக்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட், ஸ்டாண்டர்ட் 2000ஐ இயக்குவதற்கு
2061 சிசி வான்ஸ்ட்ரோக்கின் மாற்றியமைக்கப்பட்ட எஞ்சினை பயன்படுத்தப்பட்டது,
இது 82 பிஎச்பியை உருவாக்கும் குறைந்த Resuscitation unit ஆகும். இதன் விளைவாக மிகவும் குறைவான ஆற்றல் கொண்ட காராக இருந்தது.
இதன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கியர் பாக்ஸ் மிகவும் மோசமானதாக இருந்ததும் பெரும்பாலான புகார்களுக்கு காரணம்.
இது கியர் லீவர் வரை பரவும் அதிர்வுகளை ஓட்டுனர்களுக்கு தந்திருக்கிறது.
இருப்பினும், இந்த கார் அழகியல் ரீதியாக மனதை ஈர்த்த கார்களில் முதன்மையான இடத்தை இன்றும் வகிக்கிறது, இதில் நல்ல ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்தும் tinted glass செய்யாமல் சந்தைப்படுப்பட்டதால் அகண்ட கண்ணாடிகள் குளிர் சாதன வசதியை அதிகம் உறிஞ்சிக் கொண்டன.
இதன் Mac Pherson வகை ஸ்ட்ரட்கள் கொண்ட சஸ்பென்ஷன், பின்புறத்தில் Semi-trawling தந்த நல்ல சாலைப் பிடிப்பு மற்றும் சொகுசான சவாரியை வழங்கியுள்ளது. சந்தையில் இருந்த மிகப்பெரிய இடவசதியுள்ள கார், இது 4-5 பேர் வசதியாக அமரக்கூடியது மற்றும் நீண்ட பயணங்களுக்கு வசதியாக இருந்துள்ளது.
இதன் rear hatchback கதவுகள் ,hydraulic suspension கொண்டிருந்தன,கீழாக பிரம்மாண்டமான boot space ,அதற்கு மேலே சிறார் படுத்து தூங்கும் அளவுக்கான அகண்ட baby bed space இருந்தது,இந்தியாவில் அன்று (இன்றும்) baby special seat கட்டாயம் இல்லை என்கையில் இக்காரில் வெளியூர் பயணிக்கும் குடும்பத்தார் தன் குழந்தைகளை இதில் வசதியாக தூங்க வைத்து அழைத்துச் செல்வதை நான் ஏக்கத்துடன்
பார்த்துள்ளேன்.
மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வரும் மதனை கரூநீல Standard 2000 காரில் அதன் ஓட்டுனர் அழைத்துப் போவார், பெயர் பலகையை பின்னால் hatchback திறந்து வெளியே தெரியும் படி வைத்து விடுவார், வில்லன் ஆட்கள் அவரை வசதியாக பின் தொடர்வர்.
Standard 2000 எரிபொருள் சிக்கனம் இல்லாத காராக இருந்துள்ளது, லிட்டருக்கு வெறும் 5-7 கிமீ தந்துள்ளது,
இந்தியாவில் இதன் பிரதான போட்டிக் காரான காண்டெசா கிளாசிக், சாலைப் போக்குவரத்து, வடிவமைப்பு மற்றும் வழங்கப்பட்ட கூடுதல் அம்சங்களைத் தவிர கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் ஸ்டாண்டர்ட் 2000 ஐ விஞ்சி நின்றதால் Standard 2000 சொகுசு கார் சந்தையில் தோல்வி அடைந்தது.
இதன் தொழில்நுட்ப குறிப்புகள்:
Engine: 2061 cc, 4-cylinder,
Length, Petrol Compression Ratio: 8.0:1 Power (Max): 60.27 KW (82 bhp) @ 4250 rpm
Torque (Max): 147 Nm @2500 rpm Transmission: Four Forward,
A reverse brakes. front, disk; Back, drums
Suspension: Front, independent coil; Rear Wheelbase: 2815mm Length: 4698mm Width: 1768mm Height: 1385mm Ground Clearance: 137mm
Curb weight: 1335 kg
Tire Size: 175 SR 14
Doors: Four + Hatchback Seat Capacity: Five Fuel Tank: 69.5 litres
Load: 450 kg
Fuel consumption: 6-7 kpl
Maximum speed: 145 kmph