டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அருங்காட்சியகம் காந்தி குடும்ப இல்ல வளாகத்தில் அமைந்துள்ளது, அவர்களின் அருங்காட்சியகத்தில் இரண்டு முக்கியமான ஆடைகள் உள்ளன , அவை குருதி நனைத்த ஆடைகள்.
1984 அக்டோபர் 31 இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட அன்று அவர் கட்டியிருந்த குண்டுகள் துளைத்த புடவை மற்றும் 1991 மே 21 ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட அன்று அணித்திருந்து ஆடைகள், பார்க்கையிலேயே கதிகலக்கிவிடும்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்ட்லேப் நிறுவனத்தார் தொன்மை , புராதானம் பேணுவதில் சர்வதேச அரங்கில் விற்பன்னர்கள் , பல ஆண்டுகளாக நைந்தும் பொடிந்தும் உருமாறி வந்த குருதி படிந்த ஆடைகளை தொன்மை மாறாமல் புணரமைத்து மீண்டும் அருங்காட்சியகத்தில் நிறுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தியின் கால்சட்டையை 2010 ஆம் ஆண்டு புணரமைத்துள்ளனர், 2012 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் புடவையைப் புணரமைத்துள்ளனர்
ராஜீவ் காந்தி மரணிக்கையில் அணிந்திருந்த கால்சட்டை மெல்லிய பருத்தி துணி பின்னணி கொண்டு தைத்து அவர் தாயார் படுகொலை செய்யப்பட்ட புல்வெளியை எதிர்நோக்கிய ஜன்னல் மேலே பொருத்தியிருந்தனர், அது பல்வேறு தட்பவெப்ப நிலையால் சிக்குண்டு பழுப்பு வண்ணம் கொண்டு தடித்து பொடிந்து விழத்துவங்கியிருந்ததை பாடுபட்டு சீரமைத்துள்ளனர்.
கவனமாக தூசு மட்டும் அகற்றப்பட்டு ஆடையின் மேற்பரப்பு சுத்தம் செய்யப்பட்டது,இழைகளை கிழியாதபடி உறுதியாக்க வேண்டி ஈரப்பதமூட்டும் செயல்முறை செய்த பிறகு, கால்சட்டை மிகுந்த கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டது,
கால ஓட்டத்தில் கந்தலாக இருந்த ஆடையின் மூல வடிவம் சிதையவும் தொடங்கியிருந்தது, இரண்டு வார காலத்தில் உடையக்கூடிய, தளர்வான நூல் இழைகளை இனி பாதுகாக்கும் வகையில் புதிய lining உன்னிப்பாக கையால் donning செய்து தைக்கப்பட்டுள்ளன.
donning என்ற நுணுக்கமான ஒட்டுத்தையல் பணிகள் முடிந்ததும், அவர் அணிந்திருந்த காலணிகள் மற்றும் காலுறைகளுடன் புணரமைக்கப்பட்ட கால்சட்டை
காட்சிப் பெட்டியில் நிறுவப்பட்டது.
2012 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அணிந்திருந்த கருப்பு நிற தோல் செருப்புகள் மற்றும் சிகப்பு கைத்தறி ஜோல்னா பை மற்றும் வெளிர் ஆரஞ்சு நிற பருத்தி புடவையை புணரமைத்தனர்.
கால மாற்றத்தில் சேதம் ஏற்பட்ட பகுதிகளை நிலைப்படுத்தி, புடவை நைந்து போகாமல் பாதுகாப்பாக விளங்கும் வகையில் புணரமைத்தனர்.
இக் குழு இந்தியா செல்வதற்கு முன், ஆர்ட்லாப்பில் வழக்கத்தில் உள்ள சாய்வு working desk பலகை டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, குறுகிய காலத்தில் அதிக அளவு கை தையல் செய்யப்படுவதால், புணரமைப்பாளர்களுக்கு கழுத்து வலி மற்றும் கண் சோர்வு வராத வண்ணம் உருவாக்கப்பட்ட working desk அது.
இந்திரா காந்தி அணிந்த கடைசிப் புடவை காட்சியில் இருந்து அகற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு தகவல் ஆவணப்படுத்தப்பட்ட பின்னர், புடவையின் 36 குண்டுத் துளையும் வெள்ளைத் துணியால் கவனமாக ஒட்டப்பட்டு, தளர்வான நூல்கள் மற்றும் கிழிசல்களை சீரமைக்க மிக நுண்ணிய பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி கை தையல் நுணுக்கமாக இடப்பட்டுள்ளது.
இந்த donning நூலுக்கு வெள்ளை நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, குண்டுத் துளைகள் விரிவடையாமல் காப்பாற்றப்பட்டன,
இலகுரக அலுமினிய தேன்கூடு பேனல்களால் செய்யப்பட்ட backing board பின்னணியில் வெள்ளை பருத்தி துணியால் சுற்றி வார்த்து மூடி,புணரமைக்கப்பட்ட புடவை பலகையில் வைக்கப்பட்டு, புடவையில் நேர்த்தியாக மடிப்புகளை செய்து கூர்மையான மடிப்புகளை குறைக்க ஒவ்வொரு மடிப்பின் உள்ளும் backer rod புகுத்தி நனினமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திரா காந்தியின் புடவை மற்றும் ராஜீவ் காந்தியின் கால்சட்டை இந்திரா காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நிரந்தரக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.